கன்னியாகுமரியில் கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் அறிய நிகழ்ச்சி இன்று மாலையில்…

இன்று சித்ரா பௌர்ணமியன்று கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் அறிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சித்ரா பவுர்ணமியை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்வை காண சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் அதிகளவில் வரத்துவங்கி விட்டனர்.

சித்திரை மாதம் வரும் பவுர்ணமி சித்ரா பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி இன்று சனிக்கிழமை வருகிறது. இன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இந்த இரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது. இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இந்த அரிய காட்சியை காண கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மிக அதிகளவில் வந்து முகாமிட்டுள்ளனர் .

மேற்கு பக்கம் அரபிக் கடலில் சூரியன் மறையும் அதே நேரம் கிழக்கு பக்கம் வங்கக்கடலில் சந்திரன் உதயமாகும். இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும், சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் நின்று கொண்டு ரசிக்கலாம். கண்கொள்ளா காட்சியாக இருக்கும் இந்த அபூர்வ காட்சியை உலகத்திலேயே கன்னியாகுமரியிலும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலைப் பகுதியிலும் மட்டும் தான் காண முடியும். 
இந்த அபூர்வகாட்சியை காண ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது. இதனால் கன்னியாகுமரியில் நிகழும் இந்த அபூர்வ காட்சியை காண சித்ரா பவுர்ணமியான இன்று நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியா குமரியில் வந்த வண்ணமாக இருக்கிறார்கள்.

இன்று மாலை 6 மணிக்கு மேற்கு பக்கம்உள்ள அரபிக் கடல் பகுதியில் வர்ண ஜாலத்துடன் சூரியன் மஞ்சள் நிறத்தில் பந்து போன்ற வட்ட வடிவத்தில் கடலுக்குள் மறையும். அப்போது கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடல் பகுதியில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் நெருப்பு பந்து போன்ற வடிவத்தில் எழும். அப்போது கிழக்கு கடல் பகுதியில் உள்ள வானம் சந்திரனின் ஒளிவெளிச்சத்தால் ”பளிச்“என்று மின்னும். 

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

இந்தஅரிய காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி மற்றும் கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள முருகன் குன்றத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்துரசிக்கலாம்.

சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் போன்றவை நடைபெற்றது. 

மேலும் சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூடுவதால் அன்றைய தினம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

images 63 - 2026
main qimg b780017933e66e6eb090906289b0f2c3 lq 1 - 2026
images 64 2 - 2026
202204140532030514 Simultaneous sunset and moonrise in KanyakumariSee you the SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories