திருச்சியின் பிரபல மருத்துவர் மரணம்..

Published:

FB IMG 1675007332115 - 2026

திருச்சியின் பிரபல மருத்துவரும்,
மூத்த ஸ்வயம்சேவக்,
முன்னாள் நகர் சங்கசாலக்
விசுவ ஹிந்து சேவா சமிதியின் அறங்காவலர், க்ஷேத்ர கார்யவாஹ் மானனீய  எஸ்.ராஜேந்திரனின்  மூத்த சகோதரரும்,திருச்சி  மாவட்டம், முசிறி வட்டம், தண்டலை புத்தூர் கிராமம் சுப்பு ரெட்டியார் மகன் டாக்டர். வேல்முருகன்   ஞாயிற்றுக்கிழமை தனது82 வயதில் மரணமடைந்தார். 

அன்னாரது இறுதி காரியம் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மாம்பழச்சாலை அம்மா மண்டபம் சாலை அவருடைய வீட்டில் இருந்து  நடைபெறும்.

மறைந்த மருத்துவர் எஸ். வேல்முருகன்  திருச்சி மாவட்டம் தண்டலை புத்தூர் கிராமத்தில் சுப்புரெட்டியார் பொன்னம்மாள் தம்பதிக்கு 1941 ஆம் ஆண்டு பிறந்தவர்.இவர் தன் கடின உழைப்பால் மருத்துவராக பயின்று பின் மும்பையில் மருத்துவ மேற்படிப்பையும் முடித்து திருச்சியில் சொந்தமாக ஸ்ரீ அகிலா மருத்துவமனையை நிறுவினார். அது முதல் திருச்சி நகருக்கு பல நவீன மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்ந்தார்.

சிறுநீரக நோய்கள் டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இரத்த புற்று நோய்க்கான இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதற்கான  சிகிச்சை போன்ற நவீன சிகிச்சைகளை திருச்சி நகருக்கு அறிமுகப்படுத்திய பெருமை டாக்டர்  எஸ். வேல்முருகனையே  சேரும்.

இது மட்டுமன்றி இதய நோயால் அவதிப்படுபவருக்கு அறுவை இல்லாத இதய சிகிச்சை ,வெளிப்புற எதிர் துடிப்பு சிகிச்சை முறையை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து வந்த இவர் திருச்சியின் பிரபலமான காவேரி மகளிர் கலைக் கல்லூரியின் நிறுவன அறங்காவலர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு சொந்தமான நிலத்தை திருச்சியில் உள்ள ராஷ்ட்ரியம் சுயம் சேவக் அமைப்பிற்கு(ஆர்எஸ்எஸ்) கட்டிடம் கட்ட இலவசமாக வழங்கியவர்.

மேலும் சமூகத் தொண்டாக பல்வேறு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் பல்வேறு இலவச மருத்துவ முகாம்களை நடத்தியும் சிறந்த சேவை செய்து திருச்சி  மாநகர மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் என திருச்சி மாவட்டத்தில் பலரும் கூறுகின்றனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img