தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அண்ணாமலை

annamalai2.jpeg - 2026

தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எந்தெந்த மசோதாக்கள் கவர்னரிடம் நிலுவையில் உள்ளன என்பது குறித்து அண்ணாமலை விளக்கி உள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்குவதில் தி.மு.க.வின் பங்கு என்னென்ன என்பதை பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. பேசியிருக்கிறார். உண்மையில் தி.மு.க.வின் பங்கு என்னென்ன என்று பார்ப்போம். சமீபத்தில் புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. அமைச்சர் ஒருவர் பொது மேடையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பிரதிநிதி ஒருவரை சாதி பெயரைக்கூறி இழிவுபடுத்தியதைக் கண்டோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது கொடிகளை ஏற்றவிடாமல் தடுப்பது, தி.மு.க. ஆட்சியில் தொடர்கதை ஆகியிருக்கிறது. 20 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துவதாகக் கனிமொழி கூறியிருக்கிறார்.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஆனால், 15 மசோதாக்கள் தான் நிலுவையில் உள்ளன. தமிழக முதலமைச்சர் தன்னைத்தானே பல்கலைக்கழக வேந்தராக நியமித்த 12 மசோதாக்கள், அரசாங்கத்திற்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தம் தொடர்பான ஒரு மசோதா, எந்தவொரு தனியார் கல்லூரியையும் கையகப்படுத்த விரும்பும் தமிழக அரசாங்கத்தின் விதியை திருத்தும் ஒரு மசோதா, ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான மசோதா என 15 மசோதாக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி கனிமொழி குறிப்பிடுகிறார்.

ஆனால் அவரது கட்சியோ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்த தி.மு.க,.அதை மறந்து விட்டது. தமிழக அரசில், இளைஞர்களுக்கு 5½ லட்சம் வேலை வழங்குவதாக தி.மு.க. அளித்த வாக்குறுதி பற்றி எந்த செய்தியும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி, நமது நாட்டின் இளைஞர்களுக்கு மத்திய அரசில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே 2 லட்சத்து 17 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைக்கான ஆணையை வழங்கியுள்ளார். சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு என்ற தி.மு.க. எம்.பிக்களின் வழக்கமான திசை திருப்பும் உரைகளை விட்டு விட முடியாது.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

தி.மு.க., ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த காலமான 2006– 2014-ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ரூ.675.36 கோடியும், தமிழுக்கு ரூ.75.05 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஏன் இந்த வித்தியாசம் என்பதை தி.மு.க. விளக்க வேண்டும். தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கனிமொழி கூறியிருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் ஒதுக்கப்பட்டதை 2023-24-ம் நிதியாண்டில், தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 30 ஆயிரத்து 961 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories