
காஞ்சீபுரம் அத்திவரதர் கோயிலில் ஆகம விதிகளை மீறி பன்னெடுங்கால பழமையான கட்டிடங்களை இடித்து அட்டூழியம் நடப்பதாகவும் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ள அறநிலையத்துறை தக்க நடவடிக்கை இல்லையெனில் அறப்போராட்டம் தொடங்கும் என்றும் இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
400 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற அத்திவரதர் புகழ்
காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி பெருமாள் கோவில் உலகப் புகழ்பெற்றது.
அத்தையை பெருமைமிகு திருக்கோவிலில் HR&CE துறையின் சட்டவிரோத நிர்வாகம், கோயில் கட்டமைப்புகளை அழித்தல் , பக்தர்களின் உரிமைகளை மீறுதல் மற்றும் ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன.
- உயர் நீதிமன்றத்தின் ‘Status Quo’ உத்தரவை மீறி, அறநிலையத்துறை ஊழியர் ‘செயல் அதிகாரியாக’ சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறார்.
- ஆகமம் மற்றும் கட்டமைப்பு விதிகளுக்கு முரணாக, அபாயகரமான சாய்தளம் கட்டப்பட்டு, வரலாற்று சிறப்புமிக்க சாளரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
- ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மை மிக்க கோவிலின் பணிகளுக்கு இந்திய தொல்பொருள் துறையின் (ASI) ஒப்புதல் பெறவில்லை. அவர்களது வழிகாட்டுதல் இல்லாமல் சீரமைப்புபணிகள் நடத்தப்படுவது அப்பட்டமான விதிமீறல்.
- நீதிமன்ற உத்தரவை மீறி புனித தீர்த்தமான அனந்த சரஸ் குளம் மூடப்பட்டுள்ளது. சமீபத்தில் மஹாளயபட்ச அமாவாசை அன்று பக்தர்களுக்கு பெரும் இடையூறுகளை அறநிலையத்துறை ஏற்படுத்தியது.
5 . 2014-இல் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட ‘கட்டாய தரிசன டிக்கெட்’ மீண்டும் பக்தர்களிடம் விற்கப்படுகிறது.
- பக்தர்களிடம் ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
இன்னும் பல வகையிலான அத்துமீறல்களும் நடந்து வருகிறது.
எனவே உடனடியாக ,
- சட்டவிரோத செயல் அதிகாரியை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும்.
- அனைத்து சட்டவிரோத கட்டுமானப் பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- அனந்த சரஸ் தீர்த்தக்குளம் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட வேண்டும்.
- கட்டாய தரிசன டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட வேண்டும்.
- கோயில் ஊழல் மற்றும் கலைப்பொருட்கள் சேதம் தொடர்பான வழக்குகளில் CBCID மற்றும் Idol Wing போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
- 1941-ஆம் ஆண்டு நிர்வாகத் திட்டப்படி, தகுதியான அறங்காவலர்களைக் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும்.
“ஒரு புனிதத் தலத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுவதும், ஆகம மரபுகள் அழிக்கப்படுவதும், பக்தர்கள் துன்புறுத்தப்படுவதும் மிகவும் வருந்தத்தக்கது,”
ஆகவே அரசு தலையிட்டு
கோயிலின் புனிதத்தையும், பக்தர்களின் உரிமைகளையும் காக்க
தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.
நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அத்திவரதனாகிய் தேவராஜ சுவாமி கோவிலைக் காக்க மக்கள், பக்தர்கள் ஆதரவுடன் அறப் போராட்டத்தை இந்துமுன்னணி கையிலெடுக்கும்.





