Home Blog Page 5701

பி.சி.சி.ஐ., தலைவர் வினோத் ராய்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ., யை நிர்வகிக்க, வினோத் ராய் தலைமையில் நான்கு பேர் குழுவை சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.
கடந்த 2013ல் ஐ.பி.எல். தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து, பி.சி.சி.ஐ.,யில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட லோதா குழு பரிந்துரை செய்தது. இதை அமல்படுத்த தவறியதால், தலைவர் அனுராக் தாகூர், செயலர் அஜய் ஷிர்கே நீக்கப்பட்டனர். இவர்களுக்குப் பதில் பி.சி.சி.ஐ., அமைப்பை நிர்வாகம் செய்ய, புதிய நிர்வாகிகளை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டது.
வினோத் ராய், ராமசந்திர குகா, டயானா எடுல்ஜி, விக்ரம் லிமாயி ஆகிய நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழுவுக்கு வினோத் ராய் தலைவராக இருப்பார். இவர், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக இருந்தவர்.

அஞ்சல் துறை வங்கி வட்டி வீதம் அறிவிப்பு

விரைவில் தொடங்கப்படும் அஞ்சல்துறை வங்கியில் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் அறிவிப்பு
அஞ்சல்துறை வங்கியில் வைப்புத் தொகை ரூ.25,000-ரூ.50.000க்கு 5% வட்டியும், ரூ.50,000-ரூ.1,00,000க்கு 5.5% வட்டியும் வழங்கப்படும் என அறிவிப்பு

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தி வருகிறார். 2 கப்பல்கள் மோதிக் கொண்டதால் கடலில் கலந்த டீசலை அகற்றுவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 
எண்ணூரில் கடலில் டீசல் கலந்ததால் மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கடல் நீர் மாசடைந்துள்ளது.

பஞ்சாபில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.20. ரூ. 50, ரூ.100 மற்றும் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வைத்திருந்த நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்லேடன் படத்துடன் வந்தவர்கள் குறித்து விசாரணை: முதல்வர்

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்லேடன் படத்துடன் வந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது என முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். பின்லேடன் படத்துடன் வந்தவர்கள் யார் என்பதை எனது பதிலுரையின் போது தெரிவிப்பேன் என ஓ.பி.எஸ். கூறியுள்ளார். ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரியின் கேள்விக்கு முதல்வர் ஓ.பி.எஸ். இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவனியாபுரத்தில் வரும் 5ம் தேதி ஜல்லிக்கட்டு

அவனியாபுரத்தில், வரும் 5ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அக்கிராம குழுவினர் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏதுவாக அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இக்குழுவினர் இன்று தமிழக முதல்வரை சந்தித்தினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்; ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பல்வேறு நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும், போராடிய மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். வரும் 5 ம் தேதி அவனியாபுரத்திலும், 10ம் தேதி அலங்காநல்லுாரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இவ்வாறு குழுவினர் தெரிவித்தனர்.
*அவனியாபுரத்தில் பிப்.5ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
*ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு நன்றி
*பாலமேட்டில் பிப்ரவரி 9ம் தேதி ஜல்லிக்கட்டு என்று முதல்வரை சந்தித்த பின் விழாக்குழுவினர் அறிவித்தனர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,784 ஆகவும், சவரன் ரூ.22,272 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.44.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.41,780-ஆக விற்பனை செய்யப்படுகிறது.*

இயக்குநர் பன்சாலியை செருப்பால் அடித்தால் ரூ.10,000 : பா.ஜ.க நிர்வாகி

'பத்மாவதி' என்ற வரலாற்றுப் படம்ஒன்றை எடுத்து வந்தார் பாலிவுட் இயக்குநர் சஞ்சை லீலாபன்சாலி. இதில்பத்மாவதி ராணியை தவறாக சித்தரித்து படம் எடுப்பதாகக் கூறி இயக்குநர் சஞ்சை பன்சாலி கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கப்பட்டார். இதற்கிடையே, மத்தியபிரதேச பா.ஜ.க நிர்வாகி அகிலேஷ் என்பவர், 'வரலாற்றை தவறாக சித்தரிக்க முயற்சிக்கும் இயக்குநர் பன்சாலியை செருப்பால் அடிப்பவர்களுக்கு ரூ.10,000 வழங்குவேன். தங்களது சுய விளம்பரத்துக்காக, வரலாற்றை தவறாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள்' எனக்கூறியுள்ளார்.

பிப்.1 முதல் பணம் எடுப்பதற்கான வரம்பு தளர்வு

*பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கான வரம்பு தளர்வு* ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மல்லையாவுக்கு உதவிய மன்மோஹன் சிங்: விளக்கம் கேட்கிறது பாஜக

*மல்லையாவுக்கு மன்மோகன் உதவி ? விளக்கம் கேட்டு குதிக்கிறது பா.ஜ*
_பல கோடி கடன் மோசடி செய்தி பிரபல கிங் பிஷர் நிறுவன தலைவர் விஜயமல்லையாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உதவி செய்துள்ளதாக ஆங்கில தொலைக்காட்சி சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மல்லையாவுக்கு காங்கிரஸ் ஆதரவாக இருந்ததாக வெளிப்படையாக தெரிகிறது என பா.ஜ., கூறியுள்ளது.மல்லையா பல மெயில்கள் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ளா். அதில் மல்லையா பல உதவிகளை கேட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது_