சித்தாந்தச் சிலந்திவலையில்
சிக்கிக்கொண்ட பூச்சி நான்!
இத்துப்போன வலை இதுவென்றால்
தப்பிப்போகத் தடை ஏதுமில்லை!
சித்தாந்தச்சிலந்தி இந்தப்பூச்சியை
சிறிதுசிறிதாய் சீரணித்துவிட்டால்…
பூச்சியின் மோட்சம் அதுதான்!
அதுதான்!
முக்தி நிலை, மோன நிலை
எல்லாமும் அதுதான்!