Home Blog Page 5660

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கனரா வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது.
நவீன வங்கிச் சேவை, நாடு தழுவிய கிளைகள் என்று பிரசித்தி பெற்ற கனரா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 101 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்கள்:

சர்டிபைடு எதிகல் ஹாக்கர்ஸ் பிரிவில் 2,சைபர் பாரன்சிக் அனலிஸ்டில் 2,அப்ளிகேஷன் செக்யூரிடி டிஸ்டம்சில் 4,மேனேஜர் (சி.ஏ.,)வில் 27,மேனேஜர் (பினான்ஸ்) பிரிவில் 5,டேடா அனலிடிக்ஸ் மேனேஜரில் 4,பினான்ஸ் அனலிஸ்டில் 3,எகனாமிஸ்டில் 2,அப்ளிகேஷன்/வெப் செக்யூரிடி பெர்சானல் இன்பர்மேஷன் செக்யூரிடி அட்மினிஸ்ட்ரேடரில் தலா 1,பிஸினஸ் அனலிஸ்ட் டேடா வேர்ஹவுஸ் ஸ்பெஷலிஸ்டில் இ.டி.எல்., ஸ்பெஷலிஸ்ட்பி.ஐ., ஸ்பெஷலிஸ்டில் டேடா மைனிங் எக்ஸ்பர்டில் 2,செக்யூரிடி மேனேஜரில் 19,மேனேஜர் (பினான்ஸ்) பிரிவில் 11,சீனியர் மேனேஜர் (பினான்ஸ்)-2

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மற்றும் அனுபவம் தேவை. விபரங்களை அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.

தேர்வுசெய்யும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்ற இரண்டு முறைகளிலும் சமர்ப்பிக்கலாம்.

விண்ணபிக்க  கடைசி நாள்: 05.04.2017

மேலூம் கூடுதல் விபரங்களுக்கு   https://www.canarabank.in/ என்ற இணையதள முகவரி பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எஞ்சினீயரிங் பட்டதாரிகளுக்கு INDBANK-ல் பணி

இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கி சென்னைக்கு நிரப்பப்பட உள்ள பொறியியல் செயலக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

காலியிடங்கள்: 12

பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: Secretarial Officer – 11

பணி: Dealer – 01
தகுதி: 01.01.2017 தேதியின்படி பொறியியல் துறையில் பட்டம் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு 2.63 லட்சம்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://corporate.indbankonline.com/Advertisement%20for%20recruitment%20of%20System%20Engineer%20and%20Dealer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

முதல்வரான யோகி ஆதித்யநாத் குறித்து உ.பி. முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்? : ஒரு ரிப்போர்ட்

 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் 21வது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கோரக்பூர் மடத்தின் தலைவர் யோகி ஆதித்யநாத் குறித்து, மதவாத முத்திரையுடன் சிலர் விமர்சனங்களை முன்வைத்தாலும், அவர் மதப் பாகுபாடு காட்டுபவரில்லை என்று கூறுகிறார் இஸ்லாமியர் ஒருவர்.

உத்தர பிரசேத்தில் புகழ்பெற்ற கோரக்நாத் கோயிலில் தொண்டாற்றும் தன்னார்வலர்களில் முகம்மது (30) என்ற முஸ்லிம் இளைஞரும் இடம்பெற்றுள்ளார். இவர், கோயிலின் தலைமைத் துறவியும், உ.பி.முதல்வருமான யோகி ஆதித்யநாத்தின் அன்புக்குரியவராகத் திகழ்கிறார்.

கோரக்நாத் கோயிலை அடுத்து 2 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது ஒரு கோசாலை. இங்கே 500க்கும் மேற் பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களில் ஒருவர் முகம்மது (30) என்ற இஸ்லாமிய இளைஞர்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது 10-ம் வயது முதல் இங்கே தொண்டாற்றி வருகிறார். உணவுடன் சிறு தொகை அவருக்கு ஊதியமாகத் தரப்படுகிறது. பசுக்களைக் குளிப்பாட்டுவது, அவற்றுக்கு உணவளிப்பது உள்ளிட்ட பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

தீவிர இந்துத்துவவாதி என்று முத்திரை குத்தப் பட்டு, வெறுப்பு விமர்சனங்களை பலரும் முன்வைக்கும்போது, இது குறித்து கருத்து தெரிவித்தார் முகம்மது.

அவர் கூறிய போது, “குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் இங்கு இருந்து வருகிறேன். இதுதான் எனது வீடு. என் மீது யோகிஜிக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எனது வாழ்நாள் முழுவதும் நான் இங்கு இருப்பேன். யோகிஜியை ஒரு மதவாதத் தலைவர் என்று கூறுகிறார்கள். ஆனால், பொதுவாக அவர் வெளியில் வந்துவிட்டால், எவரிடமும் தனிப்பட்ட முறையில் மதப் பாகுபாடெல்லாம் காட்ட மாட்டார். உ.பி., முதல்வராக அவர் அனைத்து சமூகத்தின் வளர்ச்சியையும் உறுதிசெய்வார்” என்றார்.

yoginath goshala muhammad - 2026
முகம்மது, இங்கே பசுக்களைப் பராமரித்து வந்தாலும், தொழுகை உள்ளிட்ட இஸ்லாமிய நடைமுறைகளை அவர் வழக்கப்படி பின்பற்றி வருகிறார்.

முகம்மதுவின் தந்தையும் இங்குதான் பணியாற்றினாராம். அவர் தற்போது சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மகாராஜ் கஞ்ச் நகரில், தனது வீட்டில் வசித்து வருகிறார். முதுமைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மருத்துவச் செலவை, யோகி ஆதித்யநாத்தான் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

கோரக்பூரின் வணிகரான மொகம்மத் காலீம் ஃபாரூகி என்பவர், யோகி ஆதித்யநாத் குறித்து கூறியபோது, “உபி.,யின் முதல்வராக யோகியை தேர்ந்தெடுத்த செயலை வரவேற்கிறோம். அவரது வரவால், கோரக்பூருக்கும், மாநிலம் முழுமைக்குமே ஒரு நல்ல மாற்றம் வரும். அரசு என்பது ஒரு தனிப்பட்ட நபரின் அரசு அல்ல. நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த அரசை தேர்ந்தெடுத்திருக்கிறோம். அவர் நிச்சயமாக மாநிலத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறோம். நாங்கள் இதய பூர்வமாக இதனைக் கூறுகிறோம். இப்போது நாங்கள் எங்குச் சென்றாலும், நாங்கள் முதல்வரின் ஊரில் இருந்து வருகிறோம் என்றே பெருமையுடன் கூறுகிறோம்” என்றார்.

அவரது ஹிந்துத்துவா இமேஜ் குறித்து சிலர் பேசிக் கொண்டிருக்க, உள்ளூரில் உள்ள பலரும் அவரது வளர்ச்சிப் பணிகளைச் சொல்லிச் சொல்லி வாழ்த்துகிறார்கள். எம்.பி.யாக இருந்து கோரக்பூரில் எய்ம்ஸ் கொண்டுவரப் பாடுபட்டதும், ஒரு உரத் தொழிற்சாலையை அமைப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் என!

பெருமளவிலான இஸ்லாமியர்கள், யோகி ஆதித்யநாத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதை பெரும் மகிழ்ச்சியுடன் இனிப்பு கொடுத்து வரவேற்றுக் கொண்டாடினார்கள். பாஜகவின் அல்பசங்க்யாக் மோர்ச்சாவின் உறுப்பினர் இர்பான் அஹ்மத் என்பவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில், அவர் எங்கள் முதல்வர். அதற்கு மேல் எதையும் நாங்கள் எவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை. எங்கள் பிரச்னைகள் என்ன என்பது அவருக்குத் தெரியும். அவற்றை விரைவில் அவர் தீர்த்து வைப்பார். நாங்கள் இன்று ஹோலியை அவரது வண்ணத்துடன் சேர்த்துக் கொண்டாடுவோம்” என்றார்.

யோகி ஆதித்யநாத் நடத்தி வரும் ஜுண்டா தர்பாருக்கு வரும் எவரும் வெறும் கையுடன் திரும்பியதில்லை. ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள தனது பெயரைச் சேர்க்க பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்த சௌத்ரி கைஃபுல் வாரக், இதனை பெருமையுடன் கூறுகிறார். இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், “இங்கே யார் வந்தாலும் அவரது வேலை சுலபமாக முடிந்துவிடும். சில நாட்களுக்கு முன், ஆக்கிரமிப்பால் சீரழிந்திருந்த மசூதியின் நிலையை எடுத்துச் சொல்லி, உதவிகேட்க வந்திருந்தோம். அதனை மகராஜ்தான் தீர்த்துவைத்தார்.” என்றார் பெருமையுடன்.

ஜாகிர் அலி வார்ஸி என்பவரும் ஆதித்யநாத் குறித்து பெருமிதத்துடன் கூறினார். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையுடன் இருக்கும் கோரக்பூரின் மான்வேலா கிராமப் பகுதியில், பாஜக 2014 பொதுத் தேர்தல் நேரத்தில் பிரசாரக் கூட்டம் நடத்த இடத்தைக் கொடுத்தார்கள் முஸ்லிம்கள். இதற்கு மோடியின் மீதான மதிப்பு என்பதை விட, ஆதித்யநாத் மீதான நன்றியுணர்வு என்றே சொல்லலாம். கோரக்புர் வளர்ச்சி முகமையின் பிடியில் விரும்பத்தகாத வகையில் வளைக்கப் பட்டிருந்த ஏழை இஸ்லாமியர்களின் பெரும்பாலான நிலங்களை மீட்டுக் கொடுத்தவர் ஆதித்யநாத். 2017 தேர்தலில் அவர் 175 பேரணிகளை இங்கே நடத்தியுள்ளார் என்றார் ஜாஹிர் அலி வார்ஸி.

இன்னும் கோரக்பூர் மட்டுமல்லாது யோகி ஆதித்யநாத்தை நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அவரது பதவியேற்பை தங்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சியைப் போல் கொண்டாடியுள்ளனர் என்று உள்ளூர் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

கிண்டல் செய்யும் ஆண்கள் கையை வெட்டுங்கள்: ஏடிஎஸ்பி வெள்ளதுரை பேச்சால் பரபரப்பு

முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தனியார் கல்லூரி ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராமநாதபுரம் ஏடிஎஸ்பி வெள்ளதுரை பேசுகையில், ‘‘பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கத்தியை வைத்து கொள்ளுங்கள். கிண்டல் செய்து தவறான முயற்சியில் ஈடுபடும் ஆண்களை கத்தியால் முதலில் கையில் வெட்டுங்கள். அதற்கு போலீஸ் உறுதுணையாக இருக்கும். அதேபோல் சமத்துவ பொங்கல், சமத்துவபுரம் என்பது எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை. தற்போது நாட்டில் அறிவியல் வளர்ச்சி எந்த அளவுக்கு உண்டோ, அந்த அளவுக்கு அழிவும் உண்டு
*மாணவிகள் மனம் தளராமல் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். படிப்பில் இருக்கும் கவனத்தை விட பொது அறிவு வளர்ச்சியில் ஏற்படுத்தி,  அரசு பணிகளில் ஈடுபட முயற்சி செய்ய வேண்டும். இதே மண்ணில் தான் வேலுநாச்சியாரும், சூசைபாமா போன்றவர்களும் பிறந்தவர்கள். படித்த மாணவிகள் அரசியல்வாதியாக மட்டும் வர ஆசைப்படாதீர்கள்,’’ என்றார். ஏடிஎஸ்பி ஒருவரே கத்தியால் வெட்டுங்கள் என கல்லூரி விழாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது*

ஐந்தாயிரம் கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ்!’ -தமிழகத்தில் கிளைவிடும் திட்டம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. ' 
இந்துக் கலாசாரத்துக்கு இணையானது தமிழ்க் கலாசாரம். வரும் நாட்களில் தமிழகத்தின் அனைத்துக்  கிராமங்களிலும் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் செயல் திட்டத்தை உருவாக்க இருக்கிறோம்' என்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள். 
ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஜோத்பூரில் சபைக் கூட்டம் நடந்தது. இந்த ஆண்டு கோயம்புத்தூரில் தொடங்கிய கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தொடங்கி வைத்திருக்கிறார். நாளை கூட்டம் நிறைவடைய இருக்கிறது.
 கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் கூட்டத்தில், அமைப்பை பலப்படுத்துவது; கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை முழுமையாகக் கொண்டு வருவது; இந்து மதத் தலைவர்கள் மீதான தாக்குதல்கள் உள்பட பல விஷயங்களைப் பற்றி ஆலோசித்துள்ளனர். "
 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் இந்தக் கூட்டம் நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து அருணாச்சலப் பிரதேசம் வரையில் உள்ள அனைத்து மாவட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
 இதுதவிர, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து பிரிந்து 40 அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் தேசிய தலைவர்கள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 1,400 பேர் வரையில் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்" என விவரித்த ஆர்.எஸ்.எஸ் தமிழக செய்தித் தொடர்பாளர் சடகோபன் தொடர்ந்து நம்மிடம் பேசினார். சடகோபன்
"ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில் விவாதிப்போம். ' கடந்த ஆண்டு திட்டமிட்டதில் எவ்வளவு விஷயங்களை சாத்தியப்படுத்தியிருக்கிறோம்? என்ன மாதிரியான தோல்விகள் ஏற்பட்டுள்ளன? அதற்கான காரணங்கள் என்ன?' என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறோம். மாநிலத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருந்தால், அதற்கான காரணத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். ' பின்தங்கியிருந்தால், அதற்கான காரணம் குறித்து ஆலோசனை நடக்கும். 
எங்களுடன் இணைந்து செயல்படும் மற்ற அமைப்புகள் இந்த ஓராண்டுக் காலத்தில், 'என்னென்ன சாதித்தார்கள்?' என்பதைப் பற்றி விளக்கி வருகின்றனர். மூன்று நாள் நடக்கும் கூட்டத்தில், இரண்டு நாட்கள் முழுக்க வெற்றி தோல்வி குறித்துத்தான் கவனத்தைச் செலுத்தி வருகிறோம். அதேபோல், மாநிலத்தில் என்ன பிரச்னை இருக்கிறது? ஒவ்வொரு மாநிலத்தின் சமூக சூழல்கள்தான் அமைப்பின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம். இதைப் பற்றிய பாடம் மிக முக்கியமானது.
 ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய காலத்தில் இருந்தே, தமிழகத்தின் மீது தலைவர்கள் கூடுதல் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். 'இன்னும் நல்லமுறையில் அமைப்பை வளர்த்தெடுக்க வேண்டும்' என வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.
 தமிழ்நாட்டின் மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு மிகப் பெரிய நம்பிக்கை உண்டு. இந்துக் கலாசாரத்தைக் கடைப்பிடிக்கும் மாநிலம் என்பதால், தேசிய தலைவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 
நேற்று தொடக்க விழா நிகழ்வில், நாகஸ்வர இசை, ஜல்லிக்கட்டுக் காளை கண்காட்சி, கரகாட்டம், ஒயிலாட்டம், உணவு முறைகள் என அனைத்தையும் தமிழகம் சார்ந்தே காட்சிப்படுத்தியிருந்தோம். தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்த மண்ணின் மகான்கள் குறித்து விளக்கப் படமும் வைத்திருந்தோம். ' இந்து வாழ்க்கை முறை உயிரோட்டமாக இருப்பது தமிழகத்தில்தான். தமிழ்க் கலாசாரம் நமக்கு விரோதமானது கிடையாது. நம்முடன் இணைந்த ஓர் இணை கலாசாரம். இங்குள்ள புறச் சூழல்களால் சங்கம் வளர்வதற்கு பல தடைகள் உள்ளன. அவற்றை எதிர்கொண்டு நாம் வளர வேண்டும்' என்பதுதான் அகில இந்திய தலைவர்களின் கருத்தாக இருக்கிறது.
 இந்தக் கூட்டத்தில், மூன்று வருடத்துக்கு ஓர் இலக்கு எனத் தீர்மானித்து அறிவிக்க இருக்கிறார்கள்.
மாவட்ட அளவில் நடக்கும் பணிகளை கிராமங்களை நோக்கி வேகப்படுத்த இருக்கிறோம். சில ஊர்களில் இருந்து எங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு வருகின்றவர்களிடம், மாதம் ஒரு கூட்டத்தை நடத்துமாறு வலியுறுத்துவோம். அதில் முன்னேற்றம் ஏற்படும்போது வாரக் கூட்டமும் அதை அப்படியே தினசரிக் கூட்டங்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறோம்.
 இன்னமும் தமிழகக் கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ் முழுமையாகச் சென்று சேரவில்லை என்ற குறை இருக்கிறது. இங்குள்ள ஐந்தாயிரம் கிராமங்களில்தான் அமைப்பு வேலைகள் நடந்து வருகின்றன.
 மத்திய பிரதேசத்தில் உள்ள 80 சதவீத கிராமங்களில் அமைப்புரீதியாக வலுவானவர்களாக மாறியிருக்கிறோம். நாளை நிறைவடையும் கூட்டத்தில், அடுத்த ஓராண்டுக்கான செயல் திட்டங்களை வகுக்க இருக்கிறோம். இதைப் பற்றி அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் விளக்க இருக்கிறார்" என்றார் விரிவாக.

திருநாவுக்கரசரை நீக்க மேலிடம் முடிவு?

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டது முதலே சர்ச்சைகள். அதுவும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே திருநாவுக்கரசருக்கு எதிராக செயல்பட்டனர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடங்கி அதிமுகவின் வாய்ஸாக திருநாவுக்கரசர் மாறிவிட்டது என்பதும் இளங்கோவன் தரப்பின் குற்றச்சாட்டு. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே திமுக தலைவர்களின் கருத்தை நிராகரித்து பேசிவந்தார் திருநாவுக்கரசர்.
இதற்கு இளங்கோவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்த ஆடுபுலி ஆட்டத்தின் உச்சமாகத்தான் திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாது என அதிரடி காட்டினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
ஆனால் திருநாவுக்கரசை மாற்றும் முடிவுக்கு டெல்லி மேலிடம் வந்ததைத் தொடர்ந்துதான் இளங்கோவன் தனி ஆவர்த்தனத்தை தீவிரப்படுத்தினார் என்கின்றன காங். வட்டாரங்கள். சென்னையில் திருநாவுக்கரசரை அழைக்காமலேயே பொதுக்கூட்டமும் நடத்தினார் இளங்கோவன்.
திருநாவுக்கரசரை நியமிக்கும் முன்னர் ப.சிதம்பரத்தைத்தான் தமிழக காங். தலைவராக்க டெல்லி மேலிடம் விரும்பியதாம். ஆனால் அப்போது தமக்கு மாநில அரசியலில் விருப்பம் இல்லை என கூறி அதை நிராகரித்துவிட்டாராம் ப.சிதம்பரம்.
தற்போது தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் நீடிக்கும் நிலையில் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு ப.சிதம்பரம் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். அத்துடன் தம்மை மாநில காங்கிரஸ் தலைவர்கள் போல் நடத்தக் கூடாது என சிலபல நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார் ப.சிதம்பரம். இதை ஏற்றுக் கொண்ட மேலிடம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.

நோட்டீஸ் விவகாரத்தை பரபரப்பாக்காதீர்கள் : எஸ்பிபி கோரிக்கை!-

நோட்டீஸ் விவகாரத்தை பரபரப்பான அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் .
அனுமதியில்லாமல் இளையராஜா பாடல்களை மேடைகளில் பாடுவதற்குத் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து இனி இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாட மாட்டேன் என்று பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இதையடுத்து உருவான சர்ச்சை உருவானதால் அவர் இன்னொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், தன் இசை ரசிகர்களுக்கு சனிக்கிழமை இரவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் விவரம்:
ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சலீஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்து கொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.
சில நாட்களுக்கு முன், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எனக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். "எஸ்.பி.பி. 50' என்ற பெயரில் கடந்த வருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸýம் வரவில்லை. ஆனால், அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்தச் சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மேடைகளில் இனி பாட மாட்டோம்: இந்தச் சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்தக் கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என தனது முகநூல் பதிவில் எஸ்பிபி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் சர்ச்சை உருவானது. தான் பாடிய பாடலைப் பாட பாடகருக்கு உரிமையில்லையா என்றும் எஸ்பிபி ராஜாவிடம் அனுமதி பெறாதது ஏன் என்று கேள்வி எழுப்பபட்டு பலவிதமான விவாதங்கள் நடைபெற்றன.
நோட்டீஸ் அனுப்பியது ஏன் என்று இளையராஜா தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. காப்புரிமை விவகாரங்களில் இளையராஜாவுக்கு ஆலோசகராக இருக்கும் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. நோட்டீஸ் அனுப்புவது என்பது வழக்கமான நடைமுறைதான். இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியுடன் உரிய ராயல்டி தொகை செலுத்திப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும். சாதாரண மேடைக்கச்சேரி செய்பவர்களிடமிருந்து ராயல்டி எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வணிக நோக்கத்துடன் பாடல்களைப் பயன்படுத்துவோர் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றார்.
இணையத்தில் சர்ச்சை எழுந்துள்ளதையடுத்து எஸ்பிபி தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் முக்கியமாக ஊடகவியலாளர்களுக்கும் என்னுடைய கோரிக்கை இது. ராஜா – எஸ்பிபி விவகாரத்தைப் பரபரப்பாக்கவேண்டாம். இது துரதிர்ஷ்டவசமானது. அவ்வளவுதான். நம் சகஜ வாழ்க்கையைத் தொடரவேண்டும். கடவுளின் படைப்பில் அனைவரும் நல்லவர்களே, சமமானவர்களே. நன்றி என்று கூறியுள்ளார்.
  

இளையராஜா பாடல்கள் இல்லாமல் தொடரும்: எஸ்.பி.பி.சரண் அறிவிப்பு


எஸ்பிபி 50 நிகழ்ச்சிகள் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் தொடரும் என எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் அறிவித்துள்ளார்.
திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், தன் இசை ரசிகர்களுக்கு சனிக்கிழமை இரவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சில நாட்களுக்கு முன், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எனக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார்.எஸ்.பி.பி. என்ற பெயரில் கடந்த வருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸýம் வரவில்லை. ஆனால், அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்தச் சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மேடைகளில் இனி பாட மாட்டோம்: இந்தச் சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்தக் கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என தனது முகநூல் பதிவில் எஸ்பிபி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எஸ்பிபியின் மகன் சரண் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இளையராஜா சாரின் பாடல்களின் காப்புரிமை அவரிடம் உள்ளது பற்றி எங்களுக்குத் தெரியாது. ராஜா சார் இசையமைக்க வருவதற்கு முன்பிருந்து அப்பா பாடிவருகிறார். எனவே ராஜா சாரின் பாடல்கள் இல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் ராஜா சார் பாடல்கள் பாடப்படமாட்டாது. இந்தத் தகவல் தெரிந்தபிறகும் தமிழ் நிகழ்ச்சியின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுவிட்டன என்று கூறினார். 

இளையராஜா- எஸ்பிபி விவகாரம்: சுமுகமாகத் தீர்க்க வெங்கய்ய நாயுடு யோசனை

எஸ்பிபிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் சுமுகமான முறையில் தீர்க்கப்படவேண்டும் என்று அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
திரையிசை வாழ்க்கையில்,  50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையொட்டி சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ட்விட்டரில் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது: இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி பாடுவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இந்த விவகாரம் நல்லவிதமாகச் சரிசெய்யப்பட வேண்டும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

வணிக நோக்கம் என்பதால்தான் நோட்டீஸ்: இளையராஜா தரப்பு விளக்கம்


காப்புரிமை விவகாரங்களில் இளையராஜாவுக்கு ஆலோசகராக இருக்கும் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. நோட்டீஸ் அனுப்புவது என்பது வழக்கமான நடைமுறைதான்.

இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியுடன் உரிய ராயல்டி தொகை செலுத்திப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும். சாதாரண மேடைக்கச்சேரி செய்பவர்களிடமிருந்து ராயல்டி எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வணிக நோக்கத்துடன் பாடல்களைப் பயன்படுத்துவோர் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.