தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடக்கம்! சில இடங்களில் இயந்திர கோளாறால் தகராறு!

Published:

votingbegins - 2026

தமிழகம், புதுவை உள்ளிட்ட இடங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது. சில இடங்களில் இயந்திரக் கோளாறால் தகராறு ஏற்பட்டது.

17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை முதல் வேலூர் நீங்கலாக தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளிலும் புதுவையின் ஒரு தொகுதியிலும் வாக்குப் பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திர பழுது காரணமாக சில சாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதமானது.

சேலம் செட்டிமாங்குறிச்சி, நாகை தலைஞாயிறு ஓரடியம்புலம், கோவை, கடலூர், கோவை அரசு கல்லூரி ஓட்டுச்சாவடி எண் 77, மற்றும் 78 , திருப்பூர் வடக்கு ஓட்டுச்சாடி எண் 64 , நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி சாவடி , ஊட்டி காந்தல் 26 வது வார்டு பகுதியில் ஓம்பிரகாஷ் பள்ளி சாவடி , மதுரை மாவட்டம் பேரையூர் குருவப்ப நாயக்கன்பட்டி, மதுரை மாவட்டம் மேலூர் கிடாரிப்பட்டி. சேலம் ஆத்தூர் கெங்கைவல்லியில் நத்தக்கரை, ராமநாதபுரம் பாரதிநகர் , விருதுநகர் அவனியாபுரம் ஊராட்சி பள்ளி சாவடி, உசிலம்பட்டி முத்துப்பாண்டி பட்டி ஆகிய பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக ஓட்டுப்பதிவு தாதமானது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img