திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தமிழக ஆளுநர் தரிசனம்!

governor in srivilliputhur - 2026
#image_title

திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் உள்ள கல்லூரிகளின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்துள்ளார். நேற்றிரவு ராஜபாளையத்தில் ராம்கோ விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த ஆளுநர், இன்று காலை திருவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்தார்.

governor in srivilliputhur2 - 2026
#image_title

ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தை தொட்டு வணங்கிவிட்டு கோவிலுக்குள் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி இருவரும் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளை தரிசனம் செய்தனர். ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

governor in srivilliputhur1 - 2026
#image_title

பின்னர் கோவில் யானை ஜெயமால்யதாவிற்கு, ஆளுநர் பழங்கள் வழங்கி ஆசி பெற்றார். முன்னதாக ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த ஆளுநரை மணவாளமாமுனிகள் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜர் வரவேற்றார்.

ஸ்ரீஆண்டாள் கோவிலில் தரிசனம் முடித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜபாளையம் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராஜபாளையம் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் வருகையை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் – ராஜபாளையம் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories