Home Blog Page 5723

கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை: மத்திய அமைச்சர் விளக்கம்

சென்னை:

தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழக முதன்மைச் செயலர் ராம மோகன ராவ் வீடுகளில் வருமான வரித்துறையின் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஒரு தலைமைச்செயலரின் வீட்டில் சோதனை நடத்தப்படுவது தமிழகத்திலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமைச் செயலர் வீட்டில் சோதனை: அமைச்சர்கள், அதிகாரிகள் திக்! திக்!

சென்னை:

தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் நடத்தப்படும் சோதனையால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ராம மோகனராவ் தங்களையும் காட்டிக்கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உறைந்துபோய் கலக்கத்தில் உள்ளனர்.

யார் இந்த ராம் மோகன் ராவ் ?

தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவமாக, தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டிலேயே வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது.
ராம் மோகன் ராவ் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த, 1985 பேட்ஜை சேர்ந்தவர். 2017 ம் ஆண்டு செப்டம்பரில் பணி ஓய்வு பெற உள்ளார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போதே, அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் வந்தால் இவர் தான் தலைமை செயலாளராக வரப்போகிறார் என்ற பேச்சு அடிப்பட்டது. அப்போது அவர், கூடுதல் தலைமை செயலாளர் என்ற அந்தஸ்தில், முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார். ஜூன், 8 ம் தேதி, தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர், எம்.ஏ., பொருளியல், எம்.காம்., விலை மதிப்பீடு கணக்குபதிவியல் (காஸ்ட் அக்கவுண்டன்சி) படித்தவர். தமிழக அரசில், சமூக நலம், வீடு மற்றும் நகர மேம்பாடு, தொழில் துறைகளில் பணியாற்றியவர்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை செயல்அதிகாரி ஆகிய பொறுப்புக்களை வகித்தவர். இவர் இதுவரை, அயல் பணி என்ற வகையில் மத்திய அரசு பணிக்கு சென்றதில்லை. எனினும், 2001 முதல், 2003 வரை குஜராத் கடல்சார் வாரிய துணை தலைவராக இருந்துள்ளார். ராம்மோகன் ராவின் தாய் மொழி தெலுங்கு என்றாலும், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக பேசும் திறன் படைத்தவர்.

சேகர் ரெட்டி – ராம மோகன ராவ் தொடர்பு

சேகர் ரெட்டியிடம் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் மோகனராவ் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான சேகர் ரெட்டிக்கும், தலைமை செயலர் ராம மோகனராவுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சேகர் ரெட்டிக்கு மணல் ஒப்பந்தம் கிடைக்க காரணமாக இருந்தவர் ராம மோகன ராவ். ராம மோக ராவ் தொடர்பால் தான் ரெட்டி உச்சத்துக்கு வர முடிந்ததாக தெரிகிறது.

மணல் குவாரி கொள்ளைக்கு வழிகாட்டியவர்!

சென்னை:
தமிழக தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ் என்று அவர் குறித்து செய்திகள் உலா வருகின்றன.

தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ். 1990-ம் ஆண்டுகளில் அன்றைய செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக ராம மோகனராவ் இருந்தார். மணல் எடுக்க அனுமதி தருவதன் மூலம் பணம் பெறலாம் என ஆட்சியாளர்களுக்கு சொல்லியவர் ராம மோகன ராவ். ராம மோகனராவ் உருவாக்கி தந்த திட்டம் மூலமே மணல் குவாரிகள் அரசு வசமானது. மணலை வியாபார பொருளாக்கி பல்லாயிரம் கோடி புரள செய்த பெருமை ராம மோகன ராவுக்கு பெரும் பங்கு உண்டு.

தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

சென்னை:
தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள அந்த ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். அதேசமயம், கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நபர்கள், முறைகேடான வகையில் பணத்தை புதிய நோட்டுக்களாக மாற்றுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றி வருகின்றனர். இதில் புதிய ரூபாய் நோட்டுக்கள் மட்டுமின்றி பழைய நோட்டுக்களும் சிக்குகின்றன.

தமிழகத்திலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னையில் தொழிலபதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், ரூ.100 கோடிக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்திவருகின்றனர். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிலும், அவரது மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், ராம மோகன ராவுக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் வீடுகள் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராம மோகன ராவ், ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழக வேளாண்மைத்துறை, சமூக நலம், தொழில் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.

ம.ந.கூ., நிரந்தரமில்லை; பிரச்னைகளின் அடிப்படையில் கைகோப்போம்: தொல்.திருமாவளவன்

மக்கள் நலக்கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை, பிரச்சனைகளின் அடிப்படையில் நால்வரும் மீண்டும் கைகோர்ப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற 28-ந்தேதி அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டை புதுச்சேரியில் நடத்துகிறோம். இதில் தோழமை கட்சிகளின் தலைவர்கள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்._

ம.தி.மு.க. இதில் பங்கேற்கவில்லை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் இதுபற்றி வெளிப்படையாக பேசி இந்த முடிவெடுத்திருக்கிறோம். ம.தி.மு.க.வை புறக்கணிக்கவில்லை. மதிமுகவுக்கு அழைப்பு கொடுக்காமல் தவிர்க்கவில்லை.

வைகோவிடம், இது என்ன மாநாடு, என்ன தலைப்பு, என்ன பொருள் என்பதையெல்லாம் கலந்து பேசிய பிறகு ம.தி.மு.க. பிரதமர் அறிவிப்பை வரவேற்கிறது. கருப்பு பண நடவடிக்கையை ஆதரிக்கிறது. எனவே அதனை எதிர்த்து நடத்துகிற இந்த மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்க வாய்ப்பில்லை என வெளிப்படையாக எங்களிடம் கூறினார். அப்படி ஒரு புரிதலுடன் தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இதனால் மக்கள் நலக்கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. மக்கள் நலக்கூட்டணியில் ஒரே வரையறை தான். உடன்பாடுள்ள பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது, முரண்பாடான பிரச்சனைகளை பொது மேடை களில் விவாதிப்பதில்லை. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தான் நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறோம். ஆகவே இந்த பிரச்சனையில் நாங்கள் 3 கட்சிகளும் எதிர்ப்பை முன்னெடுத்து செல்கிறோம். இந்த மாநாட்டில் ம.தி.மு.க. எங்களோடு பங்கேற்கவில்லை.

மக்கள் நலக்கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை. பிரச்சனைகளின் அடிப்படையில் போராடுகிற போது அது மக்கள் நலக் கூட்டியக்கம். தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படுகிற போது மக்கள் நலக் கூட்டணி. இப்படிப்பட்ட கூட்டியக்கம் அல்லது கூட்டணி என்பது எப்போதுமே நிரந்தரமாக இருக்க முடியாது.

பிரச்சனைகளின் அடிப்படையில் நால்வரும் கைகோர்ப்போம். தேவைப்படும் போது அதற்கான சூழல் உருவாகிற போது மறுபடியும் நால்வரும் ஒரே மேடையில் தோன்றுவோம் எனக் கூறினார்.

மெக்சிகோவில் பட்டாசு மார்க்கெட்டில் தீ விபத்து: 29 பேர் பலி

மெக்சிகோ:

மெக்சிகோ பட்டாசு மார்க்கெட்டில் திடீரென தீ பற்றியதில், பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் 29 பேர் பலியாயினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியின் புறநகரான துல்டெப்க் பகுதியில் பட்டாசு விற்பனை செய்யும் மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான பட்டாசு கடைகள் உள்ளன. பொதுவாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசுகளை கொளுத்தி வானவேடிக்கை நடத்துவது வழக்கம்.

தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வர இருப்பதால் அங்கு ஏராளமான ரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று மாலை 2.50 மணி அளவில் (இந்திய நேரப்படி இரவு 8.50) ஒரு பட்டாசு கடையில் திடீரென தீப்பிடித்தது. அந்த ‘தீ’ மளமளவென பரவி அடுத்தடுத்த கடைகளிலும் பிடித்தது. இறுதியில் அந்த மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் தீப்பிடித்தது. இதனால் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த தீ விபத்து நடந்த போது பட்டாசுகள் வாங்க ஏராளமானோர் குவிந்து இருந்தனர். அவர்கள் உயிர் தப்பிக்க அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர்.

தீயை அணைக்க ஏராளமான தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. இருந்தும் தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பலியாகினர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த தீ விபத்து மெக்சிகோவில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தீவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனாநியடோ ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.

 

நாடார் சமுதாயம் குறித்த அவதூறு பாடம் நீக்கப்பட்டது பாமகவின் வெற்றி!

சென்னை:
நாடார் சமுதாயம் குறித்த அவதூறு பாடம் நீக்கப்பட்டது பாமகவின் வெற்றி என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வகுடிமக்களான நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் 9&ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இடம் பெற்றிருந்த பாடத்தை மத்திய அரசு நீக்கியிருக்கிறது. காலம் தாழ்த்தப்பட்ட நடவடிக்கை என்றாலும் இது வரவேற்கத்தக்கது.

9&ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் 168 ஆவது பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருந்தது. அதில் சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பில் இடம்பெற்றுள்ள பத்தியில் ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, நாடார்கள் சாணார் எனப்படும் கீழ்சாதியை சேர்ந்தவர்கள் என்றும், நாடார் சமுதாய பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் மேலாடை அணிவதற்காக கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும் திரித்து எழுதப்பட்டிருந்தது. இந்திய விடுதலைக்கும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட ஒரு சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலான இந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 25.10.2012 அன்று நான் தான் முதன்முதலில் அறிக்கை வெளியிட்டேன். அதைத்தொடர்ந்து மற்ற கட்சித் தலைவர்களும் இதை வலியுறுத்தினார்கள்.

நாடார் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலான பாடத்தை நீக்கும்படி அறிக்கை வெளியிட்டதுடன் பா.ம.க. ஓய்ந்துவிடவில்லை. இதை அப்போதைய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜு கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தேன். அவரும் இச்சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து நாடார்கள் குறித்த அவதூறு தகவல்களை நீக்குவது பற்றி பரிந்துரை அளிக்கும்படி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (ழிசிணிஸிஜி) பாடநூல் தயாரிப்புக் குழு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, நாடார்கள் குறித்த தகவல்கள் ஆய்வு செய்த அக்குழு நாடார்கள் குறித்து பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை என்றும் அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் 2012ஆம் ஆண்டு திசம்பர் இறுதி வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், நாடார்கள் குறித்த அவதூறு தகவல்களை நீக்குவது குறித்து கல்வியாளர்கள் மிரினாள் மிரி, ஜி.பி. தேஷ்பாண்டே ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய கண்காணிப்புக்குழு முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், அதன்பின் பல்வேறு காரணங்களால் இத்திருத்தம் கிடப்பில் போடப்பட்டது.
பாடநூல் தயாரிப்புக் குழுவின் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக அந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 24.08.2016 அன்று மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டேன். இதுகுறித்து நாடார் சமுதாயங்களின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும் பா.ம.க. தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதுமட்டுமின்றி, 9&ஆம் வகுப்பு பாடநூலில் இருந்து நாடார்களை அவதூறு செய்யும் பாடத்தை நீக்க ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில் 4 வாரங்களில் முடிவு எடுக்கும்படி மத்திய அரசுக்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கும் (சி.பி.எஸ்.இ) 16.11.2016 அன்று ஆணை பிறப்பித்திருந்தது.

பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகளின் பயனாக நாடார் சமுதாயம் குறித்த அவதூறு கருத்துக்கள் அடங்கிய காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பிலான பாடத்தை 9&ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இருந்து நீக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆணையிட்டிருக்கிறது. இந்த பாடத்திலிருந்து வினாக்கள் எழுப்பப்படக் கூடாது என்றும் ஆணையிட்டிருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஏற்று, தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய அய்யா வைகுந்தரின் வாழ்க்கை வரலாற்றை மத்திய மற்றும் மாநில பாடத்திட்ட நூல்களில் ஒரு பாடமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடைசி டெஸ்டையும் வென்று இந்தியா சாதனை

சென்னை:

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியையும் வென்று இந்திய அணி சாதனை படைத்தது.

சென்னையில் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 477 ரன்கள் எடுத்தது, பின்னர் முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி, கடைசி நாளான இன்று 207 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. ஜடேஜா 7 விக்கெட் எடுத்து சாதித்தார்.
இதன் மூலம் இந்திய அணி, ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 75 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்தத் தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வென்றது.

இந்தியாவைப் பார்த்து பாகிஸ்தானும் காப்பி! : ரூ.5 ஆயிரம் நோட்டு வாபஸ்

இஸ்லாமாபாத்:

இந்தியாவில் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தினால் ஈர்க்கப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானிலும் ரூ.5 ஆயிரம் நோட்டை திரும்ப பெற்று கொள்ள அந்நாட்டு பார்லிமென்ட் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான தீர்மானத்தை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., உஸ்மான் சயீப் உலாக் கான் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பெரும்பாலான எம்.பி.,க்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.5,000 நோட்டு திரும்ப பெறப்படுவது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். அந்த தீர்மானத்தில், ரூ.5000 நோட்டு திரும்ப பெறுவதால், பொது மக்கள் வங்கி கணக்கை பயன்படுத்துவார்கள். ஆவணமில்லா பொருளாதாரத்தின் அளவு குறையும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு சட்ட அமைச்சர் கூறியதாவது: இந்த நோட்டுகளை திரும்ப பெறுவதால், நாட்டில் குழப்பம் ஏற்படும். ரூ.5000 நோட்டு இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்த துவங்குவர். தற்போது பாகிஸ்தானில் 3.4 டிரில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இதில் 1.02 டிரில்லியன் ரூ.5,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என்றார்.