சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடிஅமாவாசை திருவிழா 31ம் தேதி நடைபெறுகிறது.

Published:

sorimuthu 1 - 2026

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில் இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாக கருத்தப்பட்டு வருகிறது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாசவாசை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்

அதேபோல் இந்த ஆண்டும் வரும் ஜீலை 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன் தலைமை தாங்கி பேசினார்.

28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.sorimuthu 2 - 2026

அப்போது அவர் பேசியதாவது:-

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி தனியார் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கூட்டத்தின் நிலைமையை பொறுத்து 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதலே அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்படும்.

கூட்டம் குறைவாக இருந்தால் மட்டும் அன்று வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

ஆனால் 29-ந் தேதியிலிருந்து 1-ந் தேதி வரை வாகனங்கள் அனைத்தும் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்படும்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

அங்கிருந்து அரசு பஸ்கள் மூலம் தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

கோவிலுக்கு நேர்த்தி கடனுக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, பாத்திரம் உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் இல்லாமல் அரசு பஸ்களில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

sorimuthu 3 - 2026

பக்தர்களின் வசதிக்காக அகஸ்பட்டியிலிருந்து நூற்றுக்கணக்கான அரசு பஸ்கள் இயக்கப்படும்.

பாதுகாப்பு பணிக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் இருப்பார்கள். பொதுமக்களின் உதவிக்காக தீயணைப்பு துறையினர் படகுடன் ஆற்று படுகையில் இருப்பார்கள்.

பாதுகாப்பான இடங்களில் மட்டுமே பக்தர்கள் குளிக்க வேண்டும்.

தடைசெய்யப்பட்ட பகுதியில் குளிக்க செல்லக் கூடாது. கூட்டத்தில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் தென்பட்டால் உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆடி அமாவாசை அன்று மட்டும் இருசக்கர வாகனங்கள் பாபநாசம் வரையும் செல்ல அனுமதி வழங்கப்படும்.

Related articles

Recent articles

spot_img