இஸ்ரோவின் ‘நிலாப் பெண்கள்’!

இந்திய மகளிரின் புகழ் விண்வெளிக்கு பரவியிருப்பதை உலக மகளிர் மிக மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!

இஸ்ரோவின் நிலாப் பெண்களின் கூட்டு உழைப்பில், நிலாவுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 2 வெற்றிகரமாக தனது பயணத்தை மேற்கொண்டிருக்கிறது.

இந்த இஸ்ரோவில் மகளிரின் பங்களிப்பும் மிக மிக அதிகம்.! திறமை அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படும் இடம் இஸ்ரோ!

இஸ்ரோ என்பதும் டி.ஆர்.டி.ஓ என்பதும் ஒன்றோடொன்று ஒட்டிய துறைகள்! இந்திய விண்வெளித் துறையில் முதலில் கவனிக்கப் பட்ட பெண்மணி டெய்சி தாமஸ், கேரளத்துக்காரர்.

அப்துல் கலாமுக்கு பின்னரான காலங்களில் டெய்சிதாமஸ் தலமையிலே ஏவுகணை திட்டங்கள் இயங்கின. அக்னி ஏவுகணைகள் மேம்படுத்துதலில் அவர் பங்கு உண்டு.. அவரது பயணத்தை அடியொற்றி… தொடர்ச்சியாக பல பெண்கள் இஸ்ரோவுக்கு சாதிக்க வந்து… இன்று சாதித்திருக்கின்றனர்!

அவர்களில் வனிதா முத்தையா, ரிது காரிடல் எனும் இரு பெண்மனிகள் முக்கியமானவர்கள்!

மிக மிக சிக்கலான ராக்கெட் தொழில்நுட்பத்தில் இரு பெண்கள் தலைமையில் ஒரு திட்டம் நிறைவேற்றபடுவது சாதாரண விஷயம் அல்ல! சந்திரயான் -2ன் மிக முக்கியப் பொறுப்பினை இவர்கள்தான் செய்தார்கள்! அதன் முழுக் கட்டுபாடும் இவர்கள் இருவரிடமே உண்டு! நிச்சயம் இந்திய மகளிர் எல்லாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இது!

முறையாகப் படித்து, கற்றபடி உழைத்து, இன்று கௌரவம் பெற்றிருக்கின்றனர். ஆணுக்கு பெண் சரிக்கு சரியாக நிற்க முடியும் என எதில் காட்ட வேண்டுமோ அந்த இடத்தில் மிகச் சரியாகக் காட்டி… சாதித்திருக்கின்றார்கள்!

பெண் விடுதலை என்பதும், பெண் சமத்துவம், முன்னேற்றம் என்பதும் இதுதான், இதுவேதான்! தகுதியும் திறமையும் இருக்கும் பெண்களுக்கு இந்த நாடு தலைமைப் பதவியும் கொடுத்து அழகு பார்க்கும்! இன்று உலகமே திரும்பிப் பார்க்க… சாதித்திருக்கும் மங்கையர் குல திலகங்களான வனிதா முத்தையாவினையும், ரிதுவினையும் பாரதம் வணங்கி வாழ்த்துகின்றது!

உலகமே அந்த விண்வெளி மங்கையரை கைத் தட்டி உற்சாகப் படுத்துகின்றது! எந்த நாட்டிலும் இல்லாதபடி முதல் முறையாக இரு மங்கையர் மூலம் சிக்கலான செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்தி பாரதம் மாபெரும் வழியினை உலகுக்கு காட்டியிருக்கின்றது.

இந்திய மகளிரின் புகழ் விண்வெளிக்கு பரவியிருப்பதை உலக மகளிர் மிக மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...