ஐபிஎல் கோப்பையை அம்பானிக்கு தூக்கிக் கொடுத்துவிட்டார் மோடி!

Published:

rahul tweet image - 2026

சமூக வலைத் தளங்களில் இப்போது அதிகம் கேலி செய்யப் படும் நபராக மாறிப் போயுள்ளார் ராகுல் காந்தி.

பிரதமர் மோடிக்கு எதிராக என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார். கௌரவம், மதிப்பு, அந்தஸ்து எல்லாவற்றையும் தூர எறிந்து, எதையும் சட்டை செய்யாமல், பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் அவையிலேயே கட்டிப் பிடித்து மக்களின் அறுவெறுப்பை சம்பாதித்தார். தொடர்ந்து கோமாளித்தனமாகப் பேசி, அறிவுஜீவிகள், அரசியல்வாதிகளின் கேலிப் பொருளானார். இப்போது அவரை அவரது ஒவ்வொரு செயலுக்கும் சொல்லுக்க்ம் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

பப்பு என்ற பட்டப் பெயரால் அழைக்கப் படும் ராகுல் அண்மைக் காலமாக மோடியுடன் மட்டும் மோதாமல், அம்பானியுடனும் மோதினார். மோடிக்கு ஆதரவாக அம்பானி செயல்படுகிறார் என்றார். பின்னர் அம்பானிக்கு சாதகமாக பல்லாயிரம் ரூபாய்களை மோடி திசைதிருப்பி விட்டார் என்றார். தொடர்ந்து அம்பானிக்கு நாட்டின் பணத்தை தூக்கிக் கொடுத்து விட்டார் என்றார். அவர் சொல்லும் கணக்கு லட்சமா கோடியா, லட்சம் கோடியா, கோடி லட்சங்களா என்று மண்டையைப் போட்டு பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றதும், அதற்குக் காரணம் மோடிதான் என்று கூறி சமூகத் தளங்களில் கிண்டல்கள் தூள் பறக்கின்றன.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

ஒரு ரன்னில் தோல்வியடையச் செய்து, சென்னைக்கு போகவிருந்த ஐபிஎல் கோப்பையை மோடிதான் சதி செய்து மும்பை அணிக்கு, அதுவும் அம்பானிக்கு தூக்கிக் கொடுத்துள்ளார் என்று ராகுல் காந்தி சொல்வதாக, இப்போது மீம்ச்கள் களை கட்டுகின்றன.

rahul ipl - 2026

Related articles

Recent articles

spot_img