December 5, 2025, 5:21 PM
27.9 C
Chennai

சசிகலா Vs சசிகலா: அதிமுகவில் அரங்கேறும் கால்வாறும் நாடகங்கள்

சென்னை:

அதிமுகவில் இருந்து ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட இரு சசிகலாக்களும் இப்போது பலப்பரீட்சையில் இறங்கியுள்ளதன் வெளிப்பாட்டைத்தான் தற்போது தமிழகம் அரசியல் களத்தில் கண்டு வருகிறது.

இருவருக்குமே மணல் கொள்ளை மாஃபியா பின்னணி இருப்பது வெட்ட வெளிச்சம். ஒருவர் தூத்துக்குடி மணல் கொள்ளையின் பினாமி எனப்படுபவர். மற்றவர் தொடர்புடைய இடத்தில்தான் தற்போது வருமான வரி சோதனை நடந்து தமிழகம் அரசியல் பரபரப்பில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது என்ற குறிப்புடன் உலாவரும் பின்னணி விஷயங்கள் இவை.

கரூர் அன்புநாதனில் துவங்கிய விவகாரம், நத்தம் விசுவநாதனை அடைந்து, வேலூர் சேகர் ரெட்டியிடம் சென்று, தற்போது தலைமைச் செயலர் ராம் மோகன் ராவிடம் வந்து நிற்கிறது. இத்தனை காலமும் அமைதியாக இருந்த வருமான வரித் துறை, ஜெயலலிதா மறைந்த பின், ஏன் வேகமாகி இருக்கிறது. இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது; சதி இருக்கிறது என்று சொல்லி, தமிழகத்தின் அரசியல் கட்சிகள் சில, பா.ஜ.க.,க.,வை நோக்கி சுட்டு விரல் நீட்டுகின்றன. ஆனால், இந்த விஷயம் இன்று – நேற்று ஆரம்பமானதல்ல. என்றைக்கு, சசிகலா புஷ்பாவை ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் வைத்து அடித்ததாக, மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா பரபரப்பு கிளப்பினாரோ, அன்றைக்கே துவங்கி விட்டது பா.ஜ.க.,,வின் ஆட்டம். சசிகலா புஷ்பா, மாநிலங்களவையில் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிய பின், சில நாட்களில், பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று அவர் கேட்க, தயாராக வைத்திருந்த மொத்த விஷயங்களையும் அவர் ஆதாரங்களுடன் எடுத்து வைத்தார்.

ஒன்றும் கவலைப்பட வேண்டாம்; உங்களுக்கு பா.ஜ.க.,, அரசு முழு பக்கபலமாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் ஆட்சி அதிகாரங்களின் மோசடிகளை மட்டும் ஆதாரங்களுடன் திரட்டி, மத்திய அரசுக்கு அனுப்பி வையுங்கள். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் விவரங்களை சொல்லி விடுகிறேன். அவர்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று சொன்ன பிரதமர் மோடி, சொன்னபடியே, சசிகலா புஷ்பாவுக்கு முழு பாதுகாப்பு வழங்கினார். தன்னை கைது செய்யும் ஆபத்து இருந்த நிலையிலும், துளியும் கவலையின்றி சசிகலா புஷ்பா தமிழகம் வந்து போனது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், பின்புலத்தில் பா.ஜ.க.,, என்ற மாபெரும் சக்தி இருந்ததால்தான், அவர் தைரியமாக தமிழகம் வந்தார்.

சென்னை, அண்ணா நகரில் உள்ள தன் வீட்டில் தங்கியபடியே அவர், தமிழக அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியுடன் உள்ள பலரையும் சந்தித்தார். விவரங்களை ஆதாரங்களுடன் திரட்டி, மத்திய அரசுக்கு அனுப்பினார். அவர் அனுப்ப அனுப்ப விவரங்களை திரட்டிக் கொண்ட மத்திய அரசு, தான் ஏற்கனவே திரட்டி வைத்திருந்த விவரங்களை சேர்த்துக் கொண்டு, அதிரடி ஆபரேஷனை துவங்கியது. அந்த ஆபரேஷனில்தான், அன்புநாதன், நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ் என வரிசையாக பலரும் சிக்கினர்.

சேகர் ரெட்டியிடம் தொடர்புடையவர்களாக சொல்லப்படும் அமைச்சர்கள் ஐந்து பேரும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் கூட விரைவில் சிக்குவர் என்கிறது வருமான வரித் துறை வட்டாரங்கள். ராம் மோகன் ராவ் போலவே, தமிழக அரசு அதிகார மட்டங்களில் இருந்து கொண்டு, அதிகாரத்தை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கும் அதிகாரிகள் பலரது பெயர்களையும், பிரதமர் மோடி, சேகரித்து வைத்துள்ளார். விரைவில் அவர்களை நோக்கியும் வருமான வரித் துறையினரை பாய விடுவார் என்கிறது, தில்லி அதிகார வட்டாரங்கள்.

SASIKALA PUSHpa - 2025தமிழக பா.ஜ.க.,, தலைவர்கள் மூலமாகவும் பல்வேறு தகவல்களை திரட்டி வைத்திருக்கும் பிரதமர் மோடி, முதல்வர் பன்னீர் செல்வத்தையும், முழுமையாக தன் கரங்களுக்குள் கொண்டு வந்து விட்டார் என்றும், முதல்வர் பன்னீர்செல்வமும், தமிழகத்தில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அதிகார மட்டம் குறித்து, நிறைய விஷயங்களை சொல்லி இருப்பதாகவும் தில்லியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தேவையானால், போயஸ் தோட்டத்தை நோக்கியும் வருமான வரித் துறையினர் செல்ல வெகு நேரம் ஆகாது என்று சூசகமாக எதையோ சொல்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.தமிழகத்தைப் பொறுத்த வரையில், பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்படுவதில், இப்போதைக்கு, பிரதமர் மோடி தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. ஆனால், சுய நலனுக்காக, பன்னீர்செல்வம் ஆட்சியை கலைக்க முயல்வது; அவரை அப்பதவியில் இருந்து விரட்டிவிட நினைப்பது என யார் நினைத்தாலும், அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பா.ஜ.க.,, அரசு இயங்கி செயல்படும் என, தில்லி மூத்த அரசியல்வாதிகள் அடித்து கூறுகின்றனர்.

இதற்கிடையில், தற்போதைய ரெய்டுக்கு பின்னணியில் சசிகலா புஷ்பாவின் கரங்கள் இருப்பதை சொல்லும், தில்லி அரசியல் வட்டாரங்கள் சொன்ன லேட்டஸ்ட் தகவல் – சசிகலா புஷ்பாவுக்கு, பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் தகவலின்படி, அவர் எந்த நேரமும் பிரதமர் மோடியை சந்திப்பார். அப்போது, ஜெயலலிதா மரணத்தில் மறைந்து கிடக்கும் மர்மங்களை வெளியில் கொண்டு வர வேண்டும்; அதற்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்க உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories