வழக்கம்போல் தில்லாலங்கடி வேலையில் திமுக.! ஆனால்.. கமல் ரசிகர்கள் விட்டு வைக்கலியே! வசமாய் சிக்கிய உதயநிதி!

#உளறல்நாயகன் கமலஹாசன் கவனத்துக்கு என்று உதயநிதி ஸ்டாலீன் போட்ட டிவிட், அவரது ரசிகர்கள் கவனத்துக்குச் சென்றுவிட்டது! தங்கள் கவனத்தைச் சிதறவிடாமல் கமல் ரசிகர்கள் அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால், மிகவும் பலம் வாய்ந்த ரூ.200 குழு என்று பெயர் வாங்கிய திமுக., ஐடி., குழு, கமல் ரசிகர்களின் பதிலடிகளைத் தாங்க இயலாமல், கமுக்கமாக இருக்கிறது.

என்ன விவகாரம்..?! எல்லாம் கிராம சபைக் கூட்டம் தொடர்பான கமலின் விமர்சனத்துக்கு ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பழம்பெருமை வாய்ந்த புகைப்படங்களுகான பதிலடிதான்.

திமுக.,வினர் தற்போது, தொடர்ச்சியாக கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல்வேறு கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். அவை குறித்த தகவல்கள், செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. சில கூட்டங்களில் ஸ்டாலினை எதிர்க்கேள்வி கேட்டு திணறடித்த செய்திகளும் வந்துள்ளன. ஸ்டாலினைப் போல், திமுக அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஆகியோரும் திமுக.,வின் ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்கள் குறைகளை மனுக்களாகப் பெற்று வருகிறார்கள்!

இதில் பெரிய காமெடி, இந்த ஊராட்சி சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தாமாக முன்வந்து கலந்து கொள்வதில்லை. திமுக.,வினர் சாப்பாடு டோக்கன், கலந்து கொள்பவர்களுக்கான தகுதி வாரியான டோக்கன், வீடுகளுக்குக் கொண்டு சென்று காசு கொடுப்பது என, பொதுக்கூட்டங்களுக்கு செய்யப் படும் செலவை மிச்சம் பிடித்து, அதே நேரம் பணம் கொடுத்து கூட்டும் வகையில் பல கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இது குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி யிருக்கின்றன. எனவே அரசியல் பொதுக்கூட்டங்களுக்குப் பதிலாக ஊராட்சி சபைக் கூட்டம் என்ற பெயரில் திமுக.,வினர் நடத்திக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். “கிராமசபை என்று ஒன்று இருப்பது யாருக்கும் தெரியாதா? 25 வருடமாக இருக்கிறது. ஒரு சின்னப் பையன் நேற்று வந்தவன் சொன்னவுடன், காப்பி அடிக்கிறீர்களே. வெட்கமாக இல்லை” என்றார் கமல்ஹாசன்.

ஆனால், கமலின் பேச்சு திமுக.,வினரை உசுப்பேற்றிவிட்டது. பலரும் கமலுக்கு பதில் கொடுக்க ஊராட்சி சபைக் கூட்டத்தைக் கிளறத் தொடங்கி விட்டார்கள். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது பங்குக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் ”கிராம சபைக் கூட்டத்தை நான்தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்” என்று நான்கு படங்களைப் போட்டு, அதில், அதில் #உளறல்நாயகன் கமல்ஹாசன் கவனத்துக்கு என்று படங்களில் கொட்டை எழுத்துகளில் எழுதி பதிவிட்டு டிவீட் செய்திருந்தார். மேலும், கமலின் ட்விட்டர் கணக்கையும் டேக் செய்திருந்தார்.

இதை அடுத்து, உத்வேகம் பெற்ற திமுக.,வினர், தங்களது முந்தைய ஊராட்சி சபைக் கூட்டங்கள் என்று சில படங்களை தூசு தட்டி அவற்றை பதிவிட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இதில் பெரும் காமெடி, அவரது டிவிட்டர் பதிவுக்கு வந்திருக்கும் பதில்கள்தான்! விட்டு பிரித்து மேய்கிறார்கள் கமல் ரசிகர்கள். இந்தப் படங்கள் ஊராட்சி சபைக் கூட்ட படங்கள் இல்லை… இவை நமக்கு நாமே படங்கள்! திமுக., வழக்கம் போல் தில்லாலங்கடி வேலை செய்கிறது. இதில் பதிவான இரு படங்கள், அரசு சார்பில் நடத்தப் படும் கிராமசபைக் கூட்டங்கள். ஸ்டாலின் பதவியில் இருந்த போது, அரசு ரீதியில் கலந்து கொண்ட படங்கள். இன்னும் பல பதில்கள்…

இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க, ரசிக்கும் படியான சில டிவீட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று… –
*
கமல் சார் இப்போ புதுசா ஊழல் கண்டுபிடிக்க போறேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க.. அவங்க கட்சி பழைய ஊழல் விஷயங்களை தேடி எடுத்து காட்ராங்களானு பார்ப்போம்
*
– என்பதுதான். இந்த டிவீட்களில் இன்னும் சில இங்கே….

#அரசியல்_சப்பாணி ஆன @ikamalhaasan ஆளில்லாத ஊரில் டீ ஆத்திய #கமல்ஹாசன் சாரே எம் தலைவர் இதற்கு முன் ஆரம்ப காலங்களில் நடத்திய #திமுகஊராட்சிசபை கிராம சபை கூட்டங்கள்… எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பது #தலைவர் @mkstalin போன்ற அரசியலாளர்களுக்கு தெரியும்.. #அரைகுறைகள் அறியாதே!

கிராம சபை என்பது ஜனவரி 26,மே1,ஆகஸ்ட் 15,அக்டோபர் 2 ஆகிய தினங்கள் மட்டுமே நடைபெறும் மக்கள் நீதி மன்றங்கள்.செப்டம்பர் listalaye இல்லையே சார்…உங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக நடைபெற்ற போலி குறை தீர்க்கும் கூட்டங்களை இதில் சேர்க்க வேண்டாம்

மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டேனே moment

இது கிராம சபை கூட்டத்தில் அல்ல நமக்கு நாமே பயணத்தின் போது ஸ்டாலின் மக்களை சந்தித்தது. கமல் சொல்வது நான் முதன்முதலில் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டதை பார்த்து ஸ்டாலின் காப்பி அடிப்பதாக .ஸ்டாலின் இதற்கு எந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.?????

அவன்அவன் சோழர்காலத்திலே குடவோலை முறையில கிராம சபை கூட்டம் நடத்திருக்கானுக..இதுல சமர்பணம்னு போட்டோவேற..போயா யோ..🚶

என்ன அறிவு யா இவனுக்கு, நமக்கு நாமே திட்டத்தில் கூட்டம் நடத்துட்டு, கிராம சபை கூட்டம் என்று கத வுடுற, இதையும் திமுக காரனுங்க நம்புவாங்க பாரேன்

தம்பி இதுக்கு பெயர் கிராம சபை கூட்டமல்ல கிராம சபை கூட்டம் என்பது கிராம நிர்வாகம் உள்ளாட்சி துறை அதிகாரிகளால் கூட்டப்படுவது
அங்கே பொதுமக்கள் பங்கேற்று கிராம வளர்ச்சிக்கு தீர்மானம் கொண்டு வருவதுதான் கிராமசபை கூட்டம் அங்கே மைக் பிடித்து தெனாவட்டாக பேச முடியாது இது நமக்குநாமே😊

2015 ஸ்டாலின் நமக்கு நாமே – என்ற கோஷத்துடன் நகரம் கிராமங்களில் சுற்றுபயணம் செய்த கட்சி நிகழ்ச்சி 2015 க்கு முன்பு வரை கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை பகிரங்கமாக மோசடித்தனமான பிரச்சாரத்திற்கு இது உதாரணம்

கிராமசபையில் நீங்கள் கலந்து கொள்வது பற்றி எல்லாம் இல்லை. மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதே. அந்த விழிப்புணர்வை உருவாக்கியது @maiamofficial இனி நடக்கும் ஒவ்வொரு கிராமசபையிலும் அந்தந்த கிராமத்தை சேர்ந்த உங்கள் நிர்வாகிகளை கலந்து கொள்ள செய்யுங்கள். பிறகு விமர்சிக்கலாம்.

மூன்றாம் கலைஞரே இப்ப நீங்க தேர்தலுக்காக நடத்தும் நாடக ஊராட்சி சபை கூட்டம் பற்றி கேட்கவில்லை உண்மையாக நடக்கும் ஊராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது எப்போது..? ஜம்பது வருடத்தில் அப்படி ஒன்று இரண்டு கூட்டத்தில் கலந்து இருந்தால் அதை தொடர்ந்து நடத்தி வலப்பெற செய்யாதது ஏன்.?

கட்சி பிரச்சாரம் பன்ன போயிட்டு கிராம சபைக்கூட்டம்னு புலுகாதீங்க மூன்றாம் கலைஞரே! செப்டம்பர் மாசமா கிராம சபைக் கூட்ம் நடக்கும்??

நான் கண்டுப்பிடித்தேன் என்று அவர் சொல்லவில்லை… என்னை பார்த்து காப்பி அடிக்கிறார்கள் என்று தான் காறி துப்பினார்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...