25 அடி உயர மாம்பழ தேரோட்டம்

Published:

ponnamaravathi ther - 2026

பொன்னமராவதி உடையபிராட்டிஅம்மன் கோவில் 25அடி உயர மாம்பழ தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் மாம்பழ தேரோட்டம் வருடாவருடம் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த வருடமும் தேரோட்டம் நடைபெற்றது.இதில் 25 அடி உயர தேரானது அம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது.தேர் வரும் வழியெங்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக தேரின் மீது மாம்பழங்களை சூறைவீசினர்.

சூறையாடிய மாம்பழங்களை பக்தர் பக்தியுடன் எடுத்துச்சென்றனர்.இவ்வாறாக முக்கிய ‌வீதிகள்‌வழியாக மாம்பழ சூறையுடன் சென்றதேர் நிலைக்கு வந்தடைந்தது.

இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

பொன்னமராவதி காவல் ஆய்வாளர் #கருணாகரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related articles

Recent articles

spot_img