தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் தற்காலிக பணி: அமைச்சர் செங்கோட்டையன்!

சற்றுமுன்
sencottaian-3

வேலையில்லாமல் தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசுப் பள்ளிகளில் தற்காலிகப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டைன், தமிழகத்தில் தற்போது பள்ளிகளைத் திறக்கும் சூழல் இல்லை.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலையில்லாமல் தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசுப் பள்ளிகளில் தற்காலிகப் பணி வழங்கப்படும்.

கேரளத்தில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டாலும், தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளைத் திறக்க முடியாது என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.