சென்னை:
தமிழக தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ் என்று அவர் குறித்து செய்திகள் உலா வருகின்றன.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ். 1990-ம் ஆண்டுகளில் அன்றைய செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக ராம மோகனராவ் இருந்தார். மணல் எடுக்க அனுமதி தருவதன் மூலம் பணம் பெறலாம் என ஆட்சியாளர்களுக்கு சொல்லியவர் ராம மோகன ராவ். ராம மோகனராவ் உருவாக்கி தந்த திட்டம் மூலமே மணல் குவாரிகள் அரசு வசமானது. மணலை வியாபார பொருளாக்கி பல்லாயிரம் கோடி புரள செய்த பெருமை ராம மோகன ராவுக்கு பெரும் பங்கு உண்டு.



