Home Blog Page 5722

ஜோதிடம் பஞ்சாங்கம்: தமிழ்ப் பெயர்கள்

தமிழ் மாதத்தின் பெயர்கள், நட்சத்திரம், வருடம் முதலானவற்றின் தமிழ்ப் பெயர்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் மாதம் பெயர்கள்
01. சித்திரை (மேஷம்)02. வைகாசி (ரிஷபம்)03. ஆனி (மிதுனம்)04. ஆடி (கர்க்கடகம்)
05. ஆவணி (சிங்கம்)06. புரட்டாசி (கன்னி)07. ஐப்பசி (துலாம்)08. கார்த்திகை (விருச்சிகம்)
09. மார்கழி (தனு)10. தை (மகரம்)11. மாசி (கும்பம்)12. பங்குனி (மீனம்)
தமிழ் நட்சத்திரம் பெயர்கள்
01. அச்சுவினி02. பரணி03. கார்த்திகை04. ரோகிணி
05. மிருகசீரிடம்06. திருவாதிரை07. புனர்பூசம்08. பூசம்
09. ஆயிலியம்10. மகம்11. பூரம்12. உத்தரம்
13. அத்தம்14. சித்திரை15. சுவாதி16. விசாகம்
17. அனுஷம்18. கேட்டை19. மூலம்20. பூராடம்
21. உத்திராடம்22. திருவோணம்23. அவிட்டம்24. சதயம்
25. பூரட்டாதி26. உத்திரட்டாதி27. ரேவதி28.
தமிழ் யோகம் பெயர்கள்
01. விஷ்கம்பம்02. விஷ்கம்பம்03. ஆயுஷ்மான்04. சௌபாக்கியம்
05. சோபனம்06. அதிகண்டம்07. சுகர்மம்08. திருதி
09. சூலம்10. கண்டம்11. விருதி12. துருவம்
13. வியாகதம்14. அரிசணம்15. வச்சிரம்16. சித்தி
17. வியாதிபாதம்18. வரியான்19. பரிகம்20. சிவம்
21. சித்தம்22. சாத்தீயம்23. சுபம்24. சுப்பிரம்
25. பிராமியம்26. ஐந்திரம்27. வைதிருதி28.
தமிழ் கரணம் பெயர்கள்
01. கிமிஸ்துக்கினம்02. பவம்03. பாலவம்04. கௌலவம்
05. சைதுளை06. கரசை07. வனசை08. பத்திரை
09. சகுனி10. சதுஷ்பாதம்11. நாகவம்12.
தமிழ் திதி பெயர்கள்
01. பிரதமை02. த்விதை03. திரிதியை04. சதுர்த்தி
05. பஞ்சமி06. சஷ்டி07. சப்தமி08. அஷ்டமி
09. நவமி10. தசமி11. ஏகாதசி12. த்வாதசி
13. த்ரோதசி14. சதுர்தசி15. பௌர்ணமி16. அமாவாசை
தமிழ் இராசி பெயர்கள்
01. மேஷம்02. ரிஷபம்03. மிதுனம்04. கர்க்கடகம்
05. சிங்கம்06. கன்னி07. துலாம்08. விருச்சிகம்
09. தனு10. மகரம்11. கும்பம்12. மீனம்
தமிழ் ஆனந்ததி யோகம் பெயர்கள்
01. ஆனந்த (பெற்றிருத்தலை)02. காலடண்ட (மிருத்யு)03. தும்ர (மகிழ்ச்சியற்ற)04. பிரஜாபதி (நற்பேறு)
05. சௌம்யா (பஹு சுக்)06. துலான்க்ஷ (தன் க்ஷய)07. த்வஜ (நற்பேறு)08. ஸ்ரீவத்ச (சௌக்ஹ்ய சொத்து)
09. வஜ்ரா (க்ஷய)10. முடகர (லக்ஷ்மி க்ஷய)11. சத்திர (ராஜ சன்மான)12. மித்ரா (புஷ்டி)
13. மானச (நற்பேறு)14. பத்மா (தனகம)15. லம்பாக (தன் க்ஷய)16. உத்பாத (பிராண நாச)
17. ம்ருத்யு (மிருத்யு)18. காண (மனவேதனை)19. சித்தி (பணி பெற்றிருத்தலை)20. சுபம் (நலம்)
21. அம்ருத (ராஜ சன்மான)22. முசல (தன் க்ஷய)23. கட (பயம்)24. மாதங்க (குடும்ப வளர்ச்சி)
25. ராக்ஷச (மஹா துன்பம்)26. சர (பணி பெற்றிருத்தலை)27. ஸ்திர (க்ருஹாரம்பா)28. வர்த்தமான (திருமணம்)
தமிழ் சம்வத்சர பெயர்கள்
01. பிரபவ02. விபவ03. சுக்கில04. பிரமோதூத
05. பிரஜோத்பத்தி06. ஆங்கீரஸ07. ஸ்ரீமுக08. பவ
09. யுவ10. தாது11. ஈஸ்வர12. வெகுதான்ய
13. பிரமாதி14. விக்கிரம15. விஷு16. சித்ரபானு
17. சுபானு18. தாரண19. பார்த்திப20. விய
21. ஸ்ர்வசித்து22. ஸ்ர்வாரி23. விரோதி24. விக்ருதி
25. கர26. நந்தன27. விஜய28. ஜய
29. மன்மத30. துன்முகி31. ஹேவிளம்பி32. விளம்பி
33. விகாரி34. சார்வரி35. பிலவ36. சுபகிருது
37. ஸோபகிருது38. குரோதி39. விஸ்வவசு40. பராபவ
41. பிலவங்க42. கீலக43. சௌமிய44. ஸாதரண
45. விரோதிகிருது46. பரிதாபி47. பிரமாதீஸ48. ஆனந்த
49. ராக்ஷஸ50. நள51. பிங்கள52. களயுக்தி
53. சித்தார்த்தி54. ரூத்ரி55. துன்மதி56. துந்துபி
57. ருத்ரகாரி58. ரக்தாக்ஷி59. குரோதன60. அக்ஷய

வண்ணதாசனுக்கு சாஹித்ய அகாதெமி விருது; நெல்லைக்கு கௌரவம்

திருநெல்வேலி:நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது.

70 வயதாகும் இவர் திருநெல்வேலி, சிதம்பரநகரில் வசிக்கிறார். இயற்பெயர் கல்யாணசுந்தரம், ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதைகள் எழுதிவருகிறார். வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1962ல் இருந்து எழுதிவருகிறார். இதுவரையிலும் 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதை தொகுப்புகள், ஒரு குறுநாவல், 2 கடித தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

கலைமாமணி, தமிழ்பேராயம், இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய விருதுகள் பெற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை தி.க.சிவசங்கரனும் சிறந்த எழுத்தாளர்.

இவர் 2000ம் ஆண்டில் விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் என்னும் விமர்சன நுாலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

2012ல் டி.செல்வராஜ் (தோல்), 2013ல் ஜோ டீ குரூஸ் (கொற்கை), 2014ல் பூமணி(அஞ்ஞாடி), 2015ல் மாதவன் (இலக்கிய சுவடிகள்) ஆகியோரை தொடர்ந்து இந்த ஆண்டு வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாகித்ய அகாடமி 1954ல் துவக்கப்பட்டது. 1955ல் வழங்கிய முதல் விருது, நெல்லையை சேர்ந்த ஆர்.பி.சேதுப்பிள்ளைக்கு, தமிழ் இன்பம் படைப்பிற்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விருது குறித்து அவர் கூறுகையில், ”எழுத்தாளர் வல்லிக்கண்ணனுக்கு நான் எழுதிய கடிதங்கள்தான் என்னை மேலும் எழுதத்துாண்டின. கடிதங்களை நான் முக்கியமானவையாக மதிக்கிறேன். 54 ஆண்டுகளாக எழுதிவருகிறேன்.

என்னோடு 1960களில் எழுதத்துவங்கியவர்கள் பலர் எழுத்தை நிறுத்திவிட்டார்கள். இளைய படைப்பாளிகளின் எழுத்துக்கள் எனக்கு நம்பிக்கையளிக்கின்றன. வாசகர்கள், இளைய படைப்பாளிகள் தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளர்களின் படைப்புகளை தேடிக்கண்டுபிடித்து வாசிக்கவேண்டும்.

தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தாமிரபரணி சார்ந்து தொடர்ந்து படைப்புலகில் இயங்குவேன்,” என்றார்.இலக்கியவாதிகளை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி விருது 1954ல் உருவாக்கப்பட்டது. சிறந்த இலக்கிய படைப்புகளுக்காக (கவிதைகள், சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம்) 1955 முதல் ஆண்டுதோறும் தமிழ் உட்பட 24 மொழிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது.

தமிழ் மொழி பிரிவில் 1957, 1959, I960, 1964 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இவ்விருது யாருக்கும் வழங்கப்படவில்லை.இந்தாண்டு தமிழ்மொழிக்கான விருதுக்கு சிறந்த சிறுகதைக்காக வண்ணதாசன் தேர்வாகியுள்ளார். விருது 2017 பிப்., 22ல் வழங்கப்பட உள்ளது.

ஆலயப் பராமரிப்பு: எங்கே செல்கிறோம் நாம்?

தமிழகத்தை ஆலயங்களின் கோட்டை எனலாம். தமிழகத்தில் கலையும் கலாசாரமும் வளர்ந்த பண்பாட்டுக் கேந்திரங்கள் ஆலயங்கள். இங்கே மன்னர்களால் கட்டி வைத்த கோயில்கள் இன்றும் அவர்களின் புகழைத் தாங்கிக் கொண்டு, காலத்தை வென்று நின்றுகொண்டிருக்கின்றனர்.
ஓர் ஆச்சரியத்தை நான் கவனிப்பதுண்டு. வடக்கே அரசர்கள் கட்டிக் கொண்ட மாளிகைகளும் அரண்மனைகளும் பெருத்துக் கிடக்க, தென்னகத்திலோ, மன்னர்களின் பெயர் சொல்லும் ஒரு அரண்மனையைக் கூட நம்மால் பார்க்க முடிவதில்லை. மாறாக, அவர்கள் ஆண்டவனுக்குக் கட்டிவைத்த ஆலயங்கள் இன்றளவும் அவர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு புகழ் பாடிக் கிடக்கின்றன.
அந்த அளவுக்கு ஆலயங்களை நம் மன்னர்கள் மட்டுமல்லாது, மக்களும் போற்றி வந்துள்ளனர். அவை காலத்தால் நிமிர்ந்து நிற்கும் பொக்கிஷங்கள். வளரும் காலத்துக்கு ஏற்ப அவற்றின் உறுதித் தன்மையைக் குலைக்காமல் புனரமைத்து, வழிவழியாய் கொண்டு வந்துள்ளனர் நம் முன்னோர். அவர்கள் பழைமையைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தினர்.
ஆனால் இன்றோ, எல்லாம் நவீனம். ஆலயத்தைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் இந்து சமய அறநிலையத்துறை எனும் அரசு சார் அமைப்பு. இந்த நிலையில், கோயில்களின் பரமாரிப்பில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
உண்மையில், கோயில்களில் பழைமையான பல விஷயங்களை (கல்வெட்டுகள், ஓவியங்கள், உள்பட) கும்பாபிஷேகத்தை ஒட்டிய புனரமைப்பின்போது, சிதைத்து விடுகிறார்கள்.
நவீனங்களைப் புகுத்தி விடுகிறேன் பேர்வழி என்று, பல பழைமையானவற்றை திரித்து, மாற்றி, ஆலயத்தை கைமாற்றும் போக்கே கூட நடந்துவிடுவதுண்டு.
அதற்காகத்தான், இந்தப் பழமையைப் பாதுகாக்க, ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பக்தர் குழு அமைத்து, திருப்பணி நடக்கும்போது, தினமும் கண்காணிக்கச் செய்ய வேண்டும். பெருமான் மீதும், வழிபாட்டு நடைமுறைகளின் மீதும் அத்யந்த பக்தி கொண்டு, எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன்னலமற்று உழைக்க எல்லா ஊரிலும் ஒரு பக்தர் கூட்டம் உண்டு. உழவாரப்பணி அமைப்புகள் உண்டு. அவர்களையும், இந்து இயக்கங்களைச் சேர்ந்த ஆலயப் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்களையும் சேர்த்து ஒரு கண்காணிப்புக் குழு, ஒவ்வொரு ஆலய புனரமைப்பின் போதும் போட்டு, கண்காணிக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையைத் துறையை எக்காரணம் கொண்டும் நம்ப முடியாது. அவர்கள் அரசுக் கட்டுப்பாடு என்பதால் ஏனாதானோ வென்று வேலை செய்வார்கள். நேர்மையாளர்கள் மிகக் குறைவு!
எனவே… இது நடைமுறை சாத்தியமே!
ஆனால், அதற்காக, யுனெஸ்கோ என்ற வெளி நாட்டு நிறுவ்னத்தின் தலையீட்டுடன், அல்லது அனுமதியுடந்தான் திருப்பணிகள் நடத்தப்படவேண்டும், அல்லது அதற்காகக் காத்திருக்க வேண்டும், அல்லது தடை ஏற்படுத்தப் படும் என்னும் அளவுக்கு எடுத்துச் சென்றது, நமது உறக்கத்தின் கொடுமையைச் சொல்கிறது. இது தவிர்க்கப் பட வேண்டும். திருப்பணிக்கு யுனெஸ்கோவா உதவி செய்கிறது?
முன்னதாக உயர்நீதிமன்றம் அமைத்த குழு தேவையற்றது எனும் ரீதியில் அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் இந்தக் கருத்தும் முன் மொழியப் பட்டிருக்கிறது அறநிலையத்துறையால்.
இந்த விஷயத்தில் நீதிமன்றம் தனது நிலையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, நமது ஆலயங்களின் பழைமையும் புனிதமும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்பட உதவும் வகையில் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்…. குறைந்த பட்சம், இந்த அளவுக்காவது கேள்வி கேட்டு, அக்கறை காட்டும் நீதிமன்றத்துக்கு ஒரு சபாஷ்!

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட அறநிலையத் துறை ஆணையர்

சென்னை:

கோவில்கள் பராமரிப்பு தொடர்பாக நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு தேவையில்லை எனக்கூறியதால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்திற்கு ஆளாக, அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, இன்று நீதிபதிகள் முன் ஆஜராகி மன்னிப்பு கேட்டார்.

தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் புராதன சின்னங்களை சீரமைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. மேலும், கோவில்கள் சீரமைப்பு பணிக்கு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கக் கோரி, 13 கோவில்களின் இணை ஆணையர்கள் சார்பில் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு கோவில்களின் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வது குறித்து முடிவெடுக்க புதிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன் விசாரனைக்கு வந்தது. அப்போது, அறநிலையதுறை ஆணையர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‛நீதிமன்றத்தின் நிபுணர் குழு தேவையற்றது’ என, குறிப்பிட்டப்பட்டு இருந்தது. இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அறநிலையத்துறை ஆணையர், இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி, அறநிலையத்துறை ஆணயைர் வீரசண்முகமணி, நீதிபதிகள் முன், இன்று ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

சசிகலா Vs சசிகலா: அதிமுகவில் அரங்கேறும் கால்வாறும் நாடகங்கள்

சென்னை:

அதிமுகவில் இருந்து ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட இரு சசிகலாக்களும் இப்போது பலப்பரீட்சையில் இறங்கியுள்ளதன் வெளிப்பாட்டைத்தான் தற்போது தமிழகம் அரசியல் களத்தில் கண்டு வருகிறது.

இருவருக்குமே மணல் கொள்ளை மாஃபியா பின்னணி இருப்பது வெட்ட வெளிச்சம். ஒருவர் தூத்துக்குடி மணல் கொள்ளையின் பினாமி எனப்படுபவர். மற்றவர் தொடர்புடைய இடத்தில்தான் தற்போது வருமான வரி சோதனை நடந்து தமிழகம் அரசியல் பரபரப்பில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது என்ற குறிப்புடன் உலாவரும் பின்னணி விஷயங்கள் இவை.

கரூர் அன்புநாதனில் துவங்கிய விவகாரம், நத்தம் விசுவநாதனை அடைந்து, வேலூர் சேகர் ரெட்டியிடம் சென்று, தற்போது தலைமைச் செயலர் ராம் மோகன் ராவிடம் வந்து நிற்கிறது. இத்தனை காலமும் அமைதியாக இருந்த வருமான வரித் துறை, ஜெயலலிதா மறைந்த பின், ஏன் வேகமாகி இருக்கிறது. இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது; சதி இருக்கிறது என்று சொல்லி, தமிழகத்தின் அரசியல் கட்சிகள் சில, பா.ஜ.க.,க.,வை நோக்கி சுட்டு விரல் நீட்டுகின்றன. ஆனால், இந்த விஷயம் இன்று – நேற்று ஆரம்பமானதல்ல. என்றைக்கு, சசிகலா புஷ்பாவை ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் வைத்து அடித்ததாக, மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா பரபரப்பு கிளப்பினாரோ, அன்றைக்கே துவங்கி விட்டது பா.ஜ.க.,,வின் ஆட்டம். சசிகலா புஷ்பா, மாநிலங்களவையில் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிய பின், சில நாட்களில், பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று அவர் கேட்க, தயாராக வைத்திருந்த மொத்த விஷயங்களையும் அவர் ஆதாரங்களுடன் எடுத்து வைத்தார்.

ஒன்றும் கவலைப்பட வேண்டாம்; உங்களுக்கு பா.ஜ.க.,, அரசு முழு பக்கபலமாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் ஆட்சி அதிகாரங்களின் மோசடிகளை மட்டும் ஆதாரங்களுடன் திரட்டி, மத்திய அரசுக்கு அனுப்பி வையுங்கள். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் விவரங்களை சொல்லி விடுகிறேன். அவர்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று சொன்ன பிரதமர் மோடி, சொன்னபடியே, சசிகலா புஷ்பாவுக்கு முழு பாதுகாப்பு வழங்கினார். தன்னை கைது செய்யும் ஆபத்து இருந்த நிலையிலும், துளியும் கவலையின்றி சசிகலா புஷ்பா தமிழகம் வந்து போனது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், பின்புலத்தில் பா.ஜ.க.,, என்ற மாபெரும் சக்தி இருந்ததால்தான், அவர் தைரியமாக தமிழகம் வந்தார்.

சென்னை, அண்ணா நகரில் உள்ள தன் வீட்டில் தங்கியபடியே அவர், தமிழக அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியுடன் உள்ள பலரையும் சந்தித்தார். விவரங்களை ஆதாரங்களுடன் திரட்டி, மத்திய அரசுக்கு அனுப்பினார். அவர் அனுப்ப அனுப்ப விவரங்களை திரட்டிக் கொண்ட மத்திய அரசு, தான் ஏற்கனவே திரட்டி வைத்திருந்த விவரங்களை சேர்த்துக் கொண்டு, அதிரடி ஆபரேஷனை துவங்கியது. அந்த ஆபரேஷனில்தான், அன்புநாதன், நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ் என வரிசையாக பலரும் சிக்கினர்.

சேகர் ரெட்டியிடம் தொடர்புடையவர்களாக சொல்லப்படும் அமைச்சர்கள் ஐந்து பேரும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் கூட விரைவில் சிக்குவர் என்கிறது வருமான வரித் துறை வட்டாரங்கள். ராம் மோகன் ராவ் போலவே, தமிழக அரசு அதிகார மட்டங்களில் இருந்து கொண்டு, அதிகாரத்தை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கும் அதிகாரிகள் பலரது பெயர்களையும், பிரதமர் மோடி, சேகரித்து வைத்துள்ளார். விரைவில் அவர்களை நோக்கியும் வருமான வரித் துறையினரை பாய விடுவார் என்கிறது, தில்லி அதிகார வட்டாரங்கள்.

SASIKALA PUSHpa - 2026தமிழக பா.ஜ.க.,, தலைவர்கள் மூலமாகவும் பல்வேறு தகவல்களை திரட்டி வைத்திருக்கும் பிரதமர் மோடி, முதல்வர் பன்னீர் செல்வத்தையும், முழுமையாக தன் கரங்களுக்குள் கொண்டு வந்து விட்டார் என்றும், முதல்வர் பன்னீர்செல்வமும், தமிழகத்தில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அதிகார மட்டம் குறித்து, நிறைய விஷயங்களை சொல்லி இருப்பதாகவும் தில்லியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தேவையானால், போயஸ் தோட்டத்தை நோக்கியும் வருமான வரித் துறையினர் செல்ல வெகு நேரம் ஆகாது என்று சூசகமாக எதையோ சொல்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.தமிழகத்தைப் பொறுத்த வரையில், பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்படுவதில், இப்போதைக்கு, பிரதமர் மோடி தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. ஆனால், சுய நலனுக்காக, பன்னீர்செல்வம் ஆட்சியை கலைக்க முயல்வது; அவரை அப்பதவியில் இருந்து விரட்டிவிட நினைப்பது என யார் நினைத்தாலும், அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பா.ஜ.க.,, அரசு இயங்கி செயல்படும் என, தில்லி மூத்த அரசியல்வாதிகள் அடித்து கூறுகின்றனர்.

இதற்கிடையில், தற்போதைய ரெய்டுக்கு பின்னணியில் சசிகலா புஷ்பாவின் கரங்கள் இருப்பதை சொல்லும், தில்லி அரசியல் வட்டாரங்கள் சொன்ன லேட்டஸ்ட் தகவல் – சசிகலா புஷ்பாவுக்கு, பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் தகவலின்படி, அவர் எந்த நேரமும் பிரதமர் மோடியை சந்திப்பார். அப்போது, ஜெயலலிதா மரணத்தில் மறைந்து கிடக்கும் மர்மங்களை வெளியில் கொண்டு வர வேண்டும்; அதற்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்க உள்ளார்.

சென்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் ஐ.டி. சோதனை

சென்னை :

சென்னையில், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனரான ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.1.5 கோடி பணம் மற்றும் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம், செரிரோட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 64 இடங்களில் கிளைகள் உள்ளன.

இந்தக் கிளை வங்கிகளில் இருந்தும் வரவு – செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களையும் கொண்டு வரச் சொல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் சரி பார்த்தனர். இரவு 8 மணி வரை இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனையின் தொடர்ச்சியாகவே இன்று காலை நாகராஜன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்யநாதன் நியமனம்

சென்னை:

தமிழக தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் புதன்கிழமை நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பணம், தங்கம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதை அடுத்து அவர் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
புதிய தலைமைச் செயலராக, ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரிஜா வைத்யநாதன் நியமிக்கப்படுள்ளார்.

தமிழகத்துக்கே தலைகுனிவு: ஐ.டி. சோதனை குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை:

தமிழகத்துக்கே தலைகுனிவாக அமைந்துள்ளது, தலைமைச் செயலர் இல்லத்தில் நடத்தப் பட்ட வருமான வரி சோதனை என்று கருத்து தெரிவித்துள்ளார் மு.க. ஸ்டாலின். மேலும், தமிழக ஆட்சியாளர்களின் முறைகேடான நடவடிக்கைகளுக்குத் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் துணையாக இருப்பதாக கட்சித் தலைவர்கள் பலரும் அப்போதே சுட்டிக்காட்டியிருந்தனர் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்களும் ஆட்சியை ஆட்டி வைப்பவர்களும் தப்பிவிடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன்னுதாரணமாக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே, தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை பற்றிய முழுமையான உண்மைத் தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில்தான், தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அண்மையில் சோதனைகளுக்குள்ளான மணல் வியாபாரியான சேகர் ரெட்டி என்பவரிடம் புது 2000 ரூபாய் நோட்டுகள் உள்பட கோடிக்கணக்கக்கான ரூபாய் பணமும் கிலோ கணக்கில் தங்கமும் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாகத் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. மணல் வியாபாரி சேகர் ரெட்டி, கட்டுமானத் தொழில் செய்யும் ராமலிங்கம் போன்றவர்களுடன் தமிழக அமைச்சர்கள் பலரும் தொடர்பில் உள்ளார்கள் எனத் தொடர்ச்சியாக செய்திகள் வருகின்றன. ஏற்கெனவே கரூர் அன்புநாதன் என்பவரின் வீட்டில் சிக்கிய கோடிக்கணக்கான பணத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வீட்டிலும் சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். எனவே தமிழக அமைச்சர்கள் பலரும் இத்தகைய வியாபாரிகள்-தொழிலதிபர்கள் போன்றோருடன் தொடர்பில் இருப்பது உறுதியாகிறது. அமைச்சர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றனர்.

முதல்வரின் செயலாளராக இருந்த ராமமோகன ராவுக்கு தலைமை செயலாளர் பதவியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய போதே சர்ச்சைகள் வெளிப்பட்டன. அவருக்குத் தலைமைச் செயலாளர் பதவியைத் தந்ததற்குக் காரணம், அவர் ஆட்சியாளர்களின் முறைகேடான நடவடிக்கைகளுக்குத் துணையாக இருப்பதால் தான் என்பதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அப்போதே சுட்டிக்காட்டியிருந்தனர். இந்நிலையில், தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை என்பது தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது. தமிழக நலன்களைப் புறக்கணித்து தங்கள் சொந்த லாபங்களுக்காக செயல்படும் அ.தி.மு.க அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடுமையாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்களும் ஆட்சியை ஆட்டி வைப்பவர்களும் தப்பிவிடக்கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.

ராம் மோகன் ராவ் வீட்டில் ஐ.டி. சோதனை: துணை ராணுவப் படை குவிப்பு

சென்னை:

வருமான வரித்துறை சோதனை நடைபெறும் தலைமைச் செயலாளர் வீடு துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலகத்திலும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளன.

போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் அண்ணா நகரில் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவின் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அண்ணா நகர் பகுதியில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருவான்மியூர் ராஜாஜி நகர் அவ்வையார் தெருவில் உள்ள ராம மோகன ராவ் மகன் விவேக் மற்றும் மருமகள் வர்ஷினி ஆகியோரிடம் காலை 5.30 மணியளவில் இருந்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் மொத்தம் 13 இடங்களில் பல மணி நேரமாக சோதனை நடைபெற்று வருகிறது. ராம மோகன ராவ் மகன் வீட்டில் 200 கிலோ அளவுக்கு ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மணல் மூலம் பணம் தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ்.

ராம மோகன்ராவ் உருவாக்கி தந்த திட்டம் மூலமே மணல் குவாரிகள் அரசு வசமானது. மணலை வியாபார பொருளாக்கி பல்லாயிரம் கோடி புரள செய்த பெருமை ராம மோகன் ராவுக்கு பெரும் பங்கு உண்டு. சேகர் ரெட்டி மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் மொத்தம் 131 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இதில், 92 கோடி ரூபாய் புதிதாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 171 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கின. இதுதவிர, அவரது இல்லத்தில் இருவகையான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. வருமான வரி சோதனை சேகர் ரெட்டியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவம் குவிப்பு காலை 7 மணியில் இருந்து நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரி அலுவலகம், தலைமைச் செயலகத்திலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

This Is How The Government Is Nabbing Hoarders Of The New Notes!

The government has clearly denied the presence of any chip or tracking material in the 2000 rupee note. Many people have also tried to discern this fact on their own and have found that there is nothing as a chip or tracking device.

Then how is the government nabbing these people?

A theory suggests that whenever a person is caught with these new notes in huge amounts, the series of the notes is noted down by various departments and also passed on to intelligence departments.
These departments get the series of these notes cross-checked with the RBI to ascertain which banks these notes were sent to. Whenever notes are found in huge numbers, it directly raises suspicion over the involvement of a bank official in this racket.
This could be one way through which the government is being able to make seizures everyday and conduct successful raids. Apart from this, whenever a culprit is nabbed, his call logs and records are also scrutinized, to get further leads.