செல்போன் சார்ஜ் செய்தபோது விபரீதம் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

நெல்லை

Electric Shock நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முப்பிடாதி மகன் இசக்கிபாண்டி (வயது14). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இரவு இசக்கிபாண்டி வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் போட்டான். அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜர் பிளக்கில் அவனது கைபட்டு மின்சாரம் தாக்கியது. தூக்கிவீசப்பட்டான். ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இசக்கிபாண்டி பரிதாபமாக இறந்தான். இதுபற்றி முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.