February 9, 2025, 12:58 PM
29.8 C
Chennai

அப்பாவிகளைக் கைது செய்ய பேஸ்புக்கை மேய்ந்து கொண்டு, வேலையில் கோட்டை விடும் திமுக., போலீஸ்!

ஜாமினில் வந்த 75 வங்கதேசத்தவர் எங்கே? விழி பிதுங்கும் தமிழக போலீஸ் – என வெளியான செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழக பாஜக., மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை தன் கோபத்தையும் வருத்தத்தையும் சமூகத் தளத்தில் அறிக்கையாக வெளியிட்டார். தொடர்ந்து பலரும் சமூகத் தளங்களில் தமிழக அரசின் மதவெறி போலி ஓட்டு வங்கிக் கொள்கையைக் கண்டித்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

போலி ஆதார் அட்டை, போலி பணி அடையாள அட்டை வைத்துக் கொண்டு சென்னை புறநகர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பெருந்துறை போன்ற இடங்களில் பணியில் இருந்த வங்கதேசத்தினரையே போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேறு நாட்டுக்கு சென்று விட்டனரா, அல்லது தமிழகத்திலேயே வேறு ஊர்களில் பதுங்கி உள்ளனரா என்று தெரியாமல் தவிக்கிறது தமிழக போலீஸ்.

இதற்கிடையில், ‘வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து, குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைக்கு வழக்கு விசாரணையின் போது ஜாமின் கிடைத்தாலும், வழக்கு முடியும் வரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பக்கூடாது. இந்தியாவில் அவர்களுக்கு என அமைக்கப்பட்டுள்ள, சிறப்பு முகாம்களில் தங்க வைத்து கண்காணிக்க வேண்டும்’ என, கடந்த, 6ல் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியான செய்தி:

போலி ஆதாரங்களுடன் தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் மாநிலம் முழுதும் வரிசையாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டில், 175 பேர், உள்ளூர் போலீஸ் மற்றும், ‘கியூ’ பிரிவு போலீசாரால் இப்படி கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பலரும் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியே வந்தனர். வந்தவர்களில் பலரை தற்போது காணவில்லை; எங்கிருக்கின்றனர் என்று தெரியாமல், போலீஸ் விழிக்கிறது. 75 பேர் காணாமல் போனதாக ஓர் அதிகாரி கணக்கு சொன்னார்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பிரஜை, கிரிமினல் குற்றம் இழைத்தால், அவரை கைது செய்து சிறையில் வைப்பர். வழக்கு விசாரணை நடக்கும் போதே, நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்து, சம்பந்தப்பட்ட நபர் வெளியில் வருவார். அப்படி வருபவரை, வெளிநாட்டு குற்றவாளிகளை அடைப்பதற்கென்றே, வருவாய்த்துறையால் உருவாக்கி நிர்வகிக்கப்படும், திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்வர். வழக்கு முடியும் வரை, அங்குதான் இருக்க வேண்டும்.

திருச்சி முகாமில் அடைப்பதற்கு, விசாரணை அதிகாரி, ‘கியூ’ பிரிவு அல்லது வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் வாயிலாக தமிழக பொதுத்துறைக்கு கடிதம் எழுத வேண்டும். அதை வைத்து, அரசு ஒவ்வொரு கைதிக்கும் தனி அரசாணை வெளியிட வேண்டும். இதுதான் நடைமுறை. 

வங்கதேசத்தவர் விஷயத்தில், இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. புழல் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், வரிசையாக ஜாமினில் வெளிவந்து, எங்கெங்கோ சென்று விட்டனர். நீதிமன்ற விசாரணைக்கு வராமல் போகும் போதுதான், போலீசுக்கு தெரிந்து தேடத் துவங்குகின்றனர். 

நாடு பூராவும் வங்கதேசத்தினரை தேடித்தேடி பிடிப்பதால், அவர்கள் வேறு மாநிலத்துக்கு போயிருக்க முடியாது. மியான்மருக்கு சென்றிருக்கலாம் என போலீஸ் சந்தேகப்படுகிறது.

#image_title

அண்ணாமலை கண்டனம்!

நாடக மாடல் திமுக அரசு – எதையும் அறியாதது, சோம்பல் நிறைந்தது, அதிகாரத்துவ அலட்சியத்தின் சின்னம். தமிழ்நாட்டில் இந்த அரசாங்கத்தின் கீழ் உள்ள முழு காவல்துறையும் எதிர்க்கட்சிகளின் சமூக ஊடக நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை மிரட்டுவதற்கும், சுவரொட்டியில் செருப்பை வீசிய வயதான பெண்களைக் கைது செய்வதற்கும், ஒவ்வொரு வகையான போராட்டத்தையும் அடக்குவதற்கும், நமது மக்களைப் பாதுகாப்பது என்ற அதன் உண்மையான பங்கை மறந்துவிடுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. 

இருப்பினும், குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிகிறார்கள், இன்று காவல் துறை திமுகவின் கைப்பாவைகளைப் போல செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தமிழ்நாடு இன்று சாதாரண மக்களுக்கு ஒரு காவல் மாநிலமாகவும், குற்றவாளிகளுக்கு ஒரு புகலிடமாகவும் உள்ளது.

ஜாமீனில் வெளிவந்த 75க்கும் மேற்பட்ட சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் தங்கள் குற்றங்களுக்காக விசாரணையை எதிர்கொள்வதற்கு அல்லது நாடு கடத்தப்படுவதற்கு முன்பு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் இந்த சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர்கள் இருக்கும் இடம் குறித்து தமிழக காவல்துறைக்கு எந்த துப்பும் இல்லை. இந்த திமுக அரசாங்கத்தின் கீழ் உள்ள மாநில காவல் துறை இதை எவ்வாறு அனுமதித்தது?

திமுக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சில கேள்விகளை எழுப்புகின்றன:

இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா?

வங்கதேசத்தில் இருந்து செயல்படும் அல்-கொய்தா, சட்டவிரோத வங்கதேச நாட்டினரை இந்தியாவிற்குள் நுழைத்து இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பது திமுக அரசுக்குத் தெரியாதா?

காணாமல் போன சட்டவிரோத வங்கதேச நாட்டினரைக் கண்டறிந்து கைது செய்வதற்கான திமுக அரசின் திட்டம் என்ன?

மத்திய அரசு வழங்கிய உளவுத்துறை தகவலின் பேரில், தமிழக காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கடந்த மாதம் திருப்பூரில் 30க்கும் மேற்பட்ட சட்டவிரோத வங்கதேச நாட்டினரைக் கைது செய்தது. அவர்களை திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பீர்களா அல்லது காணாமல் போக அனுமதிப்பீர்களா? – என்று கேள்வி எழுப்பியுள்ளார் கு.அண்ணாமலை.

காணவில்லை, காணவில்லை!

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு குடிபெயர்ந்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்பு பிணையில் விடுதலையான 75 வங்கதேசக் குற்றவாளிகள் எங்கே சென்றார்கள், என்ன ஆனார்கள் என யாருக்காவது தெரியுமா? அவர்களைக் கண்காணிக்க வேண்டிய காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை, காவல்துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் தமிழக முதல்வர் @mkstalin-க்கும் அதைப்பற்றிக் கவலையில்லை.

போலி ஆதாரங்களுடன் இந்தியாவில் தஞ்சமடையும் வெளிநாட்டுக் குற்றவாளிகளுக்கு பிணை ஆணை வழங்கப்பட்டாலும், வழக்கு முடியும் வரை அவர்களை சிறப்பு முகாம்களில் வைத்து கண்காணிக்க வேண்டுமென உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட, வங்கதேச குற்றவாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தத் தவறியது ஏன் முதல்வரே? நீதித்துறையை நீங்கள் மதிக்கும் லட்சணம் இதுதானா?

நமது தேசிய புலனாய்வு முகமையானது(NIA) தமிழகம் முழுவதும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களைத் தேடித் தேடி கைது செய்து வரும் நிலையில், காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எங்கோ பதுங்கியிருக்கும் அக்குற்றவாளிகளால் தமிழக மக்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் பங்கம் விளையுமாயின் அதற்கான முழு பொறுப்பையும் நீங்கள் தான் ஏற்க வேண்டும் முதல்வரே. ஜாக்கிரதை!

— பேஸ்புக் சமூகத் தளத்தில் ஒரு கருத்து

உள்நாட்டு பாதுகாப்பில் கோட்டை விடும் தமிழக காவல்துறை… கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வங்கதேச நாட்டைச் சேர்ந்த சுமார் 75 கைதிகளை சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே விட்டனர்..

வெளிநாட்டுக்காரர்கள் சட்ட விரோதமாக இந்தியாவுக்கு வந்து குற்றம் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்கள் தங்கள நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வரை அவர்கள் ஜாமினில் வெளிய வந்தாலும் அவர்களை திருச்சியில் உள்ள ஒரு சிறப்பு முகாமில் அடைத்து பாதுகாக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு..

இந்நிலையில் புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த அந்த 75 வங்கதேச கைதிகளையும் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து இருக்க வேண்டும். ஆனால் தமிழக காவல்துறை பேஸ்புக்கில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்யும் பாஜக., ஆதரவாளர்களான சின்ன பையன்களை பிடித்து குண்டர் சட்டத்தில் அடைப்பதற்காக பேஸ்புக் பதிவுகளை படித்துக் கொண்டிருப்பதால், வெளிநாட்டு கைதிகளை என்ன செய்ய வேண்டும் எனும் விதியை படிக்க அவர்களுக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. எனவே கவனிக்காமல் விட்டு விட்டார்கள்.

வங்கதேச கைதிகள் 75 பேரும் ஜாலியாக எஸ்கேப் ஆகி விட்டார்கள், இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது… வலை வீசி தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு இந்தியாவில் நிரந்தர இருப்பிடம் கிடையாது.

இதில் உச்சகட்ட காமெடி என்னவென்றால் அதில் சிலர் வங்கதேசத்தில் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு இந்தியா தப்பித்து வந்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் வங்கதேச நாடு அந்த 75 பேரையும் திருப்பி அனுப்பச் சொல்வார்கள். அப்போது இந்த 75 பேருக்கு தமிழக காவல்துறை என்ன பதில் சொல்லப் போகிறது என்று தெரியவில்லை?

தமிழக காவல்துறை திமுக., அரசியல்வாதிகளை காப்பாற்றுவதிலேயே தங்களுடைய முழு ஆற்றலையும் செலவு செய்வதால் உள்நாட்டு பாதுகாப்பு போன்ற அதி முக்கிய துறைகளில் கூட கோட்டை விடுகிறார்கள்…!

— பேஸ்புக் சமூகத் தளத்தில்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா!

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!

Topics

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா!

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories