டெங்குவை உற்பத்தி செய்யும் அரசுத் துறைகளுக்கு அபராதம் விதிப்பது யார்?

dengue musquto - 2026

டெங்கு கொசு அபராத விதிப்பில், அரசின் போங்கு ஆட்டம் நன்றாக வெளித்தெரிகிறது. மக்களுக்கு அபராதம் விதிக்கும் அரசுத் துறைகளுக்கு யார் அபராதம் விதிப்பது என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்!

டெங்கு கொசு வீட்டில் இருந்தால் – 10 ஆயிரம் அபராதம்! ஹோட்டலில் இருந்தால் – 1லட்சம் அபராதம்! என்று தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, திடீர் திடீரென சில நிறுவனங்கள், வீடுகளில் ஆய்வுகள் நடத்தி, அபராதத்தொகை வசூல் செய்யப் பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசின் நடவடிக்கைகள் குறித்து, சமூக வலைத்தளங்களில் சில நியாயமான கேள்விகளை மக்கள் கேட்டு வருகிறார்கள்! அவற்றில் சில…

* நல்லா இருக்குய்யா உங்க நியாயம்? நீங்க மாநிலத்தை சுத்தமா வைத்திருந்தால் கொசு எப்படியா உற்பத்தியாகும்?

* வீட்டுக்கு வீடு கொசுவை உரம் போட்டா வளர்க்கிறாங்க மக்கள்?

* வீட்டு வரி, நில வரி, தண்ணீர் வரி இப்போ புதிதாக குப்பை வரி என பல பெயர்களில் வரிகளை ஏன்ப்பா வசூல் செய்யுறீங்க? சுகாதாரத்தைக் கூட பராமரிக்க முடியாத வெத்து வேட்டுகளா?!

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

* எந்தெந்த கொசு எப்படி இருக்கும் என்று எவனுக்குடா தெரியும்? எதை வைத்துடா இது டெங்கு கொசு என்று கண்டுபிடித்து அபராதம் போடுவீங்க? இவர்களின் இயலாமையை மறைக்க மக்களை பாடாய்படுத்த போறாங்க!

* ஒரு அரசியல் கட்சியாவது இந்த கேலிக்கூத்தை கண்டித்துள்ளதா?

* இதுல சுகாதார பணியாளர்னு சொல்லிட்டு வீட்டுக்கு உள்ளேயே புகுந்து, நுழைஞ்சிட்டு கேள்வி கேக்குறாய்ங்க… பச்சையா பேசி முதல்ல நாகரீகமாக, கேட்டுட்டு வாங்கனு சொல்லி முதல்ல பள்ளத்துல தேங்கிக் கிடக்குற குப்பைய சுத்தம் பன்னிட்டு சாக்கடைநீர் தேங்காம பாத்துட்டு இரண்டாவது இங்க வாங்கனு சொல்லீட்டேனுங்க!

* பெரும்பாலும் வீட்டுக்கு வந்து பார்ப்பது பெண்கள். அவர்களிடம், ஃப்ளிஸ் ப்ளிஸ் என்று நாம் சொல்வதை அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை.. பெரிய இம்சையாக இருக்கிறது. தினந்தோறும் காலை 7 மணிக்கு வந்துவிடுகிறார்கள்!

* மாநாகராட்சிகாரன் இம்சை தினந்தோறும் தாங்கவில்லை.. சண்டை போட்டு ஓய்ந்து விட்டேன். குடிக்க பிடித்து வைத்து இருக்கும் ட்ரம்மில் டெய்லி கெமிக்கல் ஊற்றி இம்சை பண்ணுறானுங்க.

* கேட்டை திறந்து உள்ளே வந்து இம்சை பண்ணுறானுக. நானும் திட்டி ஓய்ந்து விட்டேன். அடிப்படை அறிவு இல்லாத அதிகாரிகள். இவர்களிடம் சண்டையிட்டு என்ன செய்ய!!

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

* கொசு முட்டைகளை அழிக்குமாம். விஞ்ஞானி எல்லாம் தோற்றுப் போவான். டார்ச் லைட் அடிச்சு பார்க்கிறானுக… கொசு முட்டை இருக்குனு சொல்றானுக.! நேற்று இரவு 12 மணிக்கு மாநகராட்சி குழாயில் வந்த தண்ணீர். மூடி போட்டு வைத்து இருக்கேன். இன்று காலை 6 மணிக்கு இந்த கூத்து. என்னத்த சொல்ல!! ஒருவேள தொறந்துவிடற தண்ணியவே கொசு முட்டையோடத்தான் விடுறாய்ங்களோ?!

* தெளிவான தண்ணில தான் உருவாகும்! வீட்டு முன்னால இருக்கற டயர்… தொட்டி.. இப்டி எதும் போட்டு வச்சா அதுல தேங்கிருக்க தண்ணீல வளரும் அத தான் அப்டி சொல்றாங்க

* எல்லாம் மென்டலா இருப்பானுக போல…! சாலையில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தி ஆனா யார்மீது அபராதம் போடுவானுகனு தெரியல?!

* நான் பறவைகளுக்கு மொட்டை மாடியில் பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது வழக்கம். அதைக் கூட வைக்க விடவில்லை! வச்சா 10 ஆயிரம் அபராதம்!

* தமிழ்நாடு முழுவதும் பாழடைந்த பங்களாக்கள் போல சுகாதாரமற்ற பல அரசு அலுவலகங்கள் உள்ளன. அங்குதான் அனைத்து ஜாதி கொசுக்களும் உற்பத்தி ஆகின்றன. திறந்தவெளி சாக்கடையில் இருந்தா யாரிடம் வசூல் பண்ணுவாங்க?
சாக்கடைய சுத்தம் செய்ய வக்கில்லல!

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories