செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணி புரியும் டாக்டர் ராஜேஷ் கண்ணா இந்த வருடத்தில் டாக்டர் பி.சி.ராய் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டார்.
அவருக்கு இன்று சென்னையில் நடந்த சிறந்த மருத்துவர்கள் பாராட்டு விழாவில் அவருடைய சேவையைப் பாராட்டி, டாக்டர் பி.சி.ராய் விருதை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கி கௌரவித்தார். சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும், செங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் கலா ராஜுவின் சேவையைப் பாராட்டி சிறந்த மருத்துவர் விருதினை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.





