பாவூர் சத்திரம் அருகேயுள்ள பாரளுமன்ற உறுப்பினரின் லட்சிய கிராமமான பெத்தநாடார்பட்டியில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராதா முன்னிலை வகித்தார் ,வேளாண்மை உதவி இயக்குநர். நல்லமுத்துராஜா வரவேற்புரையாற்றினார் விழாவில் வேளாண்மை இணை இயக்குநர் பெருமாள் விவசாயிகளுக்கு மண்வள அட்டையினை வழங்கி பேசினார் அவர் பேசுகையில் விவாசாயத்தின் அவசியம் குறித்தும் ,மண்வளத்தை பரிசோதிப்பதின் மூலம் மண்ணின் உள்ள தரத்திற்க்கேற்ப்ப என்னென்ன பயிர்கள் பயிரிடலாம் ,தேவையான ஊட்டசத்துக்கள் என்னென்ன என்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார் .விழாவில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்
பெத்தநாடார்பட்டியில் மண்வள தினம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

