Home Blog Page 5719

பிரதமருக்கு மோடிக்கு முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் கடிதம்

இலங்கைச் சிறைகளில் உள்ள 51 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கைச் சிறைகளில் தமிழக மீனவர்கள் 51 பேர் அடைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் அனைவரும் விரைவாக விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என இலங்கை அமைச்சர் அறிவித்திருப்பதையும், இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருப்பதையும் ஓ.பன்னீர் செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இரு நாட்டு அமைச்சர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், வெளியாகியுள்ள இத்தகவல் ஏமாற்றத்தை அளிப்பதாக ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்களின் படகுகளை புதுப்பித்து, அவற்றை இலங்கை அரசு வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம், படகுகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியும் என்றும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கடன்களுக்கான வட்டி விகிதம்; வங்கிகள் குறைத்தன

கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகள் குறைத்துள்ளன. 

புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக நேற்று முன் தினம் உரையாற்றிய பிரதமர் மோடி வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு எதிரொலியாக நாட்டின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.9 சதவீதம் குறைத்துள்ளது.

அதன்படி ஒரு வருட கால கடன்களுக்கான வட்டி விகிதம் 8.9 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைந்துள்ளது. மற்ற கால வரைமுறை அளவிலான கடன்களுக்கான வட்டிகளும் 0.9 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளன. யூனியன் பேங்க் ஆப் இந்தியா 0.65 சதவீதம் அளவிற்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஐடிபிஐ வங்கி மூன்று
வருட கால நிர்ணய கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.4 சதவீத அளவிற்கு குறைத்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவையும் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை பெருமளவு அதிகரித்ததையடுத்து, இந்த வட்டிக் குறைப்பு அறிவிப்பை வங்கிகள் வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பையடுத்து வீட்டுக்கடன், கார் கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதம் கணிசமான அளவு குறையும்.

சசிகலா முதல்வராக வேண்டும் என ஏன் சொன்னேன்?: தம்பிதுரை விளக்கம்

சென்னை:

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உடனடியாக தமிழக முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள தம்பிதுரை. தான் ஏன் அவ்வாறு சொன்னேன் என்பதற்கான விளக்கங்களை செய்தியாளர்களிடம் அளித்தார்.

முன்னதாக இன்று (திங்கள்கிழமை) காலை சென்னை போயஸ் கார்டனுக்கு தனது மனைவியுடன் தம்பிதுரை வந்தார். சுமார் 1 மணி நேரம் போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா உடனடியாக தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என நேரில் வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் கூறினார்” என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “ஓபிஎஸ் தமிழக முதல்வராக தொடர்வதில் உங்களுக்கு விருப்பமில்லையா?” என வினவினார்.

அதற்கு பதிலளித்த தம்பிதுரை, “உத்தரப் பிரதேசத்தில், ஆளும் சமாஜ்வாதி கட்சியின் பொறுப்பு ஒருவரிடமும், ஆட்சிப் பொறுப்பு ஒருவரிடமும் இருக்கிறது. இதனால், அக்கட்சிக்குள் பல்வேறு சிக்கல்கள் உருவெடுத்துள்ளன. அதேபோல் தமிழகத்திலும் ஒரு சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தாலேயே கட்சிப் பொறுப்பு, ஆட்சிப் பொறுப்பு இரண்டையும் ஒருவரே வைத்துக்கொள்ள வேண்டும் என சசிகலாவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன். என்னுடைய விருப்பதைத் தெரிவித்திருக்கிறேன், மற்றவர்களின் எண்ணம் என்னவென்பது எனக்குத் தெரியாது. இதுதவிர இப்போதைக்கு வேறு எந்த கேள்விக்கும் நான் பதில் அளிக்கத் தயாராக இல்லை” என்றார்.

மதம், ஜாதிகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புது தில்லி:
மதம், ஜாதிகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்து உள்ளது.

நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளநிலையில் உச்ச நீதிமன்றம், மதங்கள், ஜாதிகள் பெயரில் வாக்குகள் சேகரிப்பது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது.

மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட மனோகர் ஜோஷி இந்துத்துவா கொள்கையை அடிப்படையாக வைத்து பிரசாரம் மேற்கொண்டதாகவும், எனவே அவரது வெற்றி செல்லாது என அறிவிக்குமாறும் என்.பி.பாட்டீல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை கடந்த 1995–ம் ஆண்டு விசாரித்த 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு, இந்துத்துவா அல்லது இந்து மதம் என்பது துணைக்கண்ட மக்களின் வாழ்க்கை முறை என்றும், அது ஒரு மனநிலை எனவும் தீர்ப்பளித்தது. இவற்றின் அடிப்படையில் வாக்குகளை சேகரிப்பது எந்த ஒரு வேட்பாளரையும் பாதிக்காது எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான அமர்வின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையில் 7 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையில் நீதிபதிகள் லோகூர், பாப்டே, கோயல், லலித், சந்திராசூட், நகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கி அமர்வு விசாரணையை தொடங்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பேரிலான பதில்களும் பெறப்பட்டது. வழக்குகள் விசாரணையில் தீர்ப்பளித்த 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மதங்கள், ஜாதிகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதமானது என்று கூறியது.

நாட்டில் தேர்தல் நடைபெறுவது மதசார்பற்ற நடைமுறையாகும். இது தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். ஒரு நபர் மற்றும் இறைவன் இடையே உள்ள உறவானது தனிப்பட்ட தேர்வாகும்; இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு தலையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்ற நீதிபதியிடம் ஆதாரம் கேட்கிறார் வைகோ!

சென்னை:
“தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பேசுபவர்களிடம் அதற்கான ஆதாரம் உள்ளதா? ஒரு நீதிபதி, ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுக்கவும் உத்தரவிட நேரிடும் என்று எச்சரிப்பது வரம்பு மீறிய செயல் ” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது…

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் விசாரணை நடத்தினார்.தனக்கும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,தேவைப்பட்டால் ஜெயலலிதா உடலை மீண்டும் தோண்டியெடுத்து பரிசோதனை செய்ய உத்தரவிடுவேன் எனவும் நீதிபதி வைத்தியநாதன் வழக்கு விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.

நீதிபதியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,”ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பவர்களிடம் அதற்கான ஆதாரம் உள்ளதா?”என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு நீதிபதி இந்த கேள்வியை எழுப்பினார் எனவும் நீதிபதியின் இந்த வார்த்தைகள் ஆச்சரியமளிப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

ஆட்சி, கட்சி இரு தலைமையும் ஒருவரிடமே இருக்க வேண்டும்: சசிகலா முதல்வராக தம்பிதுரை வேண்டுகோள்

சென்னை:

ஆட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் ஒருவரிடம் தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை, சசிகலா விரைவில் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. கொள்கைப் பரப்பு செயலாளரும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின் கட்சித் தொண்டர்கள் மத்தியில் சசிகலா ஆற்றிய உரை அனைவரது உள்ளத்தையும் உருகச் செய்வதாக அமைந்திருக்கிறது. மிகுந்த கண்ணியத்தோடும், கடமை உணர்ச்சியோடும் தனது உரையில் சசிகலா எடுத்துரைத்த கருத்துகள், அ.தி.மு.க.வை சரியான, தகுதியான ஒரு பெருந்தகையின் கையில் ஒப்படைத்து இருக்கிறோம் என்ற மன நிம்மதியை அனைவருக்கும் அளித்திருக்கிறது.

தமிழக மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படவும், தமிழ் மொழியின் தொன்மையும், சிறப்பும் போற்றப்படவும் எல்லோருக்கும் பயன்தரும் ஒரு ஜனநாயக ஆட்சி முறை உருவாகவும் தந்தை பெரியாரை மையமாக வைத்து, பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்க அரசியல் பயணம் அவர் அமைத்துத் தந்த பாதையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அடிச்சுவட்டில் இன்னும் பல தலைமுறைகளுக்கு பயணிக்கும் என்ற நம்பிக்கையை எல்லோர் மனதிலும் ஏற்படுத்துவதாக சசிகலாவின் முதல் பேச்சு அமைந்திருந்தது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.

27 ஆண்டுகள் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக மகத்தான பணிகளை ஆற்றிய ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, Ôஅ.தி.மு.க.வும், இதன் கோடானுகோடி தொண்டர்களும் என்ன ஆவார்களோ!Õ என்று கலங்கியிருந்த வேளையில், கலங்கரை விளக்கமாய் சசிகலா திகழ்கிறார். அதுபோலவே, மிகுந்த நம்பிக்கையோடு தமிழக மக்கள் ஜெயலலிதாவுக்கு மகத்தான வெற்றியால் விளைந்திட்ட தமிழக அரசு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைத்த மக்கள் நலம்பேணும் அரசாகத் தொடருவதற்கு ஏற்ற தலைமை சசிகலாவின் தலைமையே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ஆட்சித் தலைமை ஒருவரிடமும், கட்சித் தலைமை இன்னொருவரிடமும் இருப்பது, இந்தியாவில், மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதையும்; ஆட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் ஒன்றாக, ஒரே இடத்தில், ஒருவரிடமே இருக்கும்போது அந்த அரசு ஒருமித்த சிந்தனையோடும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களோடும் இயங்குவதை பார்த்திருக்கிறோம்.

ஆட்சியும், கட்சியும் வெவ்வேறு தலைமைகளைப் பெற்றதால் பல்வேறு சங்கடங்களுக்கும், செயல்திறன் இல்லாத நிலைக்கும் சில அரசுகள் தள்ளப்பட்டு, காலப்போக்கில் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்திருப்பதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது. சசிகலாவோடு அரசியல் ரீதியாகவும், அ.தி.மு.க. தேர்தல் பணிகள், கட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்டும் கடந்த 33 ஆண்டுகளாக தொடர்பில் இருந்த என்னைப் போன்ற பலநூறு பேர்களுக்கு அவருடைய மதிநுட்பமும், அரசியல் சாதுர்யமும் எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா போலவே சிந்தித்து, தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளுக்கு இடம் தராமல் முடிவெடுக்கும் ஆற்றலும் நன்கு தெரியும்.

இதற்கு எடுத்துக்காட்டாக சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்பு ஆற்றிய உரையில் ‘ஜெயலலிதா, நமக்கு கற்றுத் தந்திருக்கிற அரசியல் பாடங்களை, அவரது பாதத் தடங்களை, வேதமெனப் பின்பற்றுவோம். ஜெயலலிதா நிர்மாணித்த இந்த இயக்கம், மக்களின் இயக்கம். இந்த அரசு மக்களின் அரசு. அவர் காட்டிய வழியில் தான் நம் பாதை. அவர் காட்டிய பாதையில் தான் நமது பயணம்’ என்றும், ‘அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக, என்னை ஒருமனதாக தேர்வு செய்திருக்கும் உங்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் ஏற்ப, என் வாழ்வின் எஞ்சிய காலத்தை அர்ப்பணித்து உழைப்பேன். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், ஜெயலலிதா வழியில் பின்பற்றுவோம்’ என்றும் கூறியிருக்கிறார்.

கட்சித் தலைமையையும், ஆட்சி அதிகாரமும் ஒரே இடத்தில் இருந்தால் தான் ஜெயலலிதா விட்டுச்சென்ற கட்சிப் பணிகள் மற்றும் அரசு திட்டங்கள் அவர் எதிர்பார்த்தபடி செய்ய இயலும் என்பது எல்லோருடைய திடமான எண்ணமாகும். இன்னும் 2 ஆண்டுகளில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க நாடு இருக்கும் சூழ்நிலையில் அ.தி.மு.க. அரசு மென்மேலும் சிறப்புடன் செயல்பட்டு மக்களின் பேராதரவை, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பெற்றிருந்ததைப்போல தொடர்ந்து பெற்றிடவும் சசிகலா உடனடியாக தமிழ்நாடு முதல்-அமைச்சராக ஆட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என்று அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

திறமை, உழைப்பு, மக்கள் மீது அன்பு, கட்சித் தொண்டர்கள் மீது அக்கறை என்பவற்றில் ஜெயலலிதாவை போலவே சிறந்தவராகத் திகழும் சசிகலா கட்சியை கட்டிக்காத்து, வழிநடத்தும் பெரும் பணிகளுக்கிடையே தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகவும் பொறுப்பேற்று கட்சிக்கும், தமிழ்நாட்டிற்கும் மிக, மிக இன்றியமையாதது என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.
என்னைப் போன்ற கட்சித் தொண்டர்களின் மனநிலைய ஏற்று, விரைவில் சசிகலா தமிழ்நாடு முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வாழ்வின் பரிசுகள் #சோ #நேர்மை #பன்முகம் #திறமை

download - 2026

வாழ்வின் பரிசுகள் #சோ #நேர்மை #பன்முகம் #திறமை

திறமைகள் அடிமையாய் நின்று

நாக்கிலும் சரஸ்வதியை கொண்டு

தன் நேர்மையில் உலகையும் வென்று

வாழ்ந்து சென்றாரே நம்மை விட்டு விட்டு

சோவின் அறிவு காலத்தை கடந்து வெல்லும்

சோவின் துணிவு எதிரியைும் மிரட்டி வைக்கும்

 

சோவிற்கு நையாண்டி செய்வதிலே புலமை

அதிலும் கருத்தை சொல்லி செல்லும் வலிமை

சொல்லும் விதத்தில் நன்கு தெரியும் வளமை

அவரின் பதிலில் என்றென்றும் இருக்கும் நேர்மை

 

அவர் வார்த்தையில் என்றும் இருந்தது இளமை

எதையும் முன்னோக்கி அறிந்து கொள்ளும் திறமை

மறக்காமல் செய்திடுவார் அவர்தம் கடமை

அவர் எண்ணங்கள் என்றென்றும் புதுமை

 

நையாண்டி அவர் உடன் பிறப்பு

கேள்வியின் பதிலில் அவர் பாணி வியப்பு

எதையும் எதிர்கொள்ளும் அவர் நேர்த்தி திகைப்பு

சோதனை கூட சாதனையாக்கும் திறன் சிறப்பு

 

வாழ்வில் தடைகள் பல கண்டு வென்றான்

துக்ளக் இதழை நமக்கே தந்து சென்றான்

நல்ல கருத்தை எளிதாக்கி தந்தான்

அரசியல் உருவம் அதை காட்ட முயன்றான்

அரசியல் அதனை தைரியமாய் பேச

இவன் போல இந்த பாரில் வேரு எவரேனும் உண்டோ…

இந்த பாரில் வேரு எவரேனும் உண்டோ…

பீட்டாவுக்கு தடை கோரும் அமெரிக்கர்கள்: விலங்குகளை கொல்வதாக குற்றச்சாட்டு!

வாஷிங்டன்(யு.எஸ்): இந்தியாவில் ஜல்லிக்கட்டு நடத்த தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் தொடங்கியுள்ளது.

பீட்டா அமைப்பின் காப்பகத்திற்கு வரும் விலங்குகளில் 97 சதவீதம் கொல்லப்படுகிறது என்று அரசு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

சராசரியாக ஒவ்வொரு வேலை நாளன்றும் 6 விலங்குள் கொல்லப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர் எதிர்ப்பு அமைப்பினர்.

1980 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பீட்டா அமைப்பு, தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதாகும். அமைப்பிற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு அமெரிக்க வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந் நிலையில் நுகர்வோர் சுதந்திர மையம் (Center for Consumer Freedom) என்ற மற்றுமொரு தொண்டு நிறுவனம் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பீட்டா விலங்குகளைக் கொல்கிறது’ என்ற பெயரில் ஆதரவு திரட்டி வருகிறார்கள். Petakillsanimals.com என்ற இணையதளத்தில் பீட்டாவுக்கு எதிரான விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளார்கள்.

நாடெங்கிலும் Petakillsanimals என்ற முழக்கத்துடன் விளம்பரப்பலகைகள் அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் தகவல்ப்படி 1998 ஆம் ஆண்டிலிருந்து 34 ஆயிரம் வீட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக கூறி இருக்கிறார்கள்.

வெர்ஜினியா கால்நடைத் துறையின் 2010ம் ஆண்டு ஆய்வின் படி 84 சதவீத நாய்களும் பூனைகளும், காப்பகத்திற்கு வந்த 24 மணி நேரத்திற்குள் கொல்லப்படுகிறதாம்.

பீட்டா அதிகாரிகள் மீது விலங்குகளை துன்புறுத்தியதற்காக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக petakillsanimals.com இணையதளத்தில் கூறியுள்ளனர். பீட்டாவுக்கு எதிரான மேலும் பல தகவல்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகளில் பீட்டாவுக்கு எதிரான விளம்பரப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டாவின் விலங்குகள் பராமரிப்பை குற்றம் சாட்டி அதன் தலைமையிடம் அமைந்துள்ள அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு

செம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவகங்கை மாவட்டம் ஆ.கருங்குளத்தை சேர்ந்த சாதனை விவசாயி எம்.முருகேசன்.

DSC 85641 - 2026
எம்.முருகேசன் செம்மரத்துடன்
செம்மரம் வெட்டியதற்காக தமிழர்களை கொன்று குவித்த ஆந்திரா, இப்போது செம்மரத்திற்கு காப்புரிமை கேட்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார். அதோடு செம்மரம் என்பதை மற்ற மரங்களைப் போல் சாதாரணமாக வளர்க்க முடியாது. அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கிறது. அந்த நடைமுறைகளையும், மரம் வளர்ந்தபின் அவற்றை வெட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிடுகிறார்.
தனது பண்ணையில் 20,000 செம்மரங்களை வளர்த்து வருகிறார். முதல் தர செம்மரம் ஒரு டன் ரூ.1.5 கோடிக்கு மேல் விலை போகிறது. அது எப்படி என்ற அந்த விவரத்தை இந்தக் காணொலியில் காணுங்கள். நிறைய விவசாயிகள் செம்மரத்தை பயிரிடும்போதுதான் அதன் விலை குறையும். அப்படியே குறையவில்லை என்றாலும் நமது விவசாயிகளாவது 20 வருடங்கள் கழித்து கோடீஸ்வரர்கள் ஆகட்டும்..!

வெள்ளை அறிக்கை

நான் எப்பவுமே எங்கூட்டுக்கு பக்கத்துல இருக்கற கடைலதான நோட்டு பென்சில்லாம் ஓசிக்கு வாங்குவேன்… ஆனா பாருங்க நேத்து … ஓஜிஎஸ்னு போட்டு ஒரு கவர்ல செண்ட்ரல் கவர்மெண்டுலேர்ந்து புத்தம்புதுசா ஒரு நோட்டுபுக் அனுப்பியிருக்காங்க..?

ஒரே ஒரு நோட்டுபுக்தானா? எதுக்காம்?

முதல்ல எனக்கு புரியல! ஆனா இந்த மனீச் சிசோடியா பய இருக்கான்ல… அவந்தான் சொன்னான்… தலீவா நல்லா யோசிச்சிப் பாருங்க..! நீங்கதானே கேட்டீங்க? அதான் அனுப்பியிருக்காங்க? அப்டின்னான்!

ஏங்க.. ஏன் இப்படி பிச்சைக்காரத்தனமா மோடிகிட்ட போய் நோட்டு புக்லாம் கேட்டீங்க?

அட நீங்க வேறங்க… பணநீக்க நடவடிக்கை குறித்து மோடிகிட்ட வெள்ளை அறிக்கைதான் கேட்டேன்…!