சிறுமி காதலிக்க மறுத்ததால் புகைப்படத்தை தவறாக வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞன்!

சற்றுமுன் தமிழகம்
youth

இளைஞர் ஒருவர் காதலுக்கு மறுப்பு தெரிவித்தால் புகைப்படத்தை தவறாக வெளியிடுவேன் என்று மிரட்டியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியை சேர்ந்த 20 வயது தமிழ்ச்செல்வன், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் நட்புடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அச்சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அச்சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, அவர் நாம் நட்புடன் பழகிய காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் வேறுவிதமாக வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் சிறுமியை அழைத்துக்கொண்டு மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பெயரில் மதுக்கரை காவல்துறையினர் தமிழ்செல்வனின் கைது செய்து கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை என்ற புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.