
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ஆத்மநாத சுவாமி கோவில் நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் உள்ள நடராஜர் சன்னதியில் வருடத்திற்கு ஆறு முறை சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்
அதன்படி திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான ஆவுடையார் கோயில் ஆத்மநாத சுவாமி கோவிலில்சித்திரை மாதம் பிறந்த பிறகு முதல் அபிஷேகமாக சித்திரை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு ஆவுடையார் கோயில் ஆத்மநாத சுவாமி கோயிலில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது
நடராஜருக்கு பால், தயிர், இளநீர் , பன்னிர் சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்து அதனை தொடர்ந்து மாலை சாற்றி தீப ஆராதனை நடந்தது வழிபாடு ஏற்பாடுகளை திருவாவடுதுறை 24-வது குரு மகா சன்னிதானம் அம்பலமான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளானை படி மாணிக்க குருக்கள் செய்தார்
வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது