Home Blog Page 5684

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க… காற்றில் ஆடிய தீபா மெல்ல அழுக…

சென்னை:
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். இங்கே பன்னீர் ஆடிய காற்று அழுத்தத்தில் தீபா எனும் புரட்சிப் புயல் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் கடந்த 2 நாட்களாக ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தீபா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் பிரச்னைக்கு பிறகு
 தீபா குறித்த பேச்சு முற்றிலும் கரைந்து போய்விட்டது.

சசிகலாவின் தலைமையை விரும்பாதவர்கள் தீபாவை ஆதரித்த நிலையில் தற்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர்

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி முடிவுக்குப் பிறகு தீபாவின் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்கள் கூட்டம் குறையத் தொடங்கிவிட்டது.

 தம் ஆதரவாளர்கள் தற்போது பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதால் தீபா தற்போது செய்வதறியாது திகைத்துள்ளார்.. இவர்களை நம்பி கட்சி துவங்குவதா வேண்டாமா என்ற குழப்பத்திலும் இருக்கின்றார் தீபா.

உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்


உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசியல் சூழல் குறித்து மேலும் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். நேற்று அவர் முதல் அறிக்கையை அனுப்பியிருந்தார். இந்நிலையில் இன்று அனுப்பியுள்ள அறிக்கையில் அதிகாரிகள், காவல்துறை தந்த தகவல்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது பற்றியும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆளுநர்.

ஆளுநர், தன்னுடைய முடிவு குறித்து அறிக்கையில் தெரிவிக்கவில்லை. எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது பற்றி காவல்துறை தந்த தகவல்களையும் குறிப்பிட்டுள்ளாராம்.

சசிகலா ஆட்சியமைக்க அழைக்க இயலாது: ஆளுநர் அறிக்கை?

புது தில்லி:
‛தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க இயலாது’ என மத்திய உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 3 பக்க அறிக்கையை அனுப்பி உள்ளார் ஆளுநர்.

அவரின் அறிக்கையில் கூறி உள்ளதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிமுக.,வில் நிலவும் பிரச்சனை உட்கட்சி பிரச்னைதான். சொத்துக் குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்குள் தீர்ப்பு வழங்க உள்ள சூழலில், சசிகலாவை உடனே ஆட்சி அமைக்க அழைக்க இயலாது.

அதிமுக, எம்.எல்.ஏ.,க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனரா, அவர்களில் சூழல் என்ன என்பது குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளேன்.

– என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால், இவ்வாறு ஆளுநர் அறிக்கை எதுவும்  அனுப்பவில்லை என்று, ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆளுநர் மாளிகை செய்திதொடர்பாளர் இது குறித்து ஏஎன்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தபேட்டியில் தெரிவித்த போது, ஆளுநர் தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப் படவில்லைஎன்று கூறினார். இதனால் குழப்பம் ஏற்பட்டது.

பி.எஃப். கணக்கில் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.

நாமினி!

“முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.

பென்ஷன்!

பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.

மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.

இடையில் பணம் எடுத்தல்!

பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை https://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.

பிஎஃப் கணக்கை முடிப்பது!

பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.

இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)

பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.

அனைத்தும் ஆன்லைன்!

பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். https://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

எதற்கு எந்தப் படிவம்?

பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை https://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை https://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

புகார் தெரிவிக்க!

பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும். https://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx…& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.

டிடிஎஸ்!

பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ் (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில் உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும்.
https://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541

நிரந்தரக் கணக்கு எண்!

பிஎஃப் அமைப்பு UAN(Universal Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.

இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே வாங்க முடியும். இந்த எண்ணை https://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.

இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”

தகவல்: ஹம்ஸாபாய் சந்தானகிருஷ்ணன்

செங்கோட்டை குண்டாறு முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

செங்கோட்டை குண்டாற்றுக் கரையில் வீற்றிருக்கும் விநாயகர் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள முருகன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில்

ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை குண்டாற்று கரையில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீ அக்கசாலை விநாயகர் கோயில் உள்ளது.

தற்போது இந்த கோயிலில் இதில் புதிதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதியும், கோபுரம் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கின.

இந்த நிலையில், கோயிலில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை 6 மணிக்கு வ்நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது.

இதனை தொடர்ந்து, காலை 9 மணிக்கு அக்கசாலை விநாயகருக்கும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் பரிவாரி மூர்த்திகளுக்கும்

புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.

சங்கரசுப்பிரமணிய பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோவில் கோபுரக் கலசங்கள் மீது புனித நீரை ஊற்றினர். பின்னர் அந்த புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்னும் ஆறே மாதங்கள்தான்…

மக்கள் தன்னை ஆதரிக்கவில்லை என்பது சசிகலாவுக்கு தெரியும். 32 ஆண்டுகள் ஜெயலலிதாவுடம் இருந்தவருக்கு இது நிச்சயமாகத் தெரியும். அதனால்தான் அவர் பொதுச்செயலர் பதவியோடு நின்றார். ஜெயலலிதா இறந்தவுடனே அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கலாம்.. வழக்குத் தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது என்றால், ஜெயலலிதாவின் மீதும் இதே வழக்குதானே.

திடீரென்று முதல்வராகும் முடிவுக்குக் காரணம், பன்னீர்செல்வம், ஜெயலலிதாவிடம் காட்சிய அதே விசுவாசத்தை சசிகலாவிடம் காட்டவில்லை. கடந்த காலங்களில் இடைக்கால முதல்வராக இருந்தபோது காணப்படாத புதுவழக்கமாக அவர் மத்திய அரசுடன் நெருங்கத் தொடங்கினார். சிக்கல் அங்கேதான் தொடங்கியது.

அதிகாரத்தின் மூலம்தான் தன் வழக்குகளின் தீவிரத்தைக் குறைக்க வேண்டும், சொத்துகளைப் பாதுகாத்தாக வேண்டும் என்றில்லை.. அவருக்கு அனைத்து வழிகளும் தெரியும். ஆனால் பன்னீர்செல்வம் தன்னைவிட்டு விலகிச்செல்வது கட்சியின் மற்ற அமைச்சர்கள், மாவட்டத் தலைவர்களுக்கும் தொற்றினால், கட்சியை நடத்த முடியாது. ஆகவேதான் தானே முதல்வராவது என்று முடிவு செய்தார். மக்களிடம் எத்தகைய வெறுப்பு இருந்தாலும் பரவாயில்லை என்று இறங்கிவிட்டார்.

இந்த ஆட்டத்தில் முதல்வர் பதவி ஆயுள் ஆறு மாதஙகள் மட்டுமே என்று இருவருக்குமே தெரியும் மத்திய அரசுக்கும் தெரியும். ஆளுநருக்கும் தெரியும்.

தில்லி காய்நகர்த்தலைத் தெரிந்துகொண்டுதான், முந்தியது டாக்டர் பீலே பேட்டி. அதாவது ‘ஜெயல்லிதா மரணத்தில் விசாரணைக் கமிஷன்’, ‘நானே அம்மாவை பார்க்கவில்லை’ என்பதெல்லாம் பேசப்படும் முன்பே அந்த பேட்டி அவசரமாக நடத்தப்பட்டது என்பதை புரிந்துகொள்ளலாம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தாலும் ஆறு மாதங்கள்தான் பதவி வகிக்க முடியும். அவர் தேர்தலை சந்தித்தாக வேண்டும். தற்போதுள்ள வெறுப்பு அலையில் தேர்தலில் நிச்சயமாக தோல்வி அடைவார். ஆனால் தமிழகத்தில் மேலவையைக் கொண்டு வந்து, அவர் மேலவை உறுப்பினராக மாறிவிட முடியும் என்று ஒரு ஊடகச்சாமி அருள்வாக்கு தந்திருக்கிறது என்கிறார்கள். அத்தகைய வாய்ப்பு உருவாக திமுக விடாது. மற்ற எதிர்க்கட்சிகளும் எதிர்க்கும். நீதிமன்றத்தின் வாயிலாக 6 மாதங்களுக்கும் மேலாக இழுத்தடித்து, சசிகலா தேர்லைச் சந்திக்கும்படி செய்யும்.

அப்படியானால், சசிகலா தோற்ற பிறகு, அனைத்து எம்எல்ஏ-க்களும் மீண்டும் பன்னீர்செல்வத்தை ஆதரித்தால், அடுத்த நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்த முடியுமே என்று கேட்கலாம். அல்லது ஆறுமாதங்களில் தேர்தல் நடந்தால் அதில் பன்னீர்செல்வத்தின் அணி வெற்றி பெறாதா என்றும் கேட்கலாம்.

பன்னீர்செல்வம் எளிமையானவர், தூய அரசியலுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறார் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அவரிடம் மனத்துணிவு இல்லை. பதவி விலகல் கடிதம் மற்றும் சசிகலாவை முதல்வராக ஏற்கும் கடிதம் எல்லாவற்றிலும் போட்டுவிட்டு, “கட்டாயப்படுத்தினார்கள் கையழுத்துப்போட்டேன்” என்று சொல்வது அவரது ஆளுமையைக் குறைத்துவிடுகிறது. கட்டாயப்படுத்தினால் பணிந்துபோவார் என்றால் அவர் பொதுவாழ்வில் நீடிக்க முடியாது.

காந்தி எந்த கட்டாயத்துக்காகவும், உலகம் முழுதும் எதிர்த்தாலும், ஆதரித்தாலும்,, தனக்கு சரி என்று உள்மனதில் படவில்லையென்றால் ஏற்கமாட்டார். அந்த மனத்துணிவு ஒரு தலைவனுக்குத் தேவை. அந்த உறுதி உள்ளவன் பின்னால்தான் உலகம் கண்ணை மூடிக்கொண்டு வரும். வண்ணநிலவன் நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்லும்,… “இரக்கம்தான் என்னைச் சீரழிக்கிறது” என்று. பன்னீர்செல்வம் மட்டுமல்ல, அரசியலில் எடுபடாமல் போன எல்லா எளிய, நேர்மையாளர்களின் குணக்கேடும் அதுதான்.

ஆறுமாதங்களில் தமிழகத்தில் இரண்டு அரசியல் மாற்றங்கள் நிகழும்.
1 அதிமுக இருக்கும். ஆனால் வெற்றிபெறாது
2 திமுக அல்லது காங்கிரஸ் அணி ஆட்சியைப் பிடிக்கும். பாஜக இருக்கும் – செல்வாக்கையும் தமிழகத்தில் இழந்து நிற்கும்.

  • கட்டுரை: ஆர். சோமசுந்தரம்.

கவர்னரிடம் பன்னீர்செல்வம் வைத்த 5 கோரிக்கைகள்.6 கோப்புகள்

*கவர்னரிடம் பன்னீர்செல்வம் வைத்த 5 கோரிக்கைகள்.6 கோப்புகள்*
*கவர்னரிடம் ஓ.பி.எஸ் வைத்த 5 கோரிக்கைக*
 
1.    ராஜினாமா செய்ததை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.
2.    சசிகலாவை சட்டமன்ற ஆளும் கட்சித் தலைவராக நியமித்ததை ஏற்கக்கூடாது. ஏனென்றால், அதில் முறைகேடுகள் நடந்துள்ளன.
 3.    சசிகலா ஆளும் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து அவரை வாபஸ் பெற வலியுறுத்த வேண்டும்.
 4.    சசிகலாவுக்கு இருக்கும் மெஜாரிட்டி என்பது முறைகேடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.   
 5.    சசிகலாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது.
*கவர்னரிடம் ஓ.பி.எஸ் கொடுத்த 6 கோப்புகள்*
1.    தான் ராஜினாமா செய்தததை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்பதற்கான கடிதம்.
 2.    போயஸ் கார்டன், வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவது. 
 3.    சென்னை கமிஷனர் ஜார்ஜ் மாற்றம் தொடர்பான உத்தரவு.
 4.    எல்.எல்.ஏ-க்கள் கடத்தப்பட்டுள்ளதாக 4 எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த புகார் நகல்.
 5.    சசிகலா பொதுச்செயலாளர் ஆனதில் விதிமுறை மீறப்பட்டதற்கான ஆதாரமாக அ.தி.மு.க பை-லா.
 6.    தனக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்பதை நிருபிக்க அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதற்கான அனுமதி கேட்கும் கடிதம். 

ஓபிஎஸ் ஒரு கோழை: சுப்பிரமணிய சுவாமி

முதல்வர் ஒபிஎஸ் ஒரு கோழை: சுப்பிரமணி சுவாமி!
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணி சுவாமி கூறியதாவது:வி.கே.சசிகலாவை ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும்.தனது பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோழை, அவருக்கு திறமையில்லை, முதல்வராக இருப்பதற்கும் தகுதியில்லாதவர்.முதல்வரின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் வாபஸ் பெறுவது என்பது முடியாது.சட்டத்திற்கு அதற்கு அனுமதியில்லை.

சசிகலாவிடம் ஆளுனரின் கேள்வியும் விளக்கமும்

ஆளுநர் – சசிகலா சந்திப்புக்கு காரணம்!
*நீண்ட நேர சந்திப்புக்கு காரணமாக பல்வேறு யூகங்கள் கூறப்பட்டு வருகிறது. அதில் ஒன்று ஆளுநர் "வழக்கு குறித்தும், ஏன் நீங்கள் அதன் தீர்ப்பு வரும் வரை பொருத்து கொள்ளக்கூடாது" எனவும் அதற்கு சசிகலா விளக்கம் அளித்து வருவதாகவும் அரசியல் பார்வையாளர்கள்  கருதுகிறார்கள்!*

எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்ஸ் அறை வாடகை எவ்ளோ தெரியுமா?

கடலுக்கு ரம்மியமாக பல வசதிகளுடன் உள்ள இந்த ரிசார்ட்ஸ்சில் பணக்காரர்களும், சுற்றுலா வரும் வெளிநாட்டினரும் அதிகளவில் வந்து தங்கி செல்கின்றனர்.
டிரான்க்யுல் ரூம் ஒருநாள் வாடகை ரூ.5500, பே வியூ ரூம்கள் ஒருநாள் வாடகை ரூ.6.600, முதல்தரமான பாரடைஸ் சூட் ரூம் ஒரு நாள் வாடகை ரூ.9900. நம் எம்எல்ஏக்கள் பாரடைஸ் சூட் ரூமில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.
*என்னென்ன வசதிகள்*
மசாஜ் சென்டர், டிரக்கிங், ஜிம் போன்ற அனைத்து சிறப்பம்சங்களும் கொண்டதாக இருக்கிறது கோல்டன் பே ரிசார்ட்ஸ். இத்தனை அம்சங்களும் கொண்ட இந்த ரிசார்ட்ஸ் ரூம்களில் ஒரு நாள் வாடகை பல ரகங்களில் உள்ளன.