தேர்தல் பார்வையாளர் பேரைச் சொல்லி மக்களை தரையில் அமர வைத்த ப.சிதம்பரம்

03 June05 p chidambaram - 2026

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் முன்னாள், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளர் கார்த்தி மற்றும் மானாமதுரை – தனி, சட்டசபை தொகுதி வேட்பாளர், இலக்கியதாசனை ஆதரித்து, பேச வந்திருந்தார்.

கட்சியினர் ஆண்களையும், பெண்களையும் சரக்கு வேன்களில் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அமர 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன.

கூட்டத்துக்கு வந்த சிதம்பரம் அதைப் பார்த்து விட்டார். உடனே, பிளாஸ்டிக் சேர்களை அகற்ற உத்தரவிட்டார். எல்லோரையும் தரையில் அமரச் செய்யுமாறு கூறினார்.

அவர் சொன்ன காரணம் ‘செலவு கணக்கு அதிகரிக்கும். தேர்தல் செலவின பார்வையாளர்கள் வேற இப்போது வரப் போறாங்க’ என்றார்.

இதனால் பரபரப்படைந்த தொண்டர்கள் அவசரம் அவசரமாக சேர்களை அகற்றினர்.

ஆனால்  பெண்கள் மண் தரையில் அமர யோசித்தனர். இதை அடுத்து அவசரம் அவசரமாக பழைய பிளக்ஸ் பேனர்  விரிக்கப்பட்டு, அதன் மேல் அமர வைக்கப்பட்டனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

சிதம்பரம் கூறியது போலவே, சிறிது நேரத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் வந்தனர்.

அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டதைப் பார்த்த தொண்டர்கள் இவருக்கு மட்டும் எல்லாமே முன்கூட்டியே தெரிந்து விடுகிறது என்று ஆச்சரியப்பட்டனர்

ஏற்கனவே சிதம்பரம் தன் வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு வருவார்கள் என்று முன்கூட்டியே கூறியிருந்தார்

மத்திய அமைச்சராக பதவியில் இருந்த சிதம்பரம் அவருக்கு என்று அனைத்து தளங்களிலும் முன்கூட்டியே உளவு சொல்ல நபர்களை வைத்து இருப்பது இதன் மூலம் நன்றாக வெளியே தெரியவந்தது

தேர்தல் அதிகாரிகளும் சிதம்பரத்தின் கைகள் தானா என்ற சந்தேகத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories