kanimozhi thamizisai - 2026

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் கடும் போட்டியை ஏற்படுத்தியபடி, போட்டியிடுகிறார்கள் திமுக., சார்பில் ராஜாவீட்டு கன்னுக்குட்டியென திமுக.,வினர் புகழ்ந்துகொள்ளும் கனிமொழியும், பாஜக., சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜனும்..!

இருவருமே நாடார் ஓட்டுகளைக் குறிபார்த்துதான் போட்டியிடுகிறார்கள் என்றாலும், தூத்துக்குடி தொகுதி, திருச்செந்தூர் தொகுதி தவிர மற்ற இடங்களில் நாடார் ஓட்டு வங்கி இல்லை என்பது பொதுவான கருத்து.

இருப்பினும், ஒரிஜினல் நாடார் என்று தன்னைக் கூறிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கும் தமிழிசைக்கும், தனது அம்மா வழியில் நாடார் உறவுதான் என்று கூறி களத்தில் இறங்கியிருக்கும் டூப்ளிகேட் நாடார் கனிமொழிக்கும் போட்டி பலம் என்று கூறுகிறார்கள்.

இந்த நிலையில், நாடார் ஓட்டு வங்கி இருப்பது உண்மையானால், நிச்சயமாக தமிழிசை சௌந்தர்ராஜன் வெற்றி பெறுவார் என்றும், நாடார் ஓட்டுகளில் இந்து நாடார் கிறிஸ்துவ நாடார் என மத ரீதியாக வாக்குகள் பிரிந்தால், வெற்றி வாய்ப்புகள் மாறிப் போகும் என்றும் கூறுகிறார்கள். கிறிஸ்துவ நாடார் ஓட்டுகள் கனிமொழிக்கு போகும் என்று கூறி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியே கூட பிற்காலத்தில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்றும், அதற்கான அத்தாட்சிதான் இந்தத் தேர்தல் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் போனில் பேசும் ஆடியோ இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

அந்த ஆடியோவில்… நாடாராவது மயிராவது..? காசு கொடுத்தால் எவனுக்கு வேணும்னாலும் ஓட்டு போடுவாங்க என்பது உறுதியாகிடும்… கனிமொழி ஜெயிச்சிட்டாங்கன்னா…

கனிமொழிக்காக பெரும் பண விநியோகம் நடக்கிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது இந்த உரையாடல்.

பணம் கொடுத்தால் விசிக., கூட தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று விடும் என்று விசிக.,வைச் சேர்ந்த ஒருவர் வெளிப்படையாகக் கூறுவது, தூத்துக்குடி நாடார்களுக்கே இழுக்கு என்கிறார்கள் சமூக வலைத்தளவாசிகள்!

அந்த ஆடியோ… ஒலிப்பதிவு..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending