Home Blog Page 5721

சசிகலா தலைமையை ஏற்க அதிமுக., பொதுக் குழுவில் முடிவு!

சென்னை:

சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதியேற்பது என்று அதிமுக., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரபரப்பான சூழலில் அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு இன்று (டிச. 29 ம் தேதி) கூடியது . சென்னை வானகரத்தில் உள்ள வெங்கடாஜலபதி மண்டபத்தில் காலை 9. 30 மணியளவில் துவங்கியது. இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் யாருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படவில்லை.

இதனிடையே ‛அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார்,” என, முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். வானகரத்தில் அவர் நிருபர்களிடம் பேசியபோது,

அ.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் கட்சி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தகவலை சசிகலாவிடம் தெரிவித்து, அவரது சம்மதத்தை பெற நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்றார்.

சசிகலா பொதுச் செயலர்:

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஐந்தாவதாக, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவின், ஐந்தாவது தீர்மானம் வருமாறு:

கட்சியின் பொதுச் செயலாளராகவும், தொண்டர்களின் தாயாகவும், தவ வாழ்வு வாழ்ந்த தலைவியை இழந்து கட்சி இன்று கலங்கி நிற்கிறது.கட்சியை இனி யார் வழி நடத்தி செல்வது என்ற நிலை ஏற்பட்ட போது, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களிலும் சசிகலாவின் பெயர் தான் எழுந்தது. கட்சியை வழி நடத்தி செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்பது; கொள்கைகளை வகுப்பது; கட்சியின் அன்றாட செலவுகளுக்கு வங்கி கணக்குகளை இயக்க, பொருளாளருக்கு அதிகாரம் வழங்குவது மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் ஏற்று நடத்த அதிகாரம் வழங்குவது ஆகிய பணிகளுக்காக கட்சியின் பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவது மிகவும் இன்றியமையாத பணியாக தற்போது இருக்கிறது. அதை முடிவு செய்யும் அதிகாரம் கட்சியின் சட்ட திட்ட விதி -19, பிரிவு -8 ல் பொதுக்குழுவிற்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட திட்ட விதி – 20, பிரிவு – 2ன் படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதுவரை, சசிகலாவையே கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்து இந்த பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம்நிறைவேற்றுகிறது.

ஜெயலலிதாவா சசிகலாவா?: நிர்வாகிகள் தவிப்பு! காலண்டர் தவிர்ப்பு!

சென்னை:
2017 காலண்டரில் ஜெயலலிதா படத்தை அச்சிடுவதா, சசிகலா படத்தை அச்சிடுவதா என்ற குழப்பத்தில், புத்தாண்டுக்கு காலண்டரே யாருக்கும் வழங்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், காலண்டர் வழங்குவதைத் தவிர்த்து விட்டனர்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவியை கைப்பற்ற, சசிகலா தரப்பு கடும் முயற்சியில் உள்ளது. ஜெயலலிதா இறுதிச் சடங்கின் போது, அவரது உடலைச் சுற்றிலும், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் சூழ்ந்துகொண்டு, மற்ற எவரையும் கிட்ட நெருங்க விடாமல் செய்தனர். மேலும், ஜெயலலிதாவுக்கு இறுதிச் சடங்கினை மரபுகளை மீறிச் செய்தார் சசிகலா. இதனால், சசிகலா மீது தொண்டர்கள் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், பொதுச் செயலர் பதவிக்கு சசிகலாவை முன்னிறுத்தியுள்ளனர் அதிமுக., வில் பதவிக்காக ஆலாய்ப் பறப்பவர்கள். இதனால் அதிமுகவில் கோஷ்டிப் பூசல் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில், புத்தாண்டு பிறக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர், காலண்டர் குழப்பத்தில் சிக்கி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், அ.தி.மு.க., நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், புத்தாண்டை வரவேற்று, ஜெயலலிதா  படத்துடன் காலண்டர்களை அச்சிட்டு தொண்டர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் வழங்குவது வழக்கம். ஜெயலலிதா மறைவுக்கு பின், அம்மா படத்தை போடுவதா… சின்னம்மா படத்தை போடுவதா என்று நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இவர்களை நம்பி, காலண்டர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர் வருமானத்தை இழந்து உள்ளனர்.

இந்தாண்டு எப்போதும் இல்லாத வகையில், காலண்டர் மற்றும் டைரிகள் விற்பனை மந்தம் அடைந்து உள்ளது. இதனால், தொண்டர்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றம்; மற்றொரு பக்கம் மகிழ்ச்சி யாக உள்ளதுஇது குறித்து, நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வை, எம்.ஜி.ஆர்., துவங்கியபோது, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., படங்களுடன் காலண்டர் அச்சிட்டு வழங்கினோம். பின், ஜெயலலிதா படம் மட்டுமே பிரதானமாக இடம் பெற்றது. அவர் மறைவைத் தொடர்ந்து, சசிகலாவை பொதுச் செயலராக முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், யார் படத்திற்கு முக்கியத்துவம் தருவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. யார் படத்தை அச்சிட்டாலும், கோஷ்டி பூசலில் சிக்கி, எங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், தவிர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொண்டர் ஒருவர் கூறுகையில், ‘இப்போதுள்ள நிர்வாகிகள், பதவிக்காக, மாறியுள்ளனர். இவர்களால் தப்பியது காலண்டர் என்பதில் மகிழ்ச்சி’ என்றார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: நீதிபதி வைத்தியநாதன் தனிப்பட்ட கருத்து

சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றியும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், செப்., 22ம் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, டிச., 5ம் தேதி இரவு,11:30க்கு மரணமடைந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி வைத்தியநாதன், முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. ‛அவர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்’ என செய்திகள் வெளியாகின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரைப் பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை என்று தனது சொந்தக் கருத்தாகக் கூறிய நீதிபதி வைத்தியநாதன், இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்வதாகக் கூறினார்.

சசிகலா யார் ஆள்?: வலம்புரி ஜானின் தீர்க்க தரிசனம்!

சசிகலா யாரின் ஆள்? அவர் எம்.ஜி.ஆரின் ஆளுமல்ல, ஜெ.,யின் ஆளுமல்ல; சசிகலாவின் ஆள் தான் சசிகலா என அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., வலம்புரி ஜான் எழுதியுள்ளார். சுமார் 20 வருடங்களுக்கு முன்பேயே அவர் இவ்வாறு எழுதியுள்ளார். தமிழக மக்கள் உணர்ந்தாலும், ஜெயலலிதா இந்த உண்மையை உணர மாட்டார் என்று அவர் எழுதியுள்ளது ஒரு விரக்தியின் எல்லை என்றுதான் தெரிகிறது.

ஜெயலலிதா மறைந்த பின்னர், அதிமுக.,வில் பொதுச் செயலர் பதவிக்கு போட்டா போட்டி நடக்கிறது. ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்கு மேல் உடன் இருதவர் என்ற முறையில் சசிகலா, வாரிசு அடிப்படையில் தீபா, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் என்ற முறையில், முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, தனித்தனியே பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

‘ஜெயலலிதாவுடன் இருந்த நெருங்கிய தோழி என்ற அந்தஸ்தால், கட்சி நிர்வாகிகளை பணிய வைத்து, தலைமைப் பொறுப்புக்கு வர நினைக்கிறார் சசிகலா’ என்ற கருத்து, அ.தி.மு.க., வினர் மத்தியிலும், சமூக வலை தளங்களிலும் பரவி வருகிறது.

ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன், உறவினர்கள் தினகரன், மகாதேவன், வெங்கடேஷ், ராவணன் என, ஒரு பட்டாளமே சசிகலாவை பொதுச் செயலராக்குவது எனக் களமிறங்கியுள்ளது.

அ.தி.மு.க.,வில் பதவிகளையும் அதிகாரத்தையும் பிடிக்க ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறிக் கொண்டவர்கள், தற்போது சசிகலாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிவிட்டனர்.

இந்நிலையில், கடந்த 2005ல் இறந்த பிரபல எழுத்தாளரும், அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., யுமான, வலம்புரி ஜான் எழுதிய, ‘வணக்கம்’ என்ற புத்தகத்தின் பல வரிகள் உண்மைதானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் புத்தகத்தில், சசிகலாவும், நடராஜனும் எப்படியெல்லாம் ஜெ.,யை கைப்பாவையாக வைத்து இருந்தனர், அவரது உறவினர்களை திட்டமிட்டு, எப்படி பிரித்தனர் என, அப்போதே எழுதியுள்ளார்.’

அந்த புத்தகத்தில் இருந்து, சில வரிகள்:

ஜெயலலிதா, சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத் தான் இருக்கிறார்.ஜெ.,யின் விசுவாசமிக்க ஊழியர்களை, ஒவ்வொருவராக பழிவாங்கி, உடன் பிறந்த சகோதரன் ஜெயக்குமாரை கூட, ஜெ.,யோடு சேர விடாமல் செய்து, உண்மைகளை அறிய விடாமல் செய்தனர்.தங்களுக்கு சகாயம் செய்த திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருச்சி சவுந்தர்ராஜன் போன்றவர்கள் கூட, தாங்கள் இல்லாமல், ஜெ.,யை பார்க்க கூடாது என்ற நிலைக்கு மாற்றினர். எல்லா பாதகங்களையும் செய்து, தங்களை அதிகார இயந்திரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள சசிகலாவும், நடராஜனும் இதை செய்தனர்.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., விசுவாசிகளை, சசிகலாவால் பழிவாங்கினார்; சசிகலாவோ, ஜெ., விசுவாசிகளையே பழிவாங்கினார். நடராஜனும், சசிகலாவும் தமிழகத்தை கொள்ளை அடிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தவர்களை, ஜெ.,யின் பார்வையில் படாமல் துரத்தினர். ஜெ.,யை துாக்கி வளர்த்த மாதவன் நாயர், அவரின் அன்பை பெற்றார் என்பதற்காக, 35 ஆண்டுகள் பணியாற்றிய அவரை, ’36 ஆயிரம் ரூபாய் வங்கியில் வைத்துள்ளார்’ என்று காரணம் காட்டி, ஓரம் கட்டியது சசிகலாவும், நடராஜனும் தான்.

இதெல்லாம் ஒரு காலத்தில் கோடி, கோடியாக கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவும், தன் சொந்த, பந்தங்களை மாத்திரமே வாழ வைக்கலாம் என்பதற்கான சசிகலா, நடராஜனின் கூட்டுத் திட்டமே காரணம். தங்களது சொந்தங்களுக்காக, தமிழகத்தில் ஆட்சி இயந்திரத்தை சசிகலாவும், நடராஜனும் உருக்குலைத்து விட்டனர். இந்த சசிகலா, எம்.ஜி.ஆர்., ஆளுமல்ல, ஜெயலலிதாவின் ஆளுமல்ல; சசிகலா சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு முழுவதுமாக உணரும்; அப்போது கூட ஜெயலலிதா உணரமாட்டார்.

சசிகலா புஷ்பா கணவர் மீது கொலைவெறித் தாக்குதல்: அதிமுக அலுவலகத்தில் ரத்தக் களறி

சென்னை:
டிச.29 நாளை அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் காலியாக உள்ள பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுவுடன் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஷ்வர திலகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு விருப்ப மனுவுடன் வந்தனர்.

இவர்கள் வரும் தகவல் காலை முதலே தீயாக பரவியதால் ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிக்கப்பட்டனர். விருகை வி.ன். ரவி , ஈரோடு சிந்து ரவிச்சந்திரன் , மகளிர் அணி வேளாங்கன்னி தலைமையில் ஆட்கள் குவிக்கப்பட்டனர். சசிகலாவின் கணவர் திலகர் உள்ளே நுழைந்தவுடனே அவனை கொல்லுடா , வெட்டுடா என்ற கோஷத்துடன் சரமாரியாக தாக்கினர். கீழே விழுந்த அவரை மிதி மிதி என்று மிதித்தனர்.
தனி நபராக மாட்டிக் கொண்ட திலகரின் மூக்கு வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. அடி வாங்குவது சசிகலாவின் கணவர் என முதலில் யாருக்கும் தெரியவில்லை. தர்ம அடி வாங்கி கொண்டிருந்த திலகரை அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் காப்பாற்றி அழைத்து சென்றனர்.
சசிகலா புஷ்பா அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சசிகலா புஷ்பா தரப்பினர் இதைத் தான் விரும்பி இருக்கலாம் என்றும், மனு தாக்கல் செய்ய விடாமல் வன்முறையில் ஈடுபட்டதால், பொது செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை கேட்டு நீதிமன்றத்தை நாடக் கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?: ஜெ.,வை பலிகடாவாக்கும் ராம மோகன ராவ்

 

சென்னை:
ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? என்று தனது தவறுகளுக்கு புகலிடம் தேடும் வகையில் ஜெ.,வை பலிகடாவாக்கி பேட்டி அளித்தார் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ள தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ். மேலும் ”என் மீது குறி வைத்துள்ளனர்; என் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்றும் கூறினார்.

ஊடகங்களுக்கு பேட்டி:

சென்னை, அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் டிச.27 இன்று காலை 10:50 க்கு ஊடகத்தினரை வரவழைத்து பேட்டி அளித்தார் ராம மோகன ராவ்.
அப்போது அவர் பேசியவை:
வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு ஆதரவு தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்., துணை தலைவர் ராகுல், அ.தி.மு.க., – எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் தீரன் ஆகியோருக்கு நன்றி.

என் வீட்டில், துணை ராணுவம் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துணையுடன் சோதனை நடந்துள்ளது. அவர்கள் என்ன கண்டுபிடித்தனர் என்பது குறித்த ‛பஞ்சநாமா’ எனப்படும் அவர்கள் அளித்த இரண்டு அறிக்கைகள் உள்ளன.

ஒன்று, என் வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள், தலைமைச் செயலகத்தில் என் அறையில் எடுக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பது குறித்த அறிக்கைககள். இப்போதும் நான் தமிழக தலைமைச் செயலாளர் தான். எனக்கு இன்னும் பணியிட மாற்றல் உத்தரவை தமிழக அரசு அளிக்கவில்லை. இப்போது உள்ள தலைமைச் செயலர் அனேகமாக பொறுப்பு தலைமைச் செயலாளராகத்தான் நியமிக்கப் பட்டிருப்பார்களென்று நினைக்கிறேன்.

தலைமைச் செயலாளர் அறையில் சோதனை நடந்தது என்பது அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல். இதைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. என் வீட்டில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் என்னை வீட்டுச் சிறையில் வைத்தனர். அப்போது என் வீட்டில் என் மனைவி, என் மகள், என் மகளின் மகள் ஆகியோர் மட்டுமே இருந்தனர்.

என் வீட்டில் இருந்து, ரூ.1,12,320, என் மனைவி மற்றும் மகளுக்கு சொந்தமான, 40 முதல் 50 சவரன் நகைகள்; 25 கிலோ வெள்ளி சுவாமி சிலைகள் ஆகியவற்றை மட்டுமே, வருமான வரித் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

ரகசிய ஆவணங்கள் எதையும் அவர்கள் கைப்பற்றவில்லை. என் வீட்டுக்கு வருமான வரித்துறையினர், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், டிச.21 அதிகாலை, 5:30க்கு வந்தனர். வந்த உடன் வீட்டைப் பூட்டி விட்டனர். என்னை வீட்டுச் சிறையில் வைத்தனர். அவர்கள் ஒரு ‛சர்ச்’ வாரன்ட்’ காட்டினர். அதில் என் பெயர் இல்லை. என் பெயரில் சர்ச் வாரன்ட் இல்லாமல், என் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

என் மகன் விவேக் பெயர் அந்த சர்ச் வாரன்ட்டில் இருந்தது. என் மகன் அமெரி்க்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பில் எம்.எஸ்., பட்டம் பெற்றவர். படித்து முடித்து விட்டு நாடு திரும்பிய பிறகு ஒரு வாரம் கூட அவர் என் வீட்டில் தங்கவில்லை. அவர் தனியாகத் தான் இருந்தார்.

தலைமைச் செயலகத்தில் என் அறையில் இருந்து எம்.ஆர்.சி., கிளப்பின் பில்களை மட்டுமே அவர்களால் கைப்பற்ற முடிந்தது. அது தவிர சில உதிரி காகிதங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவை, மக்கள் என்னிடம் அளித்த மனுக்கள். தலைமைச் செயலாளர் அறை என்பது, முதல்வரின் ரகசிய ஆவணங்கள் உள்ள அறை. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீதான கிரிமினல் வழக்குகளுக்கான ஆவணங்கள் உள்ள அறை. அந்த அறையில் சோதனை நடத்த, முதல்வர், உள்துறைச் செயலாளரிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.

புரட்சித் தலைவி ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

நான் புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவன். 1994ஆம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டராக இருந்த நாள் முதல், அவரால் பயிற்சி அளிக்கப்பட்டவன். நான், 32 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகப் பணியாற்றியவன். எனக்கே, இந்த கதி என்றால் அ.தி.முக., தொண்டர்களின் கதி என்ன? மக்களின் கதி என்ன? என் வீட்டிலும், அலுவலக அறையிலும் சோதனை நடத்த வேண்டும் என்றால், முதலில் என்னை அப்பொறுப்பில் இருந்து டிரான்ஸ்பர் செய்திருக்க வேண்டும். என்னை டிரான்ஸ்பர் செய்ய, இரண்டு நிமிடங்கள் போதும். மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசுக்கு இதற்கான உத்தரவு அளித்து இருந்தால், டிரான்ஸ்பர் செய்திருப்பார்கள்.

என் வீட்டில், என்னையும் என் குடும்பத்தினரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறையினருக்கு என்னிடம் இருந்து என்ன தேவை என்பது புரியவில்லை. முதல்வர் ஜெயலலிதா 75 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அவரது உடல் நிலை நிலவரத்தை கவனித்து வந்தேன். அதன் பின், ‛வர்தா’ புயல் பாதிப்புக்கான நிவாரணப் பணிகளில் இருந்தேன்.

தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. மாநில அரசு மீது எந்த மரியாதையும் அவர்களுக்கு இல்லை. என் மருமகள் நிறைமாத கர்ப்பிணி. அவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். என் உயிருக்கு ஆபத்து. எனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

– இவ்வாறு ராம மோகன் ராவ் கூறினார்.

இதனிடையே, ராமமோகன் ராவ் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது தவறு என்றும், தனது தவறை திசை திருப்பப் பார்க்கிறார் என்றும் கிறிஸ்துதாஸ் காந்தி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.,) கருத்து தெரிவித்துள்ளார்.

தன் மீதான விசாரணையைத் தடுக்கும் விதமாக அவர் பேசியுள்ளதாக வழக்கறிஞர் நளினி கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தருவதாகக் கூறிய அவர், தன் கருத்தைத் தெரிவித்த பின்னர், செய்தியாளர்களின் கேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை. பேட்டியை அத்துடன் முடித்துக் கொண்டு கிளம்பினார்.

மணல் ஒப்பந்த நிறுவனங்கள், மகன் விவேக் நிறுவனங்கள் குறித்த எந்தக் கேள்விகளையும் அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

இதனிடையே இவரது பேட்டி குறித்த செய்தி வெளியானதும், தனது தவறுகளுக்கு ஜெயலலிதாவை கேடயம் ஆக்கி, அவர் பெயரை பலிகடாவாக்கியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவியுள்ளன.

இனி, மத்திய பாதுகாப்புப் படையோ, வருமான வரித்துறையோ மாநில அரசின் அதிகார மட்டத்தில் நடக்கும் தவறுகளை சோதனையிட வேண்டுமென்றால், பாஸ்போர்ட் விசா, அனுமதிகளெல்லாம் முறைப்படி பெற்று பின்னர் வர வேண்டும் என்றும் கேலியாக கருத்துகள் பரவுகின்றன.

ரயில் விபத்து: இழப்பீடு தொகை ரூ.8 லட்சமாக அதிகரிப்பு

ரயில் விபத்தில் உயிரிழப்பவர்கோருக்கான இழப்பீடு தொகையை 4 லட்சத்திலிருந்து 8 லட்சம் ரூபாயாக ரயில்வே அதிகரித்துள்ளது.

ஜன., 1 முதல் அமல்: ரயில் விபத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயம் அடைபவர்களுக்கு ரயில்வே துறையிலிருந்து இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, ரயில் விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. அந்த தொகை, தற்போது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜன.,1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரயில்வே துறை ஏ.டி.ஜி., அனில் சக்சேனோ தெரிவித்துள்ளார்.

0.92 பைசா திட்டம்: முன்னதாக, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் ரயில்வே இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 0.92 பைசா கட்டணத்தில் இன்சுரன்ஸ் காப்பீடு வழங்கும் திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு நாடகம்!

நாடகக்காரருடன் நாடகக்காரர் சந்திப்பு!

எல்லாமே நாடகம்தான்!

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகத் திரளும் எம்.எல்.ஏ.க்கள்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழுந்தது.

முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்ற நிலையில், பொதுச்செயலாளராக சசிகலா காய் நகர்த்தி வருகிறார்.

அ.தி.மு.கவின் இரண்டாம் கட்டதலைவர்கள், சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும்படி கோரிக்கை வைத்தார்கள்.

இன்னும் ஒருபடி மேலே போய், சசிகலாவே முதல்வராக வேர வேண்டும் என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு செயற்குழு கூட இருக்கிறது. இதில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதற்கிடையே, முதல்வர் ஓ.பி.எஸ்., சசிகலாவுக்கு எதிராக அணி சேர்க்கத்துவங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களிடம் சிலர் இப்போது ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக கேன்வாஸ் செய்து வருகிறார்கள்.

“இதுவரை நாம் சம்பாத்தித்ததை எல்லாம், அம்மா பெயரச் சொல்லி, சசிகலாவே பிடுங்கிக்கொண்டார். தவிர நம்மை அடிமையிலும் அடிமையாக நடத்தினார்.

இனியும் அப்படி நடக்கக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருந்து ஓ.பி.எஸ்ஸை ஆதரிக்க வேண்டும். மீதி இருககும் ஆட்சிக் காலத்தில் நியாயமான(!) கமிசன் கொடுத்தால் போதும்.

ஓ.பி.எஸ்ஸுக்கு மத்திய பாஜக அரசின் ஆதரவு இருக்கிறது. ஆகவே நாம் சசிகலாவுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ பயப்பட வேண்டியதில்லை. தவிர, சொத்துக்குவிப்பு வழக்கு விரைவில் வரப்போகிறது.

சசிகலாவும் மற்றவர்களும் சிறைக்குச் செல்லப்போவது உறுதி.” என்று இவர்கள் கூறி எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு தெரவித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது கடும் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏக்கள் வெளியில் ஏதும் சொல்ல முடியாத நிலையில் இருந்தார்கள்.

தற்போது தங்கள் ஆத்திரத்தை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைத்திருப்பதால், பெரும்பாலான.. அதாவது 90 சதவிகித எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

அதே போல அ.தி.மு.க. எம்.பிக்களில் பெரும்பாலோரும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள்.

அதிகார பலம் கொண்ட, எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ். பக்கம் வந்ததால் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை வளைப்பது எளிது என்பதால், முதலில் இந்த கேன்வாஸ் நடந்தது.

ஆனால், கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே சசிகலா எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், தகுந்த தலைமை இல்லாததால் அவர்கள் வெளிப்படையாக அணிதிரளவில்லை.

இப்போது ஓ.பி.எஸ். தயாராக இருப்பதால் அவரது தலைமையின் கீழ் இயங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம், “பொதுக்குழு கூடும் வரை அமைதியாக இருங்கள். கூட்டத்தில் பார்த்துக்கொள்ளலாம்” என ஓ.பி.எஸ். சார்பில் சொல்லப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பாடலாசிரியர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் நண்பர்களே!: முருகன் மந்திரம்

இந்திய சினிமாவைப்பொறுத்த வரை ஒரு திரைப்படத்தின் பங்களிப்பில் பாடல்கள் மிக முக்கியமான இடத்தை கொண்டுள்ளன. ஆரம்ப கட்டத்தில். 40 பாடல்கள் இடம் பெற்ற படங்கள் கூட இருப்பதாக சொல்வார்கள். இன்றும் கூட பல படங்களை பார்க்கவும் அந்த படத்தின் வெற்றிக்கும் முன் வெளியீடாக வரும் பாடல்கள் மிகப்பெரிய காரணமாக அமைகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களின் நிலை பற்றி சொல்ல வருத்தமாக இருக்கிறது. கோபமாகவும் இருக்கிறது.

சமீபத்தில் மேடை போட்டு நாட்டாமை பண்ணுகிற, ஒருவர் இயக்கிய படத்தில் நண்பர் ஒரு பாடல் எழுதி இருந்தார். அவரிடம் அந்த படம் பற்றி யதார்த்தமாக பேசும்போது, அந்த படத்தில் நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன், ஆனால் என் பெயரை போஸ்டரில் போடவில்லை. என் பெயரை போடுங்கள் என இயக்குநரிடம் கேட்டேன். உங்கள் பெயரை போட்டால் போஸ்டரின் அழகு குறைந்து விடும் என்று சொன்னதோடு கடைசி வரை போஸ்டரில் பெயரே போடாமல் விட்டுவிட்டார்கள் என்று வருத்தப்பட்டார். இத்தனைக்கும் அவர் எழுதிய முதல் பாடலே பெரிய ஹிட் பாடல் தான்.

சமீபத்தில் நானும் இன்னும் இரண்டு பாடலாசிரியர்களும் பாடல் எழுதியுள்ள ஒரு படத்தோட போஸ்டர் வந்தது. அடடா.. நம்ம படமாச்சேன்னு போஸ்டர்ல பெயரை தேடுனா… என் பேரு மட்டுமில்ல… மற்ற பாடலாசிரியர்கள் பெயரும் இல்ல. படம் சம்பந்தமாக பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட செய்திகள், படத்தின் விக்கிபீடியா பக்கம்… எதுலயும் பாடலாசிரியர்கள் பெயர் இல்ல.

இசையமைப்பாளர்களையும் இயக்குநர்களையும் நெருங்கிய நண்பர்களாக கொண்டவர்கள் கூட சில நேரங்களில் இப்படி பாதிக்கப்படுகிறார்கள். வளர்ந்த பாடலாசிரியர்கள் பெயரை விரும்பி போஸ்டரில், செய்திகளில் போடுகிறார்கள். ஆனால், வளர்ந்து வரும் பாடலாசிரியர்கள் விரும்பி கெஞ்சி கேட்டால் கூட மறுத்துவிடுகிறார்கள். சிலர், பத்து பல்லவி, இருபது சரணம் என எழுதி வாங்குகிறார்கள். ஆனால் அதற்கு சரியாக சன்மானமும் கொடுப்பதில்லை. பெயருக்கான அங்கீகாரத்தையும் கொடுப்பதில்லை. வளர்ந்து வரும் பாடலாசிரியர்களின் சன்மானம் பற்றி கேட்டால் உங்களுக்கு மயக்கமே வரும். ரெண்டாயிரம், மூவாயிரங்களைத்தாண்டி பத்தாயிரம் தொட்டுவிட்டால் பெரிய அதிசயம் அது.

ஒரு ஹிட் பாடலின் வரிகளுக்கு சொந்தக்கார பாடலாசிரியர், டிவிக்களில் என் பாட்டு வரும்போது, வேறு ஒருவர் பெயரை போடுகிறார்கள் என்று கண் கலங்கினார்.

தொடர்ந்து பெரிய படம், பெரிய இசையமைப்பாளருக்கு பாடல் எழுதும் நண்பர் ஒருவரின் நிலை வேறு மாதிரி. பாட்டு ஹிட் தான். ஆனா, பத்து பைசா கூட இன்னும் கையில கெடைக்கல தலைவா…. என படம் வெளியாகி நான்கு மாதங்கள் கழிந்தபின்னும் புலம்புகிறார் அவர்.

ஒரு மிகப்பெரிய படத்தின் பாடலாசிரியர் அவர். ஒரு புது படத்திற்காக பாட்டு எழுதச்சொல்லி அழைத்திருக்கிறார்கள். மெட்டு கொடுத்து எழுதச்சொல்லிவிட்டார்கள். அவரும் பாடல் எழுதிக்கொடுத்து விட்டு வேறு வேலை பார்க்க போய்விட்டார். ஒருநாள் படத்தின் இசைவெளியீடு சம்பந்தமான செய்திகளை பார்த்தார். இயக்குநருக்கு போன் செய்தார். இயக்குநர் போன் அட்டெண்ட் பண்ணவில்லை. இசையமைப்பாளரும் அப்படியே. படத்தில் அவர் எழுதிய பாடல் படம் இடம்பெறவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அதற்காக அவருக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. போன் மேல போன் போட்டு பார்த்து ஓய்ந்துவிட்ட அவர், என்னிடம் சொன்னது. பாட்டெழுதி கேட்கிறப்போ… அப்டி பேசுனாங்க சார்… இப்போ படத்தில் பாட்டு இல்லைங்கிறது விஷயமில்ல. பத்து பைசா தரலேங்கிறதும் கூட ஒரு விஷயமில்லை சார். அதை எங்கிட்ட முறையாக ஒருத்தரும் சொல்லலையேங்கிறது தான் என் வருத்தம் என்றார்.

போஸ்டர், செய்திகள், விக்கிபீடியா, ஃபேஸ்புக் பக்கங்கள் எதிலும் பாடலாசிரியர்கள் பெயரை போடாமல், கொட்டை எழுத்துல “ஆடியோ வெளியீடு”ன்னு மட்டும் போடுறதைப் பார்த்தா, கடுப்பா இருக்கிறதை விட, காமெடியாகவும் வருத்தமாகவும் இருக்கு.

பெயருக்கும் பணத்துக்கும் தான் இந்த போராட்டம். சொந்த ஊர், பெத்த அப்பா, அம்மா, உறவுகள், நண்பர்கள்… எல்லாத்தையும் விட்டுட்டு சென்னைக்கு ஓடி வந்து பல வருடங்களாக போராடி ஒரு இடத்துக்கு வர பாடலாசியர்கள் மட்டுமில்ல, ஒவ்வொரு சினிமாக்காரனும் படுற கஷ்டம் ரொம்ப ரொம்ப பெரிசு. அவங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்யுங்கள் நண்பர்களே. சம்பளமோ, சன்மானமோ… அதை கொஞ்சமா கொடுத்தாக்கூட பரவாயில்லை. ஆனா, மறக்காம அவங்களோட உழைப்புக்கான அங்கீகாரத்தை, அவங்களோட பெயர்களுக்கு கொடுங்க. அவ்ளோ பெரிய போஸ்டர்ல பாடலாசிரியர்கள் பெயரையும் சேர்த்து போடுறதுல ஒண்ணும் கெட்டுப்போகப் போறது இல்ல. அதோட படத்தோட செய்திகள், போஸ்டர் இந்த மாதிரி எதுலயும் பெயர் இல்லைன்னா, சில நேரங்களில்… பிரபலமான ஆடியோ இணைய தளங்களான… ITunes, Saavn, Gaana, Raaga, Hungama, இது போன்ற பிற தளங்கள் எதுலயும் பாடலாசிரியர்கள் பெயர் வராமல் போகிறது.

செய்திகள், மேடைகள், போஸ்டர்ஸ், டிரெய்லர்ல.. அவங்களுக்கான சின்ன அங்கீகாரத்தை கொடுத்தீங்கன்னா, அவங்களோட வளர்ச்சிக்கு நீங்களும் ஒரு சின்ன காரணமா இருப்பீங்க… அவங்க உங்க வளர்ச்சிக்கு ஒரு சின்ன காரணமா இருக்கிற மாதிரி. அதை விட்டுட்டு அவங்க வாயிலயும் வயித்துலயும் அடிச்சு துரோகம் பண்ணாதீங்க. இது என் அன்பான வேண்டுகோள் சினிமா நண்பர்களே.

அதே நேரத்தில் பாடலாசிரியர்களை அக்கறையோடும் அன்போடும் கவனித்து அவர்களுக்கான மரியாதையையும் அங்கீகாரத்தையும் தருகிறவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அனைவருக்கும் அன்பின் நன்றி.

Friends!, Do not betray the Lyricists.

– Requisition from Murugan Manthiram

According to Indian cinema, songs play a very vital role in movies. There have been movies consisting of 40 songs in the olden days of movies.

Even today there are movies which is been watched for its songs. The music which releases before the movie sometime becomes a big reason for people to watch the movie and to make the movie a success.

But, the situation of the lyricists in Tamil cinema makes me sad and angry too.

A movie directed who is one of the big shots in today’s times has refused to mention the lyricists name in the movie posters. And when the Lyricist asked about the same, the director replies that adding the lyricist name in the poster would lessen the beauty of it. In fact the very first song of that particular lyricist who is also my friend was a big hit.

Besides this, when I eagerly went through a recent movie poster in which I had written songs, I was taken back to notice that my name along with the other two lyricist names was not mentioned at all. Our names were well neglected in the movie press release other promotional materials also.

Though the Directors and Producers of the movie happen to be our close friends, our name does not necessarily appear on the publicity forums. It is realized that movies tend to publicize only famous and renowned lyricist names and not the budding ones of the industry.

There are movie directors who get 10 phrases and 20 stanzas for a single song, and fail to pay the lyricist with appropriate fee and recognition too. You would faint if you get to know what the growing lyricists are getting paid today. It seems to be a miracle if anyone is paying them more than two or three thousands and it never exceeds a maximum of ten thousand.

A lyricist, who wrote for one of the recent hit song, claims that it was some other name mentioned as the lyricist instead of his name when seen in the televisions. He literally had tears in his eyes!

Sometimes lyricists who continuously write for big productions and successful directors also complain about not being paid even after four months of the movie release though the song becomes a hit.

It is irritating and same time funny to witness absolutely no mentions of the lyricist names in the movie posters, face book pages, Wikipedia links and any form of publicity for that matter when the news is about the “Audio Release” of the movie.

Not only the lyricist, in fact these struggles are faced by every growing artist in the industry while aiming for fame and wealth. They leave their parents, home town and all their comforts to reach Chennai and start aspiring their dreams and expectations. I would request my friends to extend their help to such budding talents.

Whether it is small or big, a salary or a reward, I request my friends to give their name the recognition they deserve.

All I request is that, adding names of such lyricists in the movie posters, social forums and press releases is definitely not going to work against the movie promotions. On top of that, neglecting names from such publicity materials will sometimes totally neglect the names appearing in renowned audio websites like iTunes, Saavn, Gaana, Raaga and Hungama and etc.

It would be a great opportunity for the lyricist and other growing artists if the movie news, trailers, posters and stages would mention their names. The growth and benefits would be mutual from the artist and the Producer/Director side.  I also humbly request not to betray them and pull them down.

Never the less i would also like to mention that there are a many of them who treat the lyricists with love and care and give them the respect and recognition they deserve. I extend my hearty thanks to such people.