ரூ.11.67 கோடி அசையும் சொத்து.. ரூ.59 ஆயிரம் அசையா சொத்து..! இது தயாநிதி மாறன் கணக்கு!

Published:

dayanidhi maran - 2026

தயாநிதி மாறன் தனக்கு ரூ.11.67 கோடி அசையும் சொத்தும், ரூ 59,000 அசையா சொத்தும் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை ஷெனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்.

அதில், 3 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கு தன் பெயரிலும், 3 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு  மனைவி பெயரிலும், 4 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு மகன் பெயரிலும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்!

திருக்குவளையில் உள்ள 59 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள விவசாய நிலமல்லாத நிலமே தனது அசையா சொத்து என அவர் கூறியுள்ளார்.

மேலும், 2017-18-ஆம் ஆண்டில் 2 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரத்து 820 ரூபாய்க்கு தன் பெயரிலும் 60 லட்சத்து 62 ஆயிரத்து 240 ரூபாய் தனது மனைவி பெயரிலும் வருமான வரி கணக்கு காட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கு சி.பி.ஐ. வசம் நிலுவையில் இருப்பதாகவும், தான் மேல்முறையீடு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்!

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img