அதிமுக வேட்பாளராக தென்னரசுவை ஓபிஎஸ் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா?..

thennarasu 3 - 2026

அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா? பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்  இன்று இரவு இதற்கான விடை தெரிந்துவிடும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு என்றும், அவருக்கு ஆதரவு தெரிவித்து பொதுக் குழு உறுப்பினா்கள் இன்று இரவுக்குள் கடிதம் அளிக்க வேண்டும் என்றும் அக் கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் சனிக்கிழமை அறிவித்திருந்தார்.

அதிமுகவில் பிரிந்து செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளா்களை அறிவித்து செயல்பட்டு வந்தனா்.இந்நிலையில், இடைத்தோ்தல் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு மீது சனிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் வேட்பாளரை பொதுக் குழு மூலம் தோ்வு செய்ய வேண்டும். பொதுக் குழுவை உடனே கூட்ட முடியாவிட்டால், உறுப்பினா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அதன்மூலம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த முடிவை அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் மூலம் தோ்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் இருவருமே ஏற்றுக்கொண்டனா். அதைத் தொடா்ந்து, அவைத் தலைவரான தமிழ்மகன் உசேன், உச்சநீதிமன்றம் ஆணையின்படி, அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ். தென்னரசு. அதற்கு ஒப்புதல் பெற பொதுக் குழு உறுப்பினா்கள் 2665 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சுற்றறிக்கையை முறையாக பூா்த்தி செய்து, இன்று இரவு 7 மணிக்குள் சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமைக் கழகமான எம்ஜிஆா் மாளிகையில் சோ்த்துவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

இதனிடையே இரட்டை இலை சின்னத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்கப் போவதாகவும், இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்மீது பற்று கொண்ட தொண்டா்களும், என் மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்களும் பாடுபடுவோம் என்று ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை கூறியுள்ளாா்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற பதிலை அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ். தென்னரசு. அதற்கு ஒப்புதல் பெற பொதுக் குழு உறுப்பினா்கள் 2665 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

தங்கள் தரப்பும் எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்மொழிந்துள்ள அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற பதிலை இன்று மாலை 7 மணிக்குள் அளிக்குமாறும்,  தென்னரசுவை ஆதரிக்க சம்மதம் எனில் ஒப்புதல் அளிக்கிறேன் எனவும், இல்லையெனில், மாற்று வேட்பாளர் பெயரை வாக்குச் சீட்டில் குறிப்பிட வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. 

அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
அதிமுக அதிகாரபூா்வ வேட்பாளராக தென்னரசுவை ஓபிஎஸ் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா?
என்று பலரும் ஆருடம் பார்க்கும் நிலையில் இதற்கு விடை இன்று  இரவு 7 மணிக்குள் தெரிந்துவிடும்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories