சென்னை :
சென்னையில், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனரான ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.1.5 கோடி பணம் மற்றும் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம், செரிரோட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 64 இடங்களில் கிளைகள் உள்ளன.
இந்தக் கிளை வங்கிகளில் இருந்தும் வரவு – செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களையும் கொண்டு வரச் சொல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் சரி பார்த்தனர். இரவு 8 மணி வரை இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனையின் தொடர்ச்சியாகவே இன்று காலை நாகராஜன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.



