

தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில் புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
வழக்கமாக அணியும் காக்கி டவுசருக்கு பதில் அவர்கள் காக்கி பேன்ட் அணிந்திருந்தனர். பிற்பகல் தொடங்கிய இந்த பேரணி, காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன்வீதி, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக சிங்காரவேலர் சிலையருகே நிறைவு பெற்றது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.