வேலை (செயல்) திட்டம்?!

உங்க மாநிலத்துலயும் நீங்க ஒழுங்கா நூறுநாள் வேலைத்திட்டத்தை பின்பற்றலையாமே!
அய்யய்யோ அப்டி முறைச்சிப் பாக்காதீங்க… பயம்மா இருக்கு… இது எதிர்க்கட்சி ஆட்சி செய்யிற குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம் இல்லேங்க… நம்ம கட்சி ஆட்சி செய்யிற ஆந்திரமுங்க….
அது எனக்கு தெரியுது! ஆனா மாயாவதிக்கு அனுப்பினா மாதிரி உங்களுக்கும் கடிதம்லாம் போட்டாதான் சரியாவரும்னு நெனக்கிறேன்…
என்னங்க இப்படி சொல்றீங்க? இங்க ஒழுங்கா வேலையே செய்ய முடியலே… இதுல நீங்க வேற….
அதான் சொல்லுறேன்… நூறு நாள் வேலைத் திட்டத்தாலதான் கூலிக்கு ஆள் கிடைக்க மாட்டேங்கிறாங்கன்னு தமிழ்நாடு மாதிரி மாநிலங்கள்ல புகார் சொல்லுறாங்க… நீங்க மட்டும் இந்த திட்டத்தை சரியா செஞ்சிருந்தீங்கன்னா…. தெலங்கானா மாதிரி பிரச்னை வருமா? கொடி பிடிக்க கோஷம் போட சாலைமறியல் போராட்டத்துக்கு ஆள் தேறுமா? யோசிச்சிப் பாருங்க. அதான் சொல்றேன் நீங்களும் நூறு நாள் வேலைத்திட்டத்துல முறைகேடு செஞ்சிருக்கீங்க…