சென்னை:
அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். போயஸ் இல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணியளவில் அவர் காரில் கிளம்பி, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் அதிமுக பொதுச்செயலாளருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டார்.
சசிகலாவின் உருவம், தோற்றத்தில் வேறுபாடு காணப்பட்டது. ஜெயலலிதாவை போன்ற சிகை அலங்காரத்துடன் சசிகலா காணப்பட்டார். ஜெயலலிதாவுக்கு பிடித்த பச்சை கலர் சேலையிலேயே சசிகலாவும் தோற்றமளித்தார். பின்பக்கமாக இருந்து பார்த்த தொண்டர்களுக்கு செல்வது ஜெயலலிதாவா, சசிகலாவா என சந்தேகத்தை வரவழைப்பதாக இருந்தது, அவரது சிகை அலங்காரம் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா வேடமிட்டு அவர் அமர்ந்த சீட்டில் சின்னம்மா!
Popular Categories




