ஆடை படம் குறித்த விவாதத்துக்கு அமலாபால் ரெடியா என்று கேட்டுள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் ஆடை படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். கடந்த 20ஆம் தேதி வெளியான இந்தப் படம் கலந்து கட்டிய அளவில் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
பலரும், ஆடையின்றி இல்லாவிட்டாலும், அப்படித் தோன்றும் வகையில் நடித்த அமலாபாலின் துணிச்சலான நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஆடை படம் குறித்த ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? என்று அமலாபால் மற்றும் படத்தின் இயக்குநருக்கு தனது டிவிட்டர் பதிவில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட கருத்தில்… ஆடை படக் குழுவினருக்கு வாழ்த்துகள். படம் பார்க்கும்போது அமலாபாலின் கடின உழைப்பு படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? உங்களிடமும் படத்தின் இயக்குநரிடமும் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. இயக்குநராகவும் நடிகையுமாகவும் அல்ல… ஒரு சாதாரண பெண்ணாகவும், தாயாகவும் ஒரு பார்வையாளராகவும்…” என்று அதில் கூறியுள்ளார். அவரது டிவிட்டில் அப்படி என்ன கேள்வி கேட்டு விடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் பலரும் அதற்கு பின்னூட்டம் இட்டிருந்தனர்.
லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி
.@Amala_ams hi dear, congrats on #Aadai , watched the film, your hard work shows on every frame???? are you open to healthy debate? I have a few questions to you & the director:) just as an audience, a woman and a mother of Girls, not as a film maker / actor ????
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 21, 2019
.@ramyavj watched #Aadai congrats on an amazing performance, though short , I was v impressed with your performance , you did your part really well????esp the shot where you realise #Kamini is behind the mishap and also the conversation in dressing room????
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 21, 2019
அவரது டிவிட்டருக்கு ஒருவர் தனது பின்னூட்டத்தில்… இதை நீங்கள் ஏன் டிவிட்டரில் கேட்க வேண்டும்?! நேரடியாக போன் செய்தே கேட்டிருக்கலாமே! என்று பதிலிட்டிருக்கிறார்.
அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன், சிலவிஷயங்களை நாம் பொதுவில் விவாதித்தால் தான் சமூகத்துக்குப் பயன்படும். ஆடை படம் பொது விவாதத்துக்குரியது என்று பதில் அளித்திருக்கிறார்.