November 9, 2024, 8:06 PM
28.1 C
Chennai

தென் மாநிலங்களில் மேலும் 3 ‘வந்தே பாரத்’ ரயில்கள்..

தென் மாநிலங்களில் மேலும் 3 ‘வந்தே பாரத் ரயில்கள்’ விரைவில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெலங்கானாவின் கட்ச்குடாவிலிருந்து கா்நாடகத்தின் பெங்களூரு வரையிலும், தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாதிலிருந்து ஆந்திரத்தின் திருப்பதி மற்றும் மகாராஷ்டித்தின் புணே ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களின் புதிய சேவையை தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெங்களூரு வழியாக சென்னை-மைசூரூ இடையேயான தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பரில் தொடக்கி வைத்தாா்.
செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை சமீபத்தில் தொடங்கியது. ரயில் சேவையின் தொடக்கம் முதல் 100 சதவீத இருக்கைகளும் பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழாண்டு இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களையும், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 400-க்கும் அதிகமான வந்தே பாரத் ரயில்களையும் இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.நாட்டின் ‘அதிவேக ரயில்’ என்ற பெருமைக்குரிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள், சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) வடிவமைக்கப்படுகின்றன.

author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IND Vs SA T20: சஞ்சு அதிரடியில் அபார வெற்றி பெற்ற இந்தியா!

இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 ஆட்டம் – டர்பன் –08.11.2024

பஞ்சாங்கம் நவ.09 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரண வழிபாடு!

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு!

ரூ.1 லட்சம் சம்பளத்தில் மின் பகிர்மான கழகத்தில் வேலை!

ஆர்வமுள்ளவர்கள் www.powergrid.in என்ற இணையதளம் ஆன்லைன் மூலம் வரும் 6 ஆம் தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தென்கரை கோயிலில் சூரசம்ஹாரம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோவில் சூரசம்ஹார விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு