
சோழவந்தானில்..
மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பிரளயநாத சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில், தொழிலதிபர் எம்.வி.எம். மணி, கவுன்சிலர் வள்ளிமயில், நிர்வாக அதிகாரி ச. இளமதி, கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்கரை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை மூலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய அரிசி மூலம் அன்ன அபிஷேகம் நடைபெற்று அன்ன அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளித்தார். காய்கறி மாலைகள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து வில்வத்தால் சிறப்பு அர்ச்சனை செய்து தீப ஆராதனை காட்டப்பட்டது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம், பிரதோஷ கமிட்டியினர், செய்திருந்தனர். இதில் முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன்ராஜா, சோலை கேபிள் ராஜா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உசிலம்பட்டி….
உசிலம்பட்டி அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவில்,
ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, அன்னாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
31 கிலோ அன்னம் மற்றும் காய்கறிகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன., மீனாட்சியம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன., இந்த அன்னாபிஷேக பூஜையில், உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமபுற பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்., அனைவருக்கும் கோவில் சார்பில் அன்னதானமும் பிரசாதமாக வழங்கப்பட்டது..
வாடிப்பட்டி…
வாடிப்பட்டி பகுதியில் சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷே கம் செய்யப்பட்டது. குலசேகரன் கோட்டையில் குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுந்த ரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்து அன்னாபிஷேகமும், மீனாட்சி அம்மனுக்கு அன்னபாவாடை சாற்றப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னாபிஷேக பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். குட்லாடம்பட்டி கொட்டமடைக்கி கண்மாய்கரையின் கீழ் பகுதியில் 36 அடி உயர லிங்க வடிவிலான தியான மண்டபத்துடன் கூடிய அண்ணாமலையார் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னாபிஷேக அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை அண்ணாமலை டிரஸ்டி கோபிநாத் தலைமையில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
சிறுமலை…
குட்லாடம்பட்டி அஞ்சு குழி கண்வாய் சாலையில் சிறுமலை அடிவாரத்தில் தென்னந்தோப்பு பகுதியில் உள்ள லலிதாம்பிகை ஈஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயத்தில் லிங்கேஸ்வரருக்கு அண்ணா அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மாலை 5 மணிக்கு பௌர்ணமி விளக்கு பூஜை நடந்தது. இதன் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
கோட்டைகல் சிவன்கோயிலில்
உசிலம்பட்டி அருகே பழமையான கோட்டைகல் சிவன் கோவிலில் அன்னாபிஷேக தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்நாயக்கனூரில் பழமையான கோட்டைகல் சிவன் கோவில் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் ஒவ்வோர் ஆண்டும் விமர்சியாக நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு 15 கிலோ அரிசியால் அன்னம் தயாரிக்கப்பட்டு அன்னத்தினால் லிங்கத்திற்கு அன்னாபிஷேக வைபவம் நடைபெற்றது.
இதில், பூக்கள்,காய்கறிகள், பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.
தொடர்ந்து, அன்னாபிஷேகத்தில் பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், இப்பகுதியை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகம்.
மதுரை, அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆயிரகணக்கான பக்தர்கள் ஓம்சக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில்
கடந்த 3ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுக்கிரஹ பூஜை விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தியுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
பின்னர் 4ஆம் தேதி காலை 10:30 மணி முதல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 3ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. 5ஆம் தேதி காலை 7:45 மணியளவில் நான்காம் கால யாக சாலை பூஜை பூர்ண கூதியுடன் நிறைவு பெற்றது. பின்னர் கும்பங்களில் உள்ள புனித நீர் எடுத்து செல்லப்பட்டு சிலைகளில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர், கோவில் நிர்வாகம் சார்பாக 2000 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.





