இஸ்லாமாபாத்:
இந்தியாவில் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தினால் ஈர்க்கப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானிலும் ரூ.5 ஆயிரம் நோட்டை திரும்ப பெற்று கொள்ள அந்நாட்டு பார்லிமென்ட் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பான தீர்மானத்தை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., உஸ்மான் சயீப் உலாக் கான் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பெரும்பாலான எம்.பி.,க்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.5,000 நோட்டு திரும்ப பெறப்படுவது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். அந்த தீர்மானத்தில், ரூ.5000 நோட்டு திரும்ப பெறுவதால், பொது மக்கள் வங்கி கணக்கை பயன்படுத்துவார்கள். ஆவணமில்லா பொருளாதாரத்தின் அளவு குறையும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு சட்ட அமைச்சர் கூறியதாவது: இந்த நோட்டுகளை திரும்ப பெறுவதால், நாட்டில் குழப்பம் ஏற்படும். ரூ.5000 நோட்டு இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்த துவங்குவர். தற்போது பாகிஸ்தானில் 3.4 டிரில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இதில் 1.02 டிரில்லியன் ரூ.5,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என்றார்.



