குற்றாலத்தில் மிதமான அருவி! குவியும் பயணிகள்!

Published:

courtallam falls sep26 - 2026

நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான திருக்குற்றாலத்தில் மிதமான அளவில் அருவி நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆரவாரத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

நெல்லை மாவட்டம் திருக்குற்றால மலைப் பகுதியில் கன மழை எதுவும் இல்லை. கடந்த சில நாட்களாக, இதமான சூழ்நிலை நிலவுகிறது. அவ்வப்போது வெயில் தலை காட்டுகிறது. மேகமூட்டத்துடன் வானம் இருந்தாலும், வழக்கமான சிலு சிலு தூறல் இன்றி காணப்படுகிறது.

ஜூன் தொடங்கிய சீஸன் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவை எட்டி விட்டது. தற்போது ஆஃப் சீஸன் என்பதால், மிதமான அளவில் அருவிகளில் தண்ணீர் வரத்து காணப் படுகிறது. ஐந்தருவி, மெயின் அருவிகளில் காலாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் அதிகரித்து காணப் பட்டது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (26-09-2019)

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 114 அடி
நீர் வரத்து : 571.51 கன அடி
வெளியேற்றம் : 1262.25 கன அடி

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 118.11 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 42.40 அடி
நீர் வரத்து : 212
கனஅடி
வெளியேற்றம் : 200 கன அடி

மழை அளவு:
பாபநாசம்: 7 மி.மீ
சேர்வலாறு: 6 மி.மீ
மணிமுத்தாறு: 8.6 மி.மீ
நம்பியாறு: 35 மி.மீ
அம்பாசமுத்திரம்: 6.40 மி.மீ
சேரன்மகாதேவி: 5 மி.மீ
நாங்குநேரி: 2 மி.மீ
பாளையங்கோட்டை: 6.20 மி.மீ
ராதாபுரம்: 46 மி.மீ
சிவகிரி: 1 மி.மீ
நெல்லை: 4 மி.மீ

Related articles

Recent articles

spot_img