Home Blog Page 5720

வெற்றி பாதையில் திமுக – ஸ்டாலினின் முதல் வெற்றி

 

800px Mkspicture - 2026
திரு ஸ்டாலின், திமுக, தமிழ்நாடு

திரு ஸ்டாலின் அவர்களின் உழைப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அசர வைத்து விட்டார். தோல்வி மேல் தோல்வி. 2009ல் 2ஜீ, 3ஜீ என அனைத்து ஊழலில் சிக்கித்தவித்து தத்தளித்தது கட்சி. 2011ல் ஆட்சி இழப்பு. மிக மோசமான தோல்வி. 2013ல் சொந்த பந்தங்களுடன், கட்சி நிர்வாகிகளால் காங்கிரஸிடமிருந்து விலகல். 2014 தேர்தலில் மீண்டும் தோல்வி என்று சிக்கித் தத்தளித்து கொண்டிருந்த திமுக வை நிச்சயம் மீட்டெடுத்தார் என்பதில் சந்தேகமேயில்லை. ஊடகங்கள் என்னத்தான் திமுக வெற்றி பெறும் என்று சொன்னாலும், தன் கட்சியுடன் கூட்டணியாக வந்து சேர்ந்த அனைவரும் வெளியே சென்றாலும், காங்கிரஸ் என்ற சுமையை தோளில் தூக்க வேண்டிய கட்டாயம் வந்தாலும் அனைத்தையும் சமாளித்து நல்லதோரு ஊக்கமான வெற்றியை திமுகவிற்கு பெற்று தந்து தன்னால்தான் திமுக என்பதை நிலைநாட்டி உள்ளார். திமுகவிற்கு 25 சதவீததிற்கும் கீழே சென்ற வாக்குகளை தன் கடின உழைப்பினால், 32 சதவீதத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார், மேலும் தமிழகத்தில் தேடி பார்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் காங்கிரஸிருக்கு கிடைத்த 6 சதவீதமும் இவரால் தான் என்று நிச்சயம் கூறலாம். சில சமயம் தோல்வியிலும் வெற்றியை பார்க்க வேண்டும். அதிமுக வெற்றி பெற்றாலும் கிட்டதட்ட 89 இடங்களை பெற்று பலம் வாய்ந்த எதிர் கட்சியாக வந்திருக்கிறார். பல முனை போட்டியாக இருந்த தமிழகத்தை, இருமுகமாக மாற்றிய ஸ்டாலினை பாராட்டியே ஆக வேண்டும்.#நினைத்தேன்சொன்னேன்

புத்தாண்டு வாழ்த்துரையில் சலுகைகளை அறிவித்தார் பிரதமர் மோடி

புதுடில்லி:

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரை நிகழ்த்துவதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை உரை நிகழ்த்தினார்.

அதன் சாராம்சம்:

வீடு இல்லாத ஏழைகள் குறைந்த வட்டியில் கடன் பெற 2 புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று புத்தாண்டு உரை நிகழ்த்தினார். அதில், புதிய ஆண்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார். குறிப்பாக, விவசாயிகள், கிராம மக்கள், கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், சிறு, குறு வணிகர்கள் ஆகியோருக்கான திட்டங்களை பிரதமர் அறிவித்தார்

* தீபாவளிக்கு பிறகு, நமது தேசத்தில் கறுப்பு பணத்தை ஒழிக்க முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது நீண்ட நாள் பயன் தரும்.

* ஊழலும், கறுப்பு பணமும் நல்லவர்களை வீழ்த்தி விடுகிறது.

* புதிய முயற்சிகளுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

* ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற துடிப்பு மக்களிடம் உள்ளது. அரசின் நடவடிக்கை நாட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்ற மரபு காப்பாற்றப்பட்டுள்ளது.

* இந்த அரசு நேர்மையான மக்களின் நண்பன்

* இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளம் அமைத்துள்ளோம்

* புது வருடத்தில் வங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.

* 50 நாட்களில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றம் கண்டுள்ளது.

நேர்மையற்றவர்களை திருத்தும்

* அரசு நேர்மையானவர்களை ஊக்குவிக்கும், நேர்மையற்றவர்களை திருத்தும்

* அரசின் நடவடிக்கையில், அரசு அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது

* தவறு செய்த வங்கி அதிகாரிகளை தண்டனை பெறுவது உறுதி

கூடுதல் பொறுப்பு உள்ளது

* தொழில்நுட்ப உதவியோடு தவறு செய்வது பல வழிகளில் தடுக்கப்படும்

* வங்கி அதிகாரிகள் அரசின் நடவடிக்கைக்கு பெரும் ஒத்துழைப்பு அளித்தனர்

* சில அதிகாரிகள் பெரிய அளவில் தவறு செய்துள்ளார்கள். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்

வீடு கட்ட 2 புதிய திட்டங்கள்

* சாமனிய மக்கள் கையில் அதிகாரம் வர பாடுபடுவோம்

* புதிய வருடத்தில், புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்

* சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் பலர் வீடில்லாமல் உள்ளார்கள்

* ஏழைகள் வீடு கட்ட 2 புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்

* ரூ.12 லட்சம் வரை வீட்டுகடன்; 3 சதவீத வட்டி தள்ளுபடி

* வீடுகளை புனரமைக்க ரூ. 2 லட்சம் கடன்

விவசாயிகளுக்கு முன்னுரிமை

* கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு அதிகளவு கடன் வழங்கப்படும்

* விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.20,000 கோடி

* விவசாயிகளின் கடன் அட்டைகளை ரூபே அட்டைகளாக மாற்றப்படும்

* விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே மானியம் மற்றும் கடன் செலுத்தப்படும்

சிறு வணிகர்களுக்கு கடன்

* சிறு, குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்

* சிறு வணிகர்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைக்கப்படும்

கர்ப்பிணி பெண்களுக்கு புதிய திட்டம்

* 650 மாவட்டங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள் ரூ.7.5 லட்சம் 10 ஆண்டுகளுக்கு டிபாசிட் செய்தால் 8 சதவீதம் வட்டி

ரொக்கமற்ற பரிவர்த்தனை
* ரொக்கமற்ற பரிவர்த்னை அதிகம் பயன்படுத்த வேண்டும். பீம் ஆப்பை அதிகம் பயன்படுத்துங்கள்.
புத்தாண்டில் பல சவால்கள் காத்திருக்கின்றன. அனைத்து தடைகளையும் தகர்த்து புது எதிர்காலம் படைப்போம்  என்று பேசினார்.

பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றும் உரை: நேரலை

புது தில்லி:

பிரதமர் நரேந்திர  மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையின் நேரலை:

பிரதமர் மோடி 7.30 மணிக்கு பேசியதன் தமிழாக்கம்(ஏறத்தாழ)…!!

இது ஒரு போர் .. !!

உண்மையை பேசுகிறேன் ,,
கண்டிப்பா இதை செய்வேன் ,, !!

இந்த நாட்டை முன்னேற்றி காட்டுவேன் .. எதிர் கட்சிகள் எதற்கு எதிர்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை …!!
நான் சொல்வது இப்போது கசப்பாக தெரியும் ..
ஆனால் என்றாவது ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்.

நம்முடைய விருப்பு வெறுப்பையெல்லாம் கொஞ்சம் சகித்து கொள்ள வேண்டும்.
இதுவரை வங்கிகளுக்கு போகாத சாதாரண மக்கள் கூட வங்கிகளுக்கு போக ஆரம்பித்து விட்டார்கள்.
பணத்தை எடுக்க நீங்கள் மிகவும் கஷ்டப் பட்டத்தையும் நான் அறிவேன்.சாதாரணமாக போர்க்காலங்களில் மக்கள் காட்டும் நாட்டுப்பற்றை இந்தவிஷயத்திலும் காட்டி ஒத்துழைத்திருப்பது மிகவும் வியப்புக்குரியது.
இது ஒரு மிகப்பெரிய சாதனை.அவர்கள் தியாகம் வீண்போகாது.

கருப்பு பண நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கை எடுத்திருக்கும் இந்த நேரத்தில் , தேச பற்று உள்ள லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் இப்போது இருந்தால் இந்த திடடத்தை பாராட்டி இருப்பார்கள் , அவர்களை போல் நாம் ஒவ்வொரு வரும் தேசத்துக்காக மாறவேண்டும்.

முன்பைவிட மக்களுக்கு இப்போது தேச பற்று அதிகம் வந்து விட்டது.

எங்கள் அரசு மீது இன்று நீங்கள் கோப படலாம். ஆனால் ஒரு நாள் கண்டிப்பாக நினைப்பீர்கள்.

அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்த அன்பு எனக்கு மிக பெரிய ஆசியே.. சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை செய்து அரசாங்கத்தை மிக தெளிவாக நடத்துவோம்.

நல்லவனுக்கு எங்கள் அரசாங்கம் நல்லது தான்.
ஆனால் கெடடவனுக்கு கெட்ட அரசாங்கமே, அரசின் முக்கிய நோக்கம் நேர்மையானவர்களை எப்படி காப்பது என்பதே.நேர்மையானவர்கள் பக்கம் எனது அரசு எப்போதும் துணைநிற்கும்.

தீவிரவாதிகளுக்கு இந்த அரசாங்கம் கசப்பாக தான் தெரியும். தவறு செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கபடுவார்கள் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.தவறிழைப்பவர்கள்,தவறிழைத்தவர்கள்
மீது நடவடிக்கைகள் தொடரும்.

இவ்வளவு குறைந்த நாளில் எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய மாற்றத்தை யாரும் உருவாக்கியதில்லை.பாமர மக்களுக்கு,நடுத்தர மக்களுக்கு வீடு வாங்குவது கனவாக இருந்தது.
அது முடிவு வரும்.தலித்,சிறுபான்மையினர்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு 9 லட்சம்
வரையிலான கடனுக்கு 4% அளவிலும் 12லட்சம்
வரையிலான கடனுக்கு 3% அளவிலும் வட்டி தள்ளுபடியாகும்.

விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் ருப்பே கார்டுகளாக மாற்றப்பட்டு கூட்டுறவு வங்கிகளின் மீது அதிக கடன் வழங்கப்படும்.
அதற்காக 20000 கோடிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.மூன்றுகோடி விவசாயிகளுக்கு கார்டுகள் மாற்றப்படும்.
குறிப்பிட்ட சில விவசாய கடன்களுக்கு முதல்
60 நாட்களுக்கு வட்டியை அரசே செலுத்தும்.

மூத்தகுடிமகன்களின் வைப்புநிதிகளுக்கு 8% வட்டி வழங்கப்படும்.

சிறு,குறு தொழில்களுக்கு கடன் உத்தரவாத தொகை 1 கோடியிலிருந்து 2 கோடிகளாக உயர்த்தபடுகிறது.சிறு வியாபாரிகளுக்கு 2கோடிவரை அரசே பிணை உத்தரவாதம் வழங்கும்.

கர்ப்பிணிப்பெண்களுக்கு 6000 உதவித்தொகை
வழங்கப்படும்.

ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் மேல் என
ஒப்புக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 24லட்சம் பேர்களே என்பது ஏற்க கூடியதா?

பொருளாதாரத்திற்கு வெளியே இருந்த கருப்பு பணம் தொழில் நுட்ப உதவியுடன் உள்ளே வந்து விட்டது.

பீம் செயலி பயன்படுத்த கோருகிறேன்.

நபார்டு மூலம் சென்றமாதம் 20000 கோடியாக வழங்கப்பட்ட கடன் வரும் மாதம் 41000 கோடியாக உயர்த்தபடுகிறது.

பண மதிப்பிழப்பு முக்கிய புள்ளிகள் முகம் எப்படி பட்டது என்று தெரிந்து விட்டது.அதிகாரிகள் பலரின் முகத்திரை கிழிந்துவிட்டது.

நள்ளிரவு வரை வங்கிப்பணியாளர்கள் (பெண்களையும் சேர்த்து) பணியாற்றியது மிகவும் பாராட்டுதலுக்குரியது.பெரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியமைக்கு
பாராட்டுகள்.

நம் தேசத்தில் எல்லா மக்களுக்கும் சரியான திட்டங்களை வகுத்து கொடுப்போம் ,,

நாடாளுமன்றத்திற்கும் , சட்ட மன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முயற்சிப்போம்.

100 நுறு வருஷத்திற்கு பிறகு நம்ம நாடு எப்படி இருக்கணும், இதற்க்கு முன்னாள் எப்படி இருந்தது , என்பதை மனதில் வைத்தே திட்ட்ங்கள் ,,

ஊழலை எதிர்த்து மக்களும் அரசும் போராட வேண்டும். தீவிர வாதம் நோக்கி போன இளைஞர்கள் நல்வழிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.நக்ஸல்கள் ஒடுக்கபட்டுள்ளார்கள்.

தவறு செய்த வங்கி அதிகாரிகளுக்கு தணடனை கண்டிப்பாக உண்டு….!

(இது பேசியபோதே மொழிமாற்றம் செய்யபட்டதால் சில விடுபட்டிருக்கலாம்)

அம்மா வேடமிட்டு அவர் அமர்ந்த சீட்டில் சின்னம்மா!

சென்னை:
அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். போயஸ் இல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணியளவில் அவர் காரில் கிளம்பி, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் அதிமுக பொதுச்செயலாளருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டார்.
சசிகலாவின் உருவம், தோற்றத்தில் வேறுபாடு காணப்பட்டது. ஜெயலலிதாவை போன்ற சிகை அலங்காரத்துடன் சசிகலா காணப்பட்டார். ஜெயலலிதாவுக்கு பிடித்த பச்சை கலர் சேலையிலேயே சசிகலாவும் தோற்றமளித்தார். பின்பக்கமாக இருந்து பார்த்த தொண்டர்களுக்கு செல்வது ஜெயலலிதாவா, சசிகலாவா என சந்தேகத்தை வரவழைப்பதாக இருந்தது, அவரது சிகை அலங்காரம் என்பது குறிப்பிடத்தக்கது.

பூலோக வைகுண்டத்தில் ஏகாதசித் திருவிழா

திருவரங்கம்:

பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்று அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவமிக்கது. இதில் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் புதன்கிழமை துவங்குகிறது.

பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், நாலாயிரத் திவ்ய பிரபந்தமானது பகல்பத்து மற்றும் ராப்பத்து என 20 நாட்கள் அபிநயத்துடன் படிப்பதாகும். அதற்காக ஸ்ரீரங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று இந்த நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை படிக்கத் தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும். ஸ்ரீரங்கம் கோயிலில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் படிக்க ஆரம்பித்த உடன் மற்ற திவ்யதேசங்களில் இருந்து தெய்வப்பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருள்கின்றனர் என்பது ஐதீகம்.

இதனால், இக்கோயிலில் படிக்கும் திவ்ய பிரபந்தத்தை வேறு எங்கும் படிக்க மாட்டார்கள். அப்படி படித்தால் அதற்கு பலன் இருக்காது என்பது நம்பிக்கை. இந்நிகழ்ச்சி மூலஸ்தானம் முன்பாக உள்ள காயத்ரி மண்டபத்தில் புதன்கிழமையன்று இரவு 7 மணிக்கு துவங்கி தொடர்ந்து நடைபெறும்.

இதில் அரையர்கள், பட்டாச்சாரியார்கள் மட்டுமே கலந்துகொள்ள இயலும். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.

திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழிப் பாடல்களையும், மற்றைய ஆழ்வார்கள் பாடிச்சென்ற பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும் விதமாக பகல் பத்து உற்சவம் எனப் பெயரிட்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புமிக்க பகல் பத்து உற்சவம் 29ம் தேதி துவங்குகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் கோயில் வளாகத்தில் கண்ணைக் கவரும் வகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பகல் பத்து நிகழ்ச்சியின் 10ம் நாளான வரும் 7ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கும் வைபவம் நடைபெறும். ஜனவரி 8ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

இதையொட்டி, நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு தினமான 8ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் துவங்குகிறது.

ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம் தொடக்கம்: வைகுண்ட ஏகாதசி ஜன.8

வைகுண்ட ஏகாதசி 8.1.2017

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். இங்கே திருவரங்க ராஜா அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் இவ்விழா கடந்த டிச.28 அன்று இரவு 7 மணிக்கு கர்ப்பகிரகத்தில் திருநெடுந்தாண்டக பாராயணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல்பத்துத் திருநாள் 29-ம் தேதி தொடங்கியது. இந்தப் பகல் பத்து திருநாட்களில் உத்ஸவரான நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளுவது காணக் கண்கொள்ளாக் காட்சிதான். அவர் அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளி, அங்கே பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவில், பரமபத வாசல் திறப்பு பிரதான இடம் பெறும். சொர்க்க வாசல் திறப்பு என்று பாமர மக்களால் பய பக்தியுடன் போற்றிக் கொண்டாடப் படும் இந்த வைபவம், வரும் ஜனவரி 8-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும். அந்த தினத்தில் இருந்து ராப்பத்து திருநாள் தொடங்குகிறது. இந்த நாட்களில் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து திருநாளில் ஜனவரி14ஆம் தேதி திருக்கைத்தல சேவையும், 15ஆம் தேதி வேடுபறி,17ஆம் தேதி தீர்த்தவாரி, 18ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகியவை நடைபெறும்.

பாவூர்சத்திரம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

0

நெல்லை : பாவூர்சத்திரத்தில் பொதுமக்கள் சார்பில் கோட்ட துணை கண்காணிப்பாளர் ,ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பிளக்ஸ் வைத்துள்ளனர்
கீழப்பாவூர் ,தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கொண்ட கும்பலை பாவூர் சத்திரம் போலீசார் உடனடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கநகையை மீட்டனர்.
கடந்த வாரங்களில் தென்காசி, ஊத்துமலை ,பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்ப்படுத்தியது
பாவூர்சத்திரம் காவலர்கள் இரவு பகல் பாராது தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு தேடுதல் வேட்டையினை தீவிரப்படுதியன் பலனாக குற்றவாளிகள் பிடிபட்டனர் பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மேகநாதன் ,தலைமைக்காவலர்கள் அல்போன்ஸ் ,இம்மானுவேல்ஜெயசிங், ,சொரிமுத்து ,உதயசூரியன் ,பாலமுருகன் ,தனிப்படைச் சேர்ந்த மோகன் உள்ளிட்ட போலீசார் பாவூர்சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்தனர் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை பாராட்டும் விதமாக பிளக்ஸ் வைத்து தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்
காவல்துறையினரின் இந்தப் பணி தொடரவேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும்

ஜன.1 நாளை முதல் ஏ.டி.எம்.களில் ரூ.4,500 எடுக்கலாம்

புதுதில்லி:
ஜனவரி 1ம் தேதி முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.

ஏடிஎம்-மில் இருந்து ஒரு டெபிட் கார்டு மூலம் நாளொன்றுக்கு ரூ.2 ஆயிரம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் வங்கிகளில் நேரடியாக சென்று பணம் எடுக்கும்போது வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது. ஆனால், இந்த 24,000 ரூபாய், புதிய 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டிக்கொடுத்த ஸ்ரீ நரசிம்மர் ? திருடர்கள் கைது நகை மீட்பு

பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கொண்ட கும்பலை பாவூர் சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கநகையை மீட்டனர்.
கடந்த வாரங்களில் தென்காசி, ஊத்துமலை ,பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்ப்படுத்தியது
பாவூர்சத்திரம் காவலர்கள் விழாக்காலம் என்பதால் இரவு பகல் பாராது வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் இந்நிலையில் கடந்த 28.12.16 அன்று காலையில் கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவில் கதவுகளை உடைத்து திருட முயற்சி நடந்து இதில் உஷாரான காவல்துறை தேடுதல் வேட்டையினை தீவிரப்படுதியுள்ளனர் சம்பவதன்று
பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மேகநாதன் ,தலைமைக்காவலர்கள் அல்போன்ஸ் ,இம்மானுவேல்ஜெயசிங், ,சொரிமுத்து ,உதயசூரியன் ,தனிப்படைச் சேர்ந்த மோகன் உள்ளிட்ட போலீசார் பாவூர்சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் காவலர்களைக் கண்டதும் கையில்இருந்த பையை வீசியுள்ளார் இதில் சந்தேகபப்பட்டு போலீசார் விசாரிக்கும்போது அவர் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த நடராஜன்(39) என்பது தெரியவந்தது அவனது பதில் முன்னுக்கு பின் முரணான இருக்கவே சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் குறும்பலாப்பேரியைச் சேர்ந்த சேர்மத்துரை(23) மற்றும் மேலபட்டமுடையார்புரத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம்(39) ஆகியோர் கூட்டாக சேர்ந்து பாவூர்சத்திரம், கீழப்பாவூர், தென்காசி மற்றும் ஊத்துமலை பகுதிகளில் பகலில் நோட்டமிட்டு, இரவு நேரத்தில் வீடு புகுந்து திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து தங்கநகைகளை மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் திருட முயற்சி நடந்த அன்றே திருடர்கள் பிடிபட்டது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளது ஸ்ரீ நரசிம்மர் உக்கிரமானவர் தவறு செய்பவர்ககளை உடனே தண்டிப்பார் என்ற சொல் நிரூபணமாகியுள்ளது என்பதே மக்கள் மத்தியில் பெரும் பேச்சாக உள்ளது
திருடர்களைப் பிடித்த காவலர்களுக்கு வாழ்த்துகள்

அதிமுக., பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுவேன்: சசிகலா புஷ்பா

‘அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுவேன்; குறுக்கு வழியில், சசிகலா பொதுச்செயலராக விடமாட்டேன்’ என, சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

தேர்தல் அறிவிக்காமல், குறுக்கு வழியில், பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச்செயலராக சசிகலா திட்டமிட்டுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களை, பஸ்சில் அழைத்து வந்து, கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர். நான், அ.தி.மு.க., – எம்.பி.,யாக உள்ளேன்; கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளேன். நான் கட்சியில் இருந்து, நீக்கப்பட்டதற்கான கடிதம் எதுவும் எனக்கு வரவில்லை. என் கணவர் லிங்கேஸ்வரனும், கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளார். அவர், மும்பையை சேர்ந்த, பொதுக்குழு உறுப்பினர் மணி மற்றும் சிலருடன், கட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றார்.

ஜனநாயக முறைப்படி, போட்டியிட மனு கொடுக்க சென்றவரை, சசிகலாவின் ஆதரவாளர்கள் தாக்கி உள்ளனர். கட்சி அடிப்படை உறுப்பினரில், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஒன்றரை கோடி தொண்டர்கள் சேர்ந்து, பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும்.ஆனால், சசிகலா, குறுக்கு வழியில் பொதுச்செயலராக விரும்புகிறார். அவருக்கு ஆதரவு உள்ளது என்றால், முறைப்படி தேர்தலை நடத்தலாம். அவரை, தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும், பொதுச்செயலரை தேர்வு செய்ய முடியாது. போட்டியிட விரும்புவோருக்கு, வாய்ப்பு அளிக்க வேண்டும். நான், பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவேன்; சசிகலா, பொதுச்செயலராக விட மாட்டேன்; சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்தார்.