செகந்தராபாதின் வரலாற்றுச் சிறப்பு மிக்க “உஜ்ஜயினி மகாகாளி” அம்மனின் “போனாலு ஜாத்திரை” ஞாயிற்றுக் கிழமை நேற்று ஆரம்பமானது. முதல்வர் கேசிஆர் அம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து பூஜைகளில் பங்கேற்றார்.
அதற்கு முன்பு விடியற்காலை நான்கு மணிக்கு ஸ்ரீநிவாஸ் யாதவ் குடும்பத்துடன் வந்து அம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தார். ஞாயிறு, திங்கள் கிழமைகளில் நடக்கும்’ போனாலு’ கொண்டாட்டங்களுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து உள்ளார்கள்.
ஞாயிறு காலை முதலே பக்தர்கள் தரிசனத்திற்கு பெரிய அளவில் திரண்டு வர தொடங்கினார். அமைச்சர் ஸ்ரீனிவாச கௌட், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, பிஜேபி எம் எல் ஸி ராமச்சந்திர ராவு, மேதகக் எம்எல்ஏ பத்மாதேவேந்தர் ரெட்டி ஆகியோர் அம்மனை தரிசித்தனர் .
போனாலு ஜாத்திரைக்கு போலீஸார் 2,000 பேர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறார்கள். அம்மனுக்கு காய்கறி, பலகார வண்டிகள் ஊர்வலம், போத்தராஜு நாட்டியம், அம்பாரி ஊர்வலம், பலி சட்டி போன்ற முக்கிய கொண்டாட்டங்கள் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றன.
சென்ற வருடம் 20 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் மகா காளி அம்மனை வந்து தரிசித்து வழிபட்டு சென்றனர். இந்த ஆண்டு அது 25 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.