Home Blog Page 5724

ரயில்களில் ஆர்.ஏ.சி., டிக்கெட் அதிகரிக்க முடிவு

புதுடில்லி: உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆர்.ஏ.சி., எனப்படும் , ரத்தாகும் டிக்கெட்டுக்கான முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இருக்கை அல்லது படுக்கை வசதிக்கான உறுதி செய்யப்பட்ட டிக்கெட், காத்திருப்பு பட்டியல், ரத்தாகும் டிக்கெட்டுக்கான முன்பதிவு என்ற மூன்று வகை தகவல் கிடைக்கும். கடைசி நேரத்தில் டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டால், அந்த இடத்தில் பயணிக்கும் வாய்ப்பு காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு கிடைக்கும்.இதுநாள் வரை, ஆர்.ஏ.சி., என்பது படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு, 10; மூன்றாம் வகுப்பு ‛ஏசி’ பெட்டிக்கு, நான்கு; இரண்டாம் வகுப்பு, ‛ஏசி’ பெட்டிக்கு, நான்கு என இருந்தது.இந்த எண்ணிக்கையை உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

அதன்டி, ஜன., 16ம் தேதி முதல், படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு, நான்கு டிக்கெட்கள் கூடுதலாக சேர்த்து மொத்தம், 14; மூன்றாம் வகுப்பு, ‛ஏசி’ பெட்டிக்கு கூடுதலாக, நான்கு டிக்கெட்கள் சேர்த்து மொத்தம், எட்டு; இரண்டாம் வகுப்பு, ‛ஏசி’ பெட்டிக்கு கூடுதலாக, இரண்டு டிக்கெட்கள் சேர்த்து மொத்தம், ஆறு என ஆர்.ஏ.சி., வசதி அதிகரிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் ரயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கும். இது தொடர்பான சுற்றறிக்கையை, ரயில்வே வாரியம் கடந்த, 14ம் தேதி அனுப்பியது.

புயல் அபாயம் இல்லை; காற்றழுத்தத் தாழ்வு நிலையே! : வானிலை மையம் விளக்கம்

சென்னை:
‛வங்கக் கடலில், இலங்கை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளது. தற்போது புயல் அபாயம் ஏதும் இல்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா, இன்று கூறியதாவது:

வங்கக் கடலில், தென்மேற்குப் பகுதியில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால், அடுத்த, 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளிலும், உள்மாவட்டங்களில் சில பகுதிகளிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். தமிழகத்துக்கு தற்போது புயல் அபாயம் இல்லை. எனவே, அது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, தலைஞாயிறு பகுதியில், 4 செ.மீ., வேதாரண்யத்தில், 2 செ.மீ., பாபநாசத்தில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

சண்டிகர் மாநகராட்சியில் பாஜக., அபார வெற்றி: பணக்கொள்கைக்கு மக்கள் ஆதரவு!

சண்டிகார்:
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசின் புதிய பணக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை இது வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

சண்டிகர் மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகள் 26. இவற்றுக்கு தேர்தல் நடந்தது. இதில் 22 இடங்களில் பா.ஜ.க, மற்றும் அகாலிதள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகளே கிடைத்துள்ளன. இந்த அமோக வெற்றியை பா.ஜ.க., தொண்டர்கள் ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற மகாராஷ்ட்டிரா , குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தல்களிலும் பா.ஜ.க, அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெற்றதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தையே முடக்கியது. ராகுலும் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மோடியின் கொள்கையால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், சண்டிகர் தேர்தலில் பா.ஜ.க, அமோக வெற்றி பெற்றது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மத்திய அரசின் பணக்கொள்கையை மக்கள் ஏற்றுக்கொண்டதையே இது காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரூ.1000, 500 தாள்களின் மதிப்பு எவ்வளவு? விளக்கம் கேட்கிறார் ராமதாஸ்

சென்னை:
ரூ.1000, 500 தாள்களின் மதிப்பு எவ்வளவு? முரணான தகவல்கள் பற்றி விளக்கம் தேவை! என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 தாள்களை வங்கிகளில் செலுத்த புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ளன. இவை வங்கிகளில் பணம் செலுத்த செல்வோரை குற்றவாளிகளாக பார்க்கும் செயலாகும். அதுமட்டுமின்றி, இத்தகையக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் மத்திய அரசிடம் அளவுக்கதிகமான பதற்றம் தெரிவதையும் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்குடன் ரூ.1000, ரூ.500 தாள்கள் நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த போது பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வரவேற்றன. மத்திய அரசின் இந்நடவடிக்கையாயால் சுமார் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் ஒழிக்கப்படும்; அந்த பணத்தின் மதிப்பு அரசின் கணக்கில் சேர்க்கப்படும் என்று ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த 13-ஆம் தேதி வரை ரூ.12.44 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.1000, ரூ.500 தாள்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் காந்தி அறிவித்தார். அதன்பின் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்பட்ட நிலையில் குறைந்தபட்சம் ரூ.1.56 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய தாள்கள் திரும்பப் பெறப்பட்டதாக வைத்துக் கொண்டால் கூட, மொத்தம் ரூ.14 லட்சம் கோடி பழைய தாள்கள் நேற்று வரை வங்கிகளில் திரும்பச் செலுத்தப்பட்டிருக்கலாம்; அதனால் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் சிக்கும் என்ற கனவு சிதைந்தது கூட இப்பதற்றத்துக்கு காரணமாக இருக்கலாம்.
இதை உறுதி செய்யும் வகையில் ஏராளமான புள்ளி விவரங்களும், ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று நவம்பர் 8&ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த  சிறிது நேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி அன்றைய தேதியில் புழக்கத்தில் இருந்த பழைய தாள்களின் மதிப்பு ரூ.14.95  லட்சம் கோடி ஆகும் (The Reserve Bank of India (RBI) estimates that there are 16.5 billion 500 rupee notes and 6.7 billion 1000 rupee notes currently in circulation). அதன் பின்னர் நவம்பர் 29-ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்,‘‘ நவம்பர் 8ஆம் தேதி நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் விடப்பட்டிருந்த பழைய தாள்களின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி  (There were 17,165 million pieces of Rs 500 notes  and 6,858 million pieces of Rs 1,000 notes (Rs 8.58 lakh crore in Rs 500 notes and Rs 6.86 lakh crore in Rs 1,000) in circulation on November 8, 2016)’’ என்று தெரிவித்திருந்தார். இந்த இரு புள்ளி விவரங்களுக்குமிடையே வேறுபாடு இருந்தாலும், வித்தியாசத்தின் மதிப்பு அவ்வளவு அதிகமாக இல்லை.
ஆனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்டதாகக் கூறி நேற்று வெளியிடப்பட்ட தகவல், முந்தைய புள்ளிவிவரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளது.  மும்பையைச் சேர்ந்த அனில் கல்காலி என்ற சமூக ஆர்வலர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பெற்ற தகவல்களில், ‘‘நவம்பர் 8-ஆம் தேதி நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுகையில்  ரூ.9.13 லட்சம் கோடி மதிப்புக்கு ரூ.1000 தாள்களும்,  ரூ.11.38 லட்சம் கோடி மதிப்புக்கு ரூ.500 தாள்களும் இருந்தன (On November 8, it had Rs 9.13 lakh crore in 1,000 rupee notes while Rs 11.38 lakh crore in 500 rupee notes.)’’ என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரூ.20.51 லட்சம் கோடி இருந்ததாக இந்த தகவல் தெரிவிக்கிறது.
மேற்கண்ட மூன்று தகவல்களுமே இந்திய ரிசர்வ் வங்கியில் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இருந்த ரூ.1000, ரூ.500 தாள்களின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்தவை தான். இவற்றில் இரு தகவல்கள் இந்திய ரிசர்வ் வங்கியாலும், ஒரு தகவல் மத்திய நிதியமைச்சராலும் வழங்கப்பட்டவை. ஆனால், மூன்றுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் முன்னுக்குப் பின் முரணாக உள்ள நிலையில், இவற்றில் எது சரியானது என்பதை மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் தான் மக்களுக்கு விளக்க வேண்டும்.
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மத்திய அரசு எதிர்பார்த்தவாறு, சொல்லிக்கொள்ளும் வகையில்  கருப்புப் பணம் பிடிபடப் போவதில்லை. காரணம் கருப்புப் பண முதலைகள் அனைவருமே தங்களிடமிருந்த  பணத்தை உரியவர்களின் உதவியுடன் வெள்ளையாக மாற்றி விட்டனர். இந்த உண்மையை ஒப்புக் கொள்ளாமல் கொஞ்சமாவது கருப்புப் பணத்தை பிடித்து விட்டதாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் மத்திய அரசு, அதற்காக இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 தாள்களில் மதிப்பை திடீரென ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துக் காட்ட முயல்கிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.  பழைய ரூபாய் தாள்களை வங்கியில் செலுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள புதியக் கட்டுப்பாடுகள் கூட இதை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கலாம் என்ற ஐயத்தையும் புறந்தள்ள முடியவில்லை.
வங்கிகளில் இம்மாத இறுதிவரை ஒரே ஒருமுறை மட்டுமே ரூ. 5 ஆயிரத்திற்கும் மேல் பணம் செலுத்த முடியும்; அவ்வாறு செலுத்த வருபவர்களிடம் வங்கி அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி முழு திருப்தி அடைந்தால் மட்டுமே பணத்தை பெற்றுக் கொள்ளும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது ஏற்கத் தக்கதல்ல. வங்கிக்கு வருபவர்களை வாடிக்கையாளர்களாக பார்க்காமல், குற்றவாளிகளாக நினைத்து விசாரிப்பது முறையல்ல. வங்கிகள் வங்கிகளாக இருக்க வேண்டுமே தவிர காவல்நிலையங்களாகவோ, நீதிமன்றங்களாகவோ மாறக்கூடாது. கருப்புப் பண முதலைகள் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில்,  அதிகாரிகள் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றியதை தடுக்காத அரசு, ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வருபவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவறு; இதை கைவிட வேண்டும்.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நாளில் ரிசர்வ் வங்கி ஆளுகையில் இருந்த பணத்தின் மதிப்பு குறித்து முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில், அது குறித்த உண்மை நிலையை மத்திய அரசு விளக்க வேண்டும். அத்துடன், புதிய ரூபாய் தாள்களை  அதிக அளவில் வெளியிட்டு பணத் தட்டுப்பாட்டையும், மக்களின் அவதியையும் போக்க வேண்டும்.

இபிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு

பெங்களூரு :

இபிஎப் வட்டி விகிதம் கடந்த ஆண்டை விட 0.15% குறைக்கப்பட்டு, 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இபிஎப் உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடந்தது. இதில், 2016 – 17 ம் நிதியாண்டிற்கான இபிஎப் எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி வட்டிவிகிதம் 8.65 சதவீதமாக குறைக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 2015 – 2016ம் நிதியாண்டில் இபிஎப் வட்டிவிகிதம் 8.8 சதவீதமாக இருந்தது.

மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் முதலில் வரவேற்பவன் நானே: ஸ்டாலின் பேச்சு

நாமக்கல்:

கருணாநிதி நலமாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்ததால் தான் நாமக்கல்லில் நடந்த இளைஞரணி விழாவில் பங்கேற்றேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க. இளைஞரணியின் சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நேற்று நடந்தது.

தி.மு.க. பொருளாளரும், இளைஞரணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-
அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன என்று சொன்னால், எல்லா நிகழ்ச்சிகளிலும் அறக்கட்டளையின் தலைவர் என்ற முறையில் நானும் முழுமையாக பங்கேற்பதுண்டு. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில், என்னால் அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். நம்முடைய தலைவர் கருணாநிதி சிறிது உடல் நலன் பாதிக்கப்பட்டு, அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் கட்டாயம் ஏற்பட்டு, நான் மருத்துவமனையில் அவருடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பிறகு தலைவர் உடல் நலம் தேறி, அவருக்கு சிகிச்சை செய்து வரும் மருத்துவர்கள், “நீங்கள் தாராளமாக நிகழ்ச்சியில் சென்று பங்கேற்கலாம், தலைவர் நலமோடு இருக்கிறார், நீங்கள் எந்த கவலையும் பட வேண்டிய அவசியம் இல்லை”, என்று ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன பிறகு தான், சென்னையிலிருந்து புறப்பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

தொடர்ந்து 9 ஆண்டுகளாக அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இதுபோன்ற போட்டிகளை, நிகழ்ச்சிகளை நடத்தி இன்றுடன் 13,104 மாணவ, மாணவியருக்கு மொத்தம் 2 கோடியே 90 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. அண்ணா பிறந்தநாள் மற்றும் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் ஆகிய இரண்டு விழாக்கள் மூலமாக இதுவரை தி.மு.க. இளைஞரணியின் சார்பில் 17,961 மாணவ, மாணவிகளுக்கு, 6 கோடியே 69 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

இங்கே இருக்கக் கூடியவர்கள் உங்கள் உள்ளத்திலே என்ஜினீயராக, டாக்டராக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்கள். என்னதான் அந்த நிலைக்கு நீங்கள் வர வேண்டும் என்று கருதிக்கொண்டு இருந்தாலும், ஒன்றை நீங்கள் மறந்து விடக்கூடாது. இந்த நாட்டினுடைய நலனை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும். நாடு நன்றாக இருந்தால் தான் நாமும், நமக்கு பின்னால் வரக்கூடிய சந்ததியினரும் நன்றாக இருந்திட முடியும். அந்த உணர்வை மாணவச் செல்வங்களாகிய, இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் உள்ளத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

அதே நேரத்தில் உங்களை நான் இன்னொன்றும் கேட்டுக்கொள்ள விரும்புவது, நீங்கள் அரசியல்வாதிகளாகவும் வர வேண்டும் என்பதும் எனக்கு ஆசை தான். நீங்கள் அரசியல்வாதியாக வந்தால் முதலில் அதை இருகரம் கூப்பி வரவேற்கும் முதல் நபராக நான் இருப்பேன். உங்களை நான் அரசியல்வாதிகளாக வர வேண்டும் என்று கூறுவதற்கு காரணம், எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கு அது ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கிடும் வகையில் அமைந்திட முடியும். அதேபோல, உங்களைப் போன்றவர்களுக்கு எங்களைப் போன்ற அரசியல்வாதிகளும் தேவைப்படுகிறார்கள். அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

புதிய தொழில்நுட்பங்கள் நாட்டிலே உருவாக வேண்டும் என்று சொன்னால், உங்களைப் போன்ற மாணவர்கள் தான் அதனை செய்ய முன்வர வேண்டும். எனவே, நீங்கள் வர வேண்டும், வெற்றிகளைப் பெற வேண்டும், அப்படிப்பட்ட ஒரு சாதனையை ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மசூதிகளில் ஷரியத் கவுன்சில்கள்: சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு

சென்னை:

‛ மசூதிகளில் ஷரியத் கவுன்சில்கள், நீதிமன்றங்கள் போல் செயல்படுவது தெரிய வந்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவர், ஷரியத் கவுன்சில்கள் நீதிமன்றங்கள் போல் செயல்படுவதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இதற்கு திருவல்லிக்கேணி துணை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், அனைவரும் விருப்பப்பட்டு தான் ஷரியத் கவுன்சிலுக்கு செல்கின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறிய நீதிபதிகள், புதிய பதில் மனுவை, நான்கு வாரங்களில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

மேலும், மசூதிகளில் ஷரியத் கவுன்சில்கள், கட்ட பஞ்சாயத்து, நீதிமன்றங்கள் போல் செயல்படுவது தெரிய வந்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

ஆலய புனரமைப்பு பணிகளில் யுனெஸ்கோ தலையீடு சரிதானா?

தெய்வத் தமிழ்க் கழகம்
ஆலயம் காப்போம்! அறம் காப்போம்!
***
கண்ணில் பட்ட விஷயம்! நிச்சயமாக இது நம் உரிமைகளைச் சிதறடிக்கும் விஷயம்தான்!
#நாம்_அடிமை_இல்லை!

ஆன்மிகமும் பக்தியும் வளர்க்கும் ஆலயங்கள், வெறும் காட்சிப் பொருள் ஆகக்கூடிய மியூசிங்கள் ஆகின்றனவா? யுனெஸ்கோ- போடும் கட்டுப்பாடுகள், கொள்கைகள், தடைகளால்!

இதனைச் சற்றே படித்துவிட்டு, நண்பர் ஸ்ரீரங்கம் விஜயராகவன் எழுதியுள்ள விஷயத்தையும் கவனிக்க!

கூடுதல் தகவல்கள், இதுகுறித்து கிடைக்கப் பெற்றால், ஒருங்கிணைந்த வகையில் மேற்கொண்டு எடுத்துச் செல்லலாம்!

சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள், முருகன், அம்பிகை ஆலயங்கள் என்ற பாகுபாடு இன்றி, அனைத்தையும் ஒருமித்து இந்தப் பிரச்னை குறித்து அலச வேண்டும்! இது இதே அளவிலான தீவிரத்தன்மையுடன் இருக்கும் பட்சத்தில், எந்த சமரசமும் இன்றி நாம் அனைவரும் இதில் ஈடுபடவேண்டும்!

***
We request all Hindus to all send Email to UNESCO against its attempt to convert 38365 temples in Tamil Nadu as Museums. Let us defeat the attempt by cultural terrorists plan to erode into our traditions and culture .

It is an age old practise in Tamil Nadu as to when renovation to temple has to be undertaken and how is to be carried out was the prerogative of experts well versed in Vedas , Agamas and Shilpa Shastra. Based on their advise this Stapathis would undertake the renovation work. Even the HR and CE department cannot interfere with the advise of the expert panel consisting of persons well versed in Vedas , Agamas and Shilpa Shastra.

In such a situation how UNESCO can interfere with the renovation work .
The temples are governed by Agama and Shilpa Shastras and the Vigrahas consecrated are meant for worship. The temple is not an exhibition hall and most of the monuments under the care of UNESCO are not places of worship. The attempt to bring all the south Indian Temples under the aegis of Unesco is impracticable and also an attempt to degrade the sanctity of the temples.

When the HR and CE department who is administrating has no right to interfere with the renovation work , how can UNESCO interfere? And every temple renovation work should get thye approval from UNESCO is impracticable.

Till today the renovation work in temples and poojas are conducted as per the guidelines of the Shastras which are more sacred than UNESCO.

All are requested to send a protest Email on the above lines to UNESCO Headquarters to the following Email Id: m.chiba@unesco.org

***
விஜயராகவன் கிருஷ்ணன் பேஸ்புக் பதிவு:

தமிழக கோவில்களுக்கு நீதிமன்றத்தால் ஆபத்து :-
இவ்வளவவு காலமாக பல ஹிந்து இயக்கங்களும் பல ஆன்மீக பெரியோர்களும்  அரசாங்கத்தின் பிடியில் இருந்து கோவிலை மீட்க வேண்டும் என பேசி வந்துள்ளனர்..
அரசின் கீழ் உள்ள கோவில்களில் ஏதாவது தவறு எற்பட்டால் கோர்ட் மூலமாகவோ அல்லது அரசியல் தலைமை மூலமாகவோ அதை நிவர்த்தி செய்து வந்துள்ளது பற்றி நாம் அறிவோம் ..

இன்று அப்படி எந்த ஒரு சட்டதிட்டங்களோ கேள்வி கேட்கமுடியாத படி ஒரு ஆபத்தாக நீதிமன்ற தலையீடுகள் அதிகர்த்து விட்டது ..

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு நபர் தொடர்ச்சியாக பல வழக்குகளை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஹிந்து கோவில்களிலும் எந்த
திருப்பணியும் நடைபெறா வண்ணம் தடை பெற்றுள்ளார் ..

அரசு தரப்பில் (கோவில்கள் சார்பாக ) பல முறை முறையிட்டும் கணம் நீதிபதி அவர்கள் (இவர் சட்டம் மட்டும் படித்த ஒரு வடநாட்டவர் ) கோவில்கள் என்பவை ஒரு புராதன சின்னமாக மட்டும் பார்த்து அவைகளை எந்த வித மாற்றங்களும் இல்லாமல் அப்படியே வைத்திருக்க வாய்மொழி ஆணை பிறப்பித்து இருக்கிறார் ..

மேலும் தற்போது நடந்து வரும் வேலைகளை யுனெஸ்கோ என்கிற சர்வதேச அமைப்பு வந்து ஒவ்வொரு கோவிலையும் ஆராய்ந்து முடிவு சொன்ன பிறகு கட்டலாம் என்று முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது ..

இதனால் கோவில்களுக்கு திருப்பணி செய்ய வருகிற ஆன்மீக அன்பர்கள் பலர் மன வருத்தத்துடன் விலக சென்று விட்டதாக தெரிகிறது ..

இதே நிலை நீடித்தால் எல்லா கோவில்களும் பாழ் பட்டு வழிபாட்டுக்கு பயன்படாத படி செல்ல ஒரு திட்டமிட்ட சதி நடப்பது அறியமுடிகிறது …
நமது சனாதன வழிபாட்டு முறையில் அனைத்து கோவில்களுமே பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டும் என தெளிவாக சொல்லப்பட்டு இருப்பதை அறிவோம் …
தனி ஒரு மனிதனின் மடமை வாதத்தை ஏற்று ஹிந்து வழிபாட்டு தளங்களின் உரிமைகளில் தலையிட கோர்ட்க்கு நமது அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறதா என தெரியவில்லை ..

பழமையான சரித்திர பெருமை வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் அரண்மனைகள் இவைகள் புனர்நிர்மாணம் செய்யும் பொது யுனெஸ்கோ வின் அனுமதியோ அவர்களின் திறமையோ தேவை பட்டு இருக்கலாம் ..

பல வித ஆகம சாஸ்திரங்களால் மிக தெளிவாக வரையறை செய்யப்பட்ட நமது சனாதன கோவில்களில் செய்ய வேண்டிய மாற்றங்களை பற்றி ஒரு வேற்று மத மற்றும் வேற்று நாட்டுக்காரன் நிர்வகிக்கும் அமைப்பு முடிவெடுக்கும் என்றால் இதை விட கேடு நமது சனாதன மதத்திற்கு ஏற்பட்டதில்லை ..

ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நமது கோவில்களை இடித்த துளுக்கர்களும் , சுமார் 250 ஆண்டுகள் ஆண்ட கிறிஸ்துவ வெள்ளைக்காரர்களும் இடாத கட்டளையை ஒரு நீதிபதி நமது தமிழக கோவில்களில் மேல் திணிக்கிறார் என்றால் ..

வீதியில் இறங்கி போராட திராணி அற்ற ஒரு கேவல சமுதாயம் ஹிந்து சமுதாயம் என்பதை மறுபடி ஒரு தனிமனிதன் தீர்மானித்து இருப்பது புரிகிறது .

இந்த விசயத்தை அறிந்து நமது திருச்சி மாநகர ஹிந்து அமைப்பு நண்பர்களை அழைத்து இந்த கேவல அவமானமா … பேடித்தனமான நமது சமுதயாத்தை இந்த அவலத்தில் இருந்து காப்பாற்ற அழைத்து பேசினேன் ..

===========>>>>>
இனி தமிழக கோவில்களில் எந்த வித பெயிண்ட் அடிப்பதாக இருந்தாலும் நியூயார்க் நகரத்தில் இருந்து வரும் ஒரு வெள்ளைக்காரனிடம் அனுமதி பெற வேண்டும் ..
அவன் வந்து போகும் செலவு , அவன் சாப்பிடும் பன்றிக்கறி மற்றும் சாராய கணக்குக்கான பணம் .. நமது சனாதன வாதிகள் கோவில் உண்டியலில் போடும் பணத்தில் இருந்து எடுத்து கொடுக்க வேண்டி இருக்கும் ..
===================<<<<

1. கொஞ்சமாவது நமது முன்னோர்கள் மேல் மரியாதை வைத்திருப்பவர்கள் (அவங்கதானே இந்த கோவில்களை கட்டி நம்மிடம் விட்டு சென்றவர்கள் )
2. கொஞ்சமாவது நமது வருங்கால சந்ததியர் மேல் அன்பு வைத்திருப்பவர்கள் ( பராமரிப்பு இல்லாமல் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கோவில்கள் இடிந்து போன நிலையில் வருங்காலத்திற்கு விட்டு செல்லும் அவலம் )
மேல சொன்ன இரண்டு வித அவலங்களுக்கு எதிராக தமிழகம் எங்கும் பல கட்ட போராட்டட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் ..
எல்லாம் பகவான் பார்த்துக்கொள்வான் என்று சோம்பேறிக் கதை பேசாமல் .. அவற்றில் கலந்து கொண்டு துலுக்கர்கள் இடித்து தள்ளிய மிச்சம் இருக்கும் கோவில்களை காத்து அடுத்து வரும் கால சந்ததியருக்கு விட்டு செல்ல மனம்
இருப்பவர்கள் வீதியில் இறங்கி போராட அழைக்கிறோம் …

இதை நமது நண்பர் Pugal Machendran Pugal அவர்கள் தற்போது திருச்சி மாவட்டம் சார்பாக இந்த பணியில் இணைப்பாளராக பணியாற்றுகிறார் , அவருடன் கலந்து பேசி பல மாவட்ட ஆன்மீக அன்பர்கள் , உழவாரப்பணி தோழர்கள் .. மற்றும் பக்திக்குழுக்கள் ஒரு பெரிய இயக்கமாக மாற்றி அந்தந்த மாவட்டங்களில் இந்த போராட்டத்தை முன் ஏற்று நடத்தி நமது கோவில்களை காக்க வேண்டுகிறேன்…

இப்படிக்கு,
விஜயராகவன் கிருஷ்ணன்

கருணாநிதி நலம் பெற ராம.கோபாலன் பிரார்த்தனை

சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற பிரார்த்திப்பதாக இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு. கருணாநிதி அவர்கள் விரைவில் பூரண உடல் பெற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனு

புதுதில்லி:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, மாநிலங்களவை எம்.பி., சசிகலா புஷ்பா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவருக்கு என்ன உடல் நலக் குறைவு ஏற்பட்டது என்பது குறித்த உண்மையான தகவல் வெளியிடப்படவில்லை; அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இறுதிச் சடங்கு புகைப்படங்களில், அவரது முகத்தில், ‘எம்பால்மிங்’ எனப்படும் பதப்படுத்தப்பட்டதற்கான அடையாளம் உள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், இறுதிச் சடங்கு வரை, பல்வேறு உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான உடல் நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப வேண்டும்.

– என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, ஏற்கெனவே தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி என்ற அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.