Home Blog Page 5741

இன்றைய காலை நேரச் செய்திகள் சுருக்கம்

காலை செய்திகள்

1] அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது

2] ஃபேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது.அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது.ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாமை காரணமாக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நார்வே செய்தித்தாள் நிறுவனமான ஆஃப்டென்போஸ்டென் கருத்து தெரிவித்துள்ளது

3] கண்ணுக்குள் அறுவை சிகிச்சை நடத்தி பார்வையை மீட்ட ரோபோ -ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பகுதி தடிமனான மிகவும் மெல்லிய படத்தை, இயந்திர மனிதனை வைத்து உரித்து எடுத்த பிறகு, அந்நபரின் ஒரு கண் பார்வை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

4] புதிய சாம்சங் கேலக்ஸி நோட்7 செல்பேசியை இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் பயன்படுத்துவதற்கு இந்திய விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தடை விதித்திருக்கிறது -பல நாட்டு விமான நிறுவனங்கள் இந்தத் தடையை ஏற்கெனவே விதித்திருக்கும் நிலையில் தற்போது இந்தியாவும் தடை விதித்துள்ளது.விமானத்தில் பயணிக்கும்போது, சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்பேசியை இயங்கும் நிலையில் வைத்திருக்கவோ அல்லது மின்னூக்கி ஏற்படுத்தவோ வேண்டாம் என்று முன்னதாக அமெரிக்க அதிகாரிகளும் எச்சரித்து இருக்கின்றனர். பயணியர் எடுத்துச் செல்கின்ற பைகளில் அதனை வைக்காமல் இருக்க அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.மின்னூக்கி அளிக்கும்போது அல்லது அதற்கு பின்னர் இந்த செல்பேசி வெடித்து எரிந்து விடுவதாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், விற்பனை செய்த அனைத்து செல்பேசிகளையும் திரும்பப் பெறுவதாக சாம்சங் அறிவித்தது. மேலும், ஜப்பான், கான்டாஸ் மற்றும் வெர்ஜின் ஆஸ்திரோலியா விமான நிறுவனங்களும் பயணியர் விமானத்தில் பயணிக்கின்றபோது இந்த செல்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களிடம் கேட்டுகொண்டுள்ளன.இந்தியாவின் தடை குறித்து, சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கேலக்ஸி நோட் 7 செல்பேசி விற்பனை தொடங்கப்படவில்லை என்றும் சாம்சங் நிறுவனம் பாதுகாப்பு தொடர்பான கவனங்களை போக்குவதற்காகவே இந்தியாவில் விற்பனையை தள்ளிப்போட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை குறைக்கக் கூடிய வகையில், மிக விரைவாக கேலக்ஸி நோட் 7 செல்பேசிகளை புதிதாக அனுப்ப இருப்பதாக அது தெரிவித்திருக்கிறது.பாதுகாப்பு கவனங்களை நீக்கிவிடும் வகையில் திரும்ப பெறுகின்ற கேலக்ஸி நோட் 7-க்கு பதிலாக வழங்கும் புதிய செல்பேசிகளை இரண்டு வாரங்களில் வழங்கப் போவதாக சாம்சங் தெரிவித்திருக்கிறது.கடந்த மாதம் வெளியான இந்த செல்பேசி வாடிக்கையாளர்களிடம் பொதுவாக மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.இதுவரை 25 லட்சம் கேலக்ஸி நோட் 7 சாதனங்கள், உலக அளவில் விற்பனையாகி உள்ளன.

5] சிரியாவில் அலெப்போ நகரின் கிழக்கு பகுதியில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் தவித்து வரும் பல லட்சக்கணக்கான மக்களை நினைத்து கவலைப்படுவதாக சிரியாவுக்கான ஐ.நா சிறப்பு தூதர் டி மிஸ்டுரா தனது பேச்சில் கவலையை வெளிப்படுத்தினார் -சில நாட்களில், அங்கு எரிபொருள் விநியோகம் முற்றிலுமாக நின்றுவிடும் என்றும், உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இதற்குமுன் இருந்த நிலையை விட மோசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

6] திலீபன் மகேந்திரன் மீது கொலைவெறி தாக்குதல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி -சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆதரவாகவும், இந்த கொலையில் பாஜகவை சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவர் சாம்பந்தப்பட்டுள்ளார் எனவும் முகநூலில் எழுதி வந்தவர் திலீபன் மகேந்திரன். நேற்று திருவாரூர் நீதிமன்றம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் திலீபன் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து வழக்கறிஞர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். சுவாதி கொலை வழக்கு குறித்து நீ பேசக்கூடாது என்று கூறியபடியே தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மயக்கமடைந்து கிடந்த திலீபனையும், வழக்கறிஞரையும் மீட்ட வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் திலீபன் மகேந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

7] விஜயை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்-முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

8] *பாலா இயக்கத்தில் கதாநாயகியாக உருவெடுக்கும் பாடகி * -இயக்குனர் பாலாவின் அடுத்தப் படைப்பு குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் தற்போது புதுமுகங்களை வைத்து படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

9] காவிரி நீருக்காக கர்நாடகாவிடம் ஏன் கை ஏந்துகிறோம்? : வைரல் வீடியோ -கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு அங்கு பல கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு முறையும், கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரை, தமிழகம் நீதிமன்றம் மூலம் போராடித்தான் பெற வேண்டியுளது.
இந்நிலையில், நாட்டு நடப்புகளை அடிப்படையாகக் கொண்டு பல வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு வரும் ‘புட் சட்னி’ குழு, தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் உள்ள ஆறுகள் அழிப்பு, மணல் கொள்ளை என காவிரி ஆறு வற்றிப் போனதற்கான அனைத்து காரணங்களையும் அலசியுள்ளனர்.
தவறுகளை நாம் செய்து விட்டு, தற்போது காவிரிக்காக, கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கிறோம் என்கிற தொனியில் விபரங்களை அடுக்குகிறார்கள்.

10] கரூர் அருகே மணல்குவாரி அமைக்க கோரி மனு -கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நஞ்சை தோட்டக்குறிச்சி, நடையனூர் ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரம் நதி நீர் பாயவில்லை. கடந்த தி.மு.க ஆட்சியில் அளவுக்கு அதிகமாக நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட கரூர் மாவட்டத்தின் அக்கறையான க.பரமத்தி வேலூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் எடுத்ததால் காவிரியின் நதி நீர் அப்பகுதியில் மட்டுமே பாய்ந்து வருகின்றது. கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிக்கு காவிரியின் நதிநீர் வரவில்லை. இந்நிலையில் தற்போது விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும் திறந்துவிடப்பட்டுள்ள 15 ஆயிரம் டி.எம்.சி குடிநீர் தங்களுக்கு வரவேண்டுமென்றும், அதற்கு ஏற்கனவே எங்கள் பகுதியில் கொண்டு வர இருந்த அரசுப் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மணல் குவாரிகள் அமைத்து அந்த மணல் திட்டை அப்புறப்படுத்துவதோடு, எங்கள் கரையோரங்களிலும், காவிரியின் நதிநீரை கொண்டு வர வேண்டுமென்று ஊர் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
முன்னதாக தங்கள் ஊரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் முகிலன் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பபட்டது.

11] தமிழ் நாளிதழ்கள் தீயிட்டு எரிப்பு; தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தம்: கன்னட வெறியாட்டம் தொடர்கிறது! -இந்த முழு அடைப்பை ஒட்டி கர்நாடகாவில் தமிழ் நாளிதழ்களை தீயிட்டு எரித்து, கன்னட அமைப்புகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், 54 தமிழ் டிவி சேனல்களின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.அம்மாநிலத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை தமிழர்கள் தெரிந்துகொள்ள கூடாது என்பதற்காகவே இந்த தடைகளை செய்துள்ளனர். கர்நாடகாவில் தினத்தந்தி, தினமனி உள்ளிட்ட 5 முன்னணி தமிழ் நாளிதழ்கள் விநியோகிக்கப்படுகின்றன. அவற்றை வினியோகிக்கும் ஏஜென்சிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. சில இடங்களில் அதிகாலையில் வினியோகிக்கப்பட்ட நாளிதழ்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன.மேலும் 54 தமிழ் சேனல்கள் கர்நாடகாவில் ஒளிபரப்பப்படுகின்றன. அவற்றின் ஒளிபரப்பை இன்று ஒரு நாள் நிறுத்த வேண்டும் என கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து கர்நாடக அரசு அந்த கோரிக்கையை ஏற்று தமிழ் டிவி ஒளிபரப்பை நிறுத்தும்படி, கேபிள் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

12] ஜெயலலிதா பற்றி தவறாக பேசக்கூடாது : கன்னடர்களுக்கு குட்டு வைத்த சிவராஜ்குமார் -தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தவறாக பேசக்கூடாது என்று கன்னட நடிகர் சிவராஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கன்னட சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி இன்று பெங்களூரில் உள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபை அருகேயுள்ள சிவானந்தா சர்க்கிளில் நடைபெற்றது. அதில் கன்னட முன்னனி நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.அந்த கண்டன கூட்டத்தில் பேசிய பலரும் தமிழக அரசையும், ஜெயலலிதாவையும் இகழ்ந்து பேசினர். அதன்பின் நடிகர் ராஜ்குமாரின் மகனும், கன்னட சூப்பர்ஸ்டாருமான சிவராஜ்குமார் பேசினார். அவர் பேசும் போது “ எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண் என்பவர் பெண்தான். எனவே யாரும் அவரை தரக்குறைவாக பேசக்கூடாது. தமிழ்நாடு வேறு நாடு இல்லை. நமது பக்கத்து மாநிலம்தான். கர்நாடகாவை போன்றே, தமிழகத்திலும் விவசாயிகள் உள்ளனர்.ஒரு விவசாயின் துயரம் மற்ற விவசாயிக்கு தெரியும். எனவே இரு தரப்பும் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும். கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

13] திரைப்பட கல்லூரி தலைவர் கருத்தால் ’சர்ச்சை’ -குருவைக் கொண்டாடும் குருகுல கல்வி முறையே தேவை என இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவர் கஜேந்திர சவுஹான் கருத்து தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கஜேந்திர சவுஹான், “பாரத மாதாவின் முந்தைய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நம்பிக்கை களையுமே நாம் இன்றைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டியுள்ளது.அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுகளை கொண்ட ஆசிரியர்களை நாம் உருவாக்க வேண்டும். நமது பழைய கல்வியமைப்பு முறையிலான குருகுல கல்வியமைப்பே இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றும்” என தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்திற்கு கடும்கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆர்எஸ்எஸ் ஊழியரான கஜேந்திர சவுஹான், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, புனே நகரில் அமைந்துள்ள இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.கஜேந்திர சவுஹான் கடந்த 2004ஆம் ஆண்டு பாஜகவின் உறுப்பினராக தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு அரசியல் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த உயர் பொறுப்பிற்கு வருவதற்கு அடிப்படைத் தகுதியாக திரைப்படத் தொழிலில் 35 ஆண்டுகால அனுபவம் மற்றும் சிறந்த ஆளுமையாக விளங்கியிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய தகுதி இல்லாமலேயே இப்பொறுப்பில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

14] லட்சம் முத்தங்கள்: பார்வையாளர்களை கிறங்கடிக்கும் பாடல்! -ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் உருவாகி இருப்பது ”பெக்ஃபையர்” என்ற ஹிந்தி திரைப்படம். இப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் இடம் பெறும் ”லாபான் கா கரோபார்” என்ற பாடல், லட்சம் முத்தங்களுடன் தயாராகி இருக்கிறது. இந்த பாடல், இளம்தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும், முத்தங்கள் பற்றிய ஒரு ஆராய்சியினை இப்படத்தின் இயக்குனர் நன்கு செய்திருகிறார் என்பது இப்பாடலை பார்க்கும்போது தெரியவருகிறது. கலாச்சார காவலர்கள் இப்பாடலுக்கு தங்கள் எதிர்ப்பினையும் பதிவு செய்து வருகின்றனர்.

15] பரிதவிக்கும் சமச்சீர் கல்வி மாணவர்கள்! -மருத்துவப் படிப்புகளில் மாணவ,மாணவிகள் சேர்வதற்கு இனி ஒரே வழி நீட் தேர்வு மட்டுமே. 12-ம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. மேலும், 12-ம் வகுப்புத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும். இந்த தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து தான் அதிகமாக கேள்விக்கேட்கப்படுகிறது. அதனால், சமச்சீர் கல்வி படித்த பல மாணவர்கள் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.தமிழகத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் 12-ம் வகுப்புத் தேர்வில் 1117 மதிப்பெண்கள் எடுத்தவர். இவரும் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளார். அதனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சுரேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து பதில் தருமாறு மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மாணவர்களின் மருத்துவ கனவிற்கு வழிவகுக்க, ஒன்று சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் அல்லது, நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

16] ஒரிசாவில் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. அதனை வனத்துறையினர் பத்திரமாக பிடித்துச்சென்றனர்

17] அதிபர் சிறிசேனா 6 மாதத்தில் இறந்து விடுவார்: இலங்கையில் பரபரப்பு -இலங்கை அதிபராக இருக்கும் மைத்ரி பால சிறிசேனா இன்னும் ஆறு மாதத்தில் இறந்து விடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்து சொன்னதால் இலங்கை ஊடகங்களில் இந்த செய்தி நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

18] பீதியில் இருக்கும் சைவ பிரியர்கள்! –
அமெரிக்க நாட்டில் இருக்கும் மிசோரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவு மக்களிடத்தில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் நடத்திய ஆய்வில், தாவரங்களுக்கு கேட்டுகும் திறன் இருக்கிறதாம், அதன் மூலம், அவைகளை உண்பவர்களை அது தாக்குமாம். மேலும், அவர்களின் ஆய்வில், தழைகளை உண்ணும் புழுக்களை விரட்டி அடிக்க, தழைகள் தங்கள் தேகத்தில் இருந்து ஒருவித எண்ணெய் பசையை வெளிபடுத்துமாம். அந்த எண்ணெய் பசை புழுக்களுக்கு பிடிக்காமல் அந்த தழையைவிட்டு மறு தழைக்கு தாவுமாம். புழுக்கள் தங்களை உண்வதை அது எழுப்பும் சப்தத்தை வைத்து தாவரங்கள் புரிந்துக்கொண்டு இந்த தாக்குதலை செய்கிறதாம். மேலும், தாவரங்களுக்கு பேசும் திறனும் இருக்கிறதாம். அது பெரும்பாலம் குமிழ்வது போல் ஒரு சப்தத்தை எழுப்புமாம். இந்த செய்தியை கேட்டதில் இருந்து, ”நாம் உண்ணும் தாவரங்கள் நம்மை தாக்குமோ” என்று சைவ பிரியர்கள் பீதியில் இருக்கிறார்கள்.

19] ஒரு பிச்சைக்கார தமிழ் மாணவன் லண்டன் போன கதை! -ஜெயவேலுவின் குடும்பத்தினர் 80 களில் நெல்லூரில் இருந்து குடிபெயர்ந்து, சென்னை வந்து வீதிகளில் பிச்சை எடுப்பதை தங்கள் தொழிலாக கொண்டனர். இவர்கள், சென்னையில் உள்ள, நடைபாதையில் தான் உறங்குவார்கள். மழை வந்தால், அருகில் இருக்கும் கடைகளில் தஞ்சம் புகுவோர்கள். அதுவும், காவல்துறையினர் அவர்களை வந்து விரட்டும் வரை தான். ஜெயவேலு சிறியவராக இருக்கும்போதே அவரின் தந்தை இறந்துவிட்டார். அதன் பிறகு அவரின் தாய் மதுவிற்கு அடிமையாகிவிட்டார்.
ஜெயவேலு பிச்சை எடுத்து கொண்டு வரும் பணத்தை அவர் குடித்தே அழித்தார். ஜெயவேலுவிடம் அணிவதற்கு ஒரு சட்டை மட்டுமே இருந்தது. அவர் பார்பதற்கு அசுத்தமாக இருந்தார். சென்னையில் தொண்டு நிறுவனம் வைத்து பொது சேவைகள் செய்யும் உமா முத்துராமனும் அவரது கணவரும் ஜெயவேலுவை பார்த்து பரிதாபப்பட்டு, பள்ளியில் சேர்த்து விட்டார்கள். ஜெயவேல் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தார். பின் லண்டனில் இருக்கும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதால் அவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைத்து.
தற்போது, அப்படிப்பையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு, மேல் படிப்பிற்காக இத்தாலி செல்கிறார். அவரின் படிப்பு செலவு முழுவதையும் உமா முத்துராமன் தங்கள் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்கின்றனர்.

200 அன்பளிப்பை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு அபராம் -உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரக்‌ஷா பந்தன் அன்பளிப்பை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு ரூ.17 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

21] * மதுராந்தகம் அருகே பவுஞ்சூரில் நகைக்கடையில் துளையிட்டு 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பாராஸ் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் நிகழ்ந்த கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்*

22] *குமாரபாளையம் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 20

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவா?: சுகாசினி விளக்கம்

சென்னை:
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவான நிலையெடுத்ததாக, நடிகை சுகாசினி குறித்த செய்திகள் பரவின. இதற்கு சுகாசினி மறுப்பு தெரிவித்துள்ளார். யாரோ சிலர் வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் வாயிலாக தன் பெயரைப் பயன்படுத்தி தவறான தகவலைப் பரப்பி வருவதாகவும், அதற்காக தான் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் ஊடக நண்பர்களுக்கு அளித்த தகவல்:

Dear Media Friends,

Some one is using my photograph on whatsapp and twitter to make his personal statements on a social issue.

I condemn him for abusing my rights and privacy, I request friends and media to ignore and clarify that I have neither spoken to the press nor posted on any social media on any issue in the last 5 days and requesting television channels not to carry false information.

Since I am out of town it came to my notice only now. Artistes being soft targets can not be used by public and media to propagate some individuals plan to gather attention.

Thank you for support and understanding.

Suhasini Maniratnam

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆச்சாரியா எழுதிய புத்தகம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த தகவலை இன்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக ஜெயலலிதா இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை விதித்து பெங்களூரு விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது.
பின்னர், மேல்முறையீட்டு வழக்கில் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. அதன் தீர்ப்பை எதிர்த்து வழக்கு நடைபெற்ற மாநிலம் என்ற முறையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா எழுதியுள்ள தனது சுயசரிதையில், “சொத்துக் குவிப்பு வழக்கில் எனக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை மேற்கோள்காட்டி, தமிழகத்தைச் சேர்ந்த பி. ரத்னம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் “சொத்துக் குவிப்பு வழக்கில் ஆச்சார்யா ஆஜரான போது அவருக்கு அழுத்தங்கள் இருந்ததாகக் கூறியுள்ளார். எனவே, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் ஆச்சார்யா நேர்மையான முறையில் ஆஜராகி செயல்பட்டாரா என்பதையும் விசாரிக்க வேண்டும்”எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மேலும், அவர் தனது புத்தகத்தில் கூறியுள்ள புகார்கள், குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

ரத்னம் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தனது வாதத்தை முன் வைக்க வந்தார். ஆனால், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் காரணம் என்ன என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

செய்திச் சுருக்கம்: மாலை நேரச் செய்திகள்

1] விஜய் மல்லையா இந்தியா வர விருப்பம், பாஸ்போர்ட் முடக்கத்தை ரத்துசெய்ய விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல்

2] பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒட்டகங்கள் வெட்டுவதற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது

3] காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று அயோத்தியில் உள்ள அனுமன் கார்கி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய பகுதிக்கு சென்ற முதல் நேரு-காந்தி குடும்ப உறுப்பினர் ராகுல் காந்தி

4] அம்மா உணவகத்தினால் ஈர்க்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் அரசு மத்திய பிரதேசதம் மாநிலத்தில் ரூ. 10க்கு ‘தாளி’ உணவை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது

5] மும்பை விக்ரோலி பார்க்சைடு பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அங்குள்ள நடைபாதையில் வியாபாரம் செய்து வந்தார். தான் வியாபாரம் செய்யும் இடத்தை மூதாட்டி ஆக்கிரமித்து உள்ளதாக கூறி, அவரை வியாபாரம் செய்யவிடாமல் பழவியாபாரி ஒருவர் துரத்தியதாக கூறப்படுகிறது. அந்த பழ வியாபாரி வடமாநிலத்தை சேர்ந்தவர். இது குறித்து மூதாட்டி விக்ரோலியை சேர்ந்த நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகர்களிடம் முறையிட்டு உள்ளார். நேற்று அந்த கட்சியை சேர்ந்த 10 பேர் பழவியாபாரியை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். மேலும் அவர் வியாபாரத்திற்காக தள்ளுவண்டியில் வைத்திருந்த பழவகைகளையும் சாலையில் வீசி எறிந்தனர். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இந்த காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

6] காஷ்மீரில் அரசியல் பிரமுகரின் வீடு புகுந்து துப்பாக்கிகளை பயங்கரவாதிகள் துணிகரமாக கொள்ளையடித்து சென்றனர்

7] இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான உறவுகளால் விரும்பத் தகாதது நிகழ்ந்துவிடக் கூடாது: அமெரிக்கா கவலை

8] *கடலூர் மாவட்டம் விருத் தாசலத்தில் ஒருதலை காதலுக்கு மேலும் ஒரு பெண் பலியாகி உள்ளார்.
விருத்தாசலம் பூதாமூர் ஏனாதிமேட்டை சேர்ந்தவர் செல்லமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகள் புஷ்பலதா*

9] கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்யபட்ட 10 வகுப்பு மாணவி பலி என்ஜினீயரிங் மாணவர் கைது தாய் செல்வியை பார்ப்ப தற்காக புஷ்பா விரகனூர் ஏரிக்கரைக்கு அடிக்கடி சென்று வந்தார்.இதனை நோட்டமிட்ட அந்த பகு தியை சேர்ந்த என்ஜினீய ரிங் கல்லூரி மாணவர் விக்னேஷ் (18) அவரை பலாத்காரம் செய்ய முடிவு செய்தார்.கடந்த 4ந் தேதி மாணவி சென்ற போது பின் தொடர்ந்து சென்ற மாண வர் விக்னேஷ் திடீரென மாணவியை வலுக்கட் டாயமாக தூக்கி சென்றார். அந்த ஏரிக்கரையிலேயே மறைவான இடத்தில் வைத்து புஷ்பாவை பாலியல பலாத்காரம் செய்ய முயன் றார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததால் கை-கால்களை கயிற்றால் கட்டினார். பின்னர் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியலபலாத்காரம் செய்து உள்ளார். அப்போது மாணவி போராடியதால் அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன விக்னேஷ் மாணவியை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.இதுபற்றி மாணவியின் தாய் விரகனூர் போலீசில் புகார் கொடுத்தார். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அப் போது புஷ்பா விஷம் குடித்து இருந் தது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட் டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு புஷ்பா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே போலீசார் விக்னேசை கைது செய்தனர். பிரேத பரிசோதனை முடி வில் தான் அவர் விஷம் குடித்து இறந்தாரா ? அல்லது தாக்கப்பட்டதில் இறந்தாரா? என்று தெரியவரும்.

10] மனைவி நடத்தையில் சந்தேகம் தலையை வெட்டி கோவில் முன்பு வைத்த கணவர் -நெல்லையை அடுத்த வெள்ளாளன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 47).

11] வீனஸ், எரி நட்சத்திரங்களை ஆய்வு செய்ய செயற்கைகோளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறினார்

12] எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் கருணாநிதி பேச்சு

13] காவிரி நதிநீர் விவகாரம்: நாளை கர்நாடக அமைச்சரவை கூட்டம்

14] * பச்சமுத்து நிபந்தனை ஜாமீனுக்கு ரூ.75 கோடி வைப்புத் தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. வைப்புத் தொகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செலுத்தியதாக பச்சமுத்துவின் வழக்கறிஞர் வெங்கடேசன் தெரிவித்தார்*

15] ஆபாச சிடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சர் சந்தீப் குமாருக்கு டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது

16] பெங்களூருவில் தமிழகத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்பினர் பேரணி நடத்தினர். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர்

17] முதல்வர் ஸ்கூட்டி திட்டத்தின் கீழ் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த 300 மாணவிகளுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி ஸ்கூட்டர்கள் வழங்கினார்

18] நெல்லை: ஆழ்வார்குறிச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் நாயை சிறுத்தை தூக்கிச் சென்றதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கடையம் பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சில நாட்களுக்கு முன் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது

19] புதுச்சேரி அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் வைத்தியலிங்கம் ஒத்திவைத்தார். கடந்த மாதம் 24ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது

20] புதுச்சேரி விவசாய கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் கந்த சாமி தெரிவித்துள்ளார். இதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் வை-பை வசதி அமைக்கப்படும் என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். முதியோர் உதவித்தொகை ரூ.100 உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்

21] காரைக்காலுக்கு 7 டிஎம்சி தண்ணீர் தர வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர் சிவா கொண்டு வந்த தனி நபர் தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது

22] கொல்கத்தா பிரஸிடென்ஸி பல்கலைக்கழகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளாமான புத்தகங்கள் எரிந்து நாசமாகின. பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 5 தீயணைப்பு படை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன

23] திருத்தணி சுற்றுவட்டார ஊர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

24] சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் போலீசாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் சேர்ந்து நடத்திய சோதனையில் 10 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

25] சென்னை மாநகராட்சி கூட்டம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடிவடைய இருந்த சென்னை மாநகராட்சி கூட்டம் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு நாளையுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது

26] இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமிழகம் வந்தடைந்தார். குன்னூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கா விமானம் மூலம் பிரணாப் முகர்ஜி கோவை விமான நிலையம் வந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்த பிரணாப்பை ஆளுநர் பூங்கொத்து கொடுத்தது வரவேற்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரணாப் முகர்ஜி குன்னூர் சென்றார். வெலிங்கடனில் நடைபெறும் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக பிரணாப் முகர்ஜி வருகை தந்துள்ளார்

27] ஸ்பெயின் நாட்டில் கலிசியா என்ற இடத்தில் ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்

28] நெல்லையில் உறுப்பு தான ஆபரேசன்கள் ஏன் அரசு மருத்துவமனையில் நடப்பதில்லை: நெல்லை மருத்துவமனை டீன் மழுப்பல் -நெல்லையில் மூளைச்சாவடைந்த அவினாஷ், சரவணன் உள்ளிட்டோரின் உடல் உறுப்புகள் தானம், தனியார் மருத்துவமனைகள் மூலமாக நடக்கின்றன. ஆனால் நெல்லை அரசு மருத்துவக்கல்லுõரி மருத்துவமனையில் அதற்கான வாய்ப்புகள் இல்லையா என கேள்விஎழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த, முதல்வர் முனவரா, தற்போதுதான் அதற்கான அனுமதியை அரசு அளித்திருப்பதாகவும், தற்போது புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவததாகவும் இன்னமும் பத்து மாதங்களில் அனைத்து உறுப்பு தான ஆபரேசன்களும் இங்கேயே மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஆனால் அவரது பதில் மழுப்பலாகவே இருந்தது.

29] காவிரி விவகாரம்: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

30] பெங்களூரு: கர்நாடக விவசாயிகள் மீது தடியடி

Vishwarubam 9962023699

ஆதாருடன் குடும்ப அட்டையை இணைக்க…

தற்போது நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை  நம் குடும்ப அட்டை எண்ணோடு பதிவு செய்யப்பட்டுக்கொண்டு உள்ளது ,

அதை செய்யாதவர்கள். தங்கள்  ஸ்மார்ட்போனில்  Google app store ல் TNePDS என்ற  செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை போட்டால்  ஒரு முறை குறுஞ்செய்தி (one time password) வரும்

அதை  அந்த செயலியில் போட்டுக்கொண்டால்  நமக்கு  நம் பக்கம் திறக்கும் அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் பொருட்டு நம் ஆதார் அட்டையை. காட்டினால் barcode ஸ்கேன் செய்யும் ,

பிறகு அதே போல் எல்லா குடும்ப உறுப்பினர்களின்  ஆதார் அட்டையும் பதிவு செய்யலாம்  , ,

செய்திச் சுருக்கம்:

1] வடகொரியா, தனது ஐந்தாவது, மிகப்பெரிய அணு அயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாகத் தெரிவித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது

2] ஜெயலலிதாவிற்கு பாடைகட்டி இறுதி ஊர்வலம்: வரம்பு மீறி தமிழகத்தை சீண்டும் கன்னடர்கள்- கன்னடர்களே கர்நாடக முதல்வர் சித்தராமையா எங்களாலும் கேவலபடுத்தமுடியும் –தமிழக மக்கள் இயக்கம் . காவேரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கர்நாடகாவில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. வேறு வழியின்றி சட்டத்தை மதிக்க கனத்த இதயத்துடன் தண்ணீர் திறந்து விடுவதாக கூறி தண்ணீர் திறந்து விட்டார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. இதனையடுத்து கர்நாடகாவில் தொடர் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் போராட்டங்கள், முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தர முடியாது எனவும் கூறி வரும் கன்னடர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.தமிழக முதல்வரின் உருவ படத்தை காலால் மித்து அவமரியாதை செய்யும் கன்னடர்கள். தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை ஒன்றை வடிவமைத்து பாடைகட்டி தூக்கி சென்று சங்கு ஊதி இறுதி ஊர்வலம் நடத்தினர். பின்னர் அதனை தீ வைத்து எரித்து அத்துமீறி ஒரு மாநிலத்தின் முதல்வரை அவமரியாதை செய்கிறார்கள்.தன்னுடைய மாநில விவசாயிகளின் வாழ்வாதரத்திற்காக உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்ற உத்தரவால் தற்போது தண்ணீர் பெற்ற தமிழக முதல்வரின் உருவ பொம்மையை வைத்து இறுதி ஊர்வலம் நடத்துவது எந்த வகையில் நியாயம். எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு பல வழிகள் இருக்கிறது. இது போன்ற அநாகரிகமான முறையில் செயல்படுவது இரு மாநிலத்திற்கும் இடையே சுமூகமான உறவை உருவாக்காது.கன்னடர்களின் இந்த செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழர்கள் ஈடுபட்டால் தேவையற்ற பதற்றமான சூழல் ஏற்படும். எனவே கன்னடர்கள் தங்கள் எதிர்ப்பை நியாயமான வழியில் தெரிவிப்பது நல்லது என தமிழக மக்கள் இயக்கம் கருதுகின்றது .

3] ஊதியத்தில் 75 சதவீதம் நாய்க்கும், பூனைக்கும்-திருநெல்வேலி உள்ள பள்ளிவாசல் ஊழியர் ஒருவர் தான் பெறும் ஊதியத்தில் 75 சதவீதத்தை நாய் மற்றும் பூனைகளுக்கு உணவளிப்பதற்காக செலவிடுகிறார். திருநெல்வேலி மாவட்டம் பேட்டை தெருவை சேர்ந்த பள்ளி வாசலில் துப்புரவு தொழில் செய்பவர் முகம்மது அயூப். இவர் மிகச்சிறிய வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்.இவரது வீட்டிற்கு தினமும் 30 பூனைகள், 15 நாய்கள் விருந்தாளியாக வருவது வழக்கமாம். அவைகளுக்கு சாப்பாடு, பால் பொன்றவற்றை அயூப் வழங்குவது உண்டு

4] தயாரிப்பாளரும், இயக்குனரும் செக்ஸ் உறவுக்கு அழைத்தார்கள்: நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு-தன்னிடம் கல்ஷீட்டு கேட்டு வந்த சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் என்னை செக்ஸ் உறவுக்கு அழைத்தார்கள் என நடிகை பிரியங்கா ஜெயின் பகிரங்க புகார் ஒன்றை கூறியுள்ளார். பிரியங்கா ஜெயின் கூறும்போது, இரண்டு வருடத்துக்கு முன்னர் ரங்கி தரங்கா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினேன். அதன் பின்னர் பல வாய்ப்புகள் வந்தது ஆனால், என்னிடம் கல்ஷீட்டு கேட்டு வந்த சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் என்னை செக்ஸ் உறவுக்கு அழைத்தார்கள்.மும்பையில் இருந்து வந்ததால் என்னை தவறாக கணக்கு போட்டுவிட்டார்கள். அது போன்ற பட வாய்ப்புகள் தேவையில்லை என்று மறுத்துவிட்டேன். சினிமாவில் எல்லா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இப்படி இல்லை. பல நல்ல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த தனக்கு கோலி சோடா வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்

5] வாஸ்து பார்த்து, ஹோமகுண்டம் வளர்த்து அலுவலகம் திறந்த தமிழக அமைச்சர்-தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வாஸ்து பார்த்து, ஹோமகுண்டம் வளர்த்து திறப்பு விழா நடத்தியுள்ளார்

6] ஓணம் பண்டிகை தொடங்கியதை அடுத்து கேரளா மாநிலம் களைகட்டியுள்ளது. மகாபலி மன்னன் தன் நாட்டு மக்கள் மீதுள்ள அன்பால் வருடத்திற்கு ஒருமுறை காண வருவார் என்பது மக்களின் நம்பிக்கை.இதை கேரளா மக்கள் ஓணம் பண்டிகையாக கடைபிடிக்கின்றனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா ஞாயிறன்று தொடங்கியது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் 14ம் தேதிக்கு பதில் அக்டோபர் 8ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

7] இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டி மரணத்திற்கு காத்திருக்கும் பெண்-கன்னியாகுமரியை சேர்ந்த பெண் ஒருவர் தான் இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்லுக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ரோசி (வயது 55)

8] காதலுக்காக காதலன்; காதலனுக்காக காதலி-மதுராந்தகம் அருகே பெண் கொடுக்க மறுத்ததால், காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தி அறிந்த காதலியும் தற்கொலை செய்து கொண்டார். மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள செட்டிமேடு கிராம்

9] பணத்துக்காக குழந்தையை விற்ற பெற்றோர்-உத்திர பிரதேச மாநிலத்தில் வாங்கிய கடனை அடைக்க 5 மாத குழந்தையைவிற்ற பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர்

10] *கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எச்சரிக்கை : மிரட்டும் கன்னட அமைப்பினர்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்புகள், அங்கு வாழும் தமிழர்களை எச்சரித்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் குதித்துள்ள கன்னட அமைப்புகள், கர்நாடகாவில் வாழும் தமிழர்கள், தங்களுக்கு ஆதவராக இருக்க வேண்டும். இல்லையெனில், தமிழர்களின் வீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் புகுந்து தாக்குதல் நடத்துவோம். 1991ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளன*

11] தாடி, மீசை வளர்த்த இந்திய பெண் சாதனை-இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தாடி, மீசை வளர்த்து கின்னஸ் சாதனை பட்டியிலில் இடம்பெற்றுள்ளார்

12] காவிரி நீர் பிரச்சனையில், நடிகை சுஹாசினி கர்நாடகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவி வருகிறது. டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ள சுஹாசினி “ காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நான் கருத்து கூறியதாக செய்திகள் சமூகவலைத்தளங்களில் வலம் வருகிறது. ஆனால் அது தவறானது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதுபோன்ற செய்திகளை தவிர்த்துவிடுங்கள்” என்று கூறியுள்ளார்

13 கார் விபத்தில் சிக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்-பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

14] சைபீரியாவில் டல்டிகான் என்ற நதி திடீரென்று ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது. இதற்கு காரணம் நிக்கல் ரசாயன ஆலை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். சைபீரியாவின் வட பகுதியில் உள்ள் ஏராளமான மக்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதரமாக விளங்குவது டல்டிகான் என்ற நதி. இந்த நதியில் இருந்து தான் ரசாயன ஆலைகள் தண்ணீர் சேகரித்து வருகின்றனர்.இந்த நதி திடீரென்று ரத்த நிறத்தில் மாறியுள்ளது. இதைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உலகத்தில் தலைசிறந்த நிக்கல் ஆலை நிறுவனத்தில் ஒன்றான நாரில்சிக் என்ற நிறுவனத்தால் இந்த மாற்றம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த காரணத்தை தெரிவித்துள்ள அந்நிறுவனம் நிக்கல் ஆலையில் ஏற்பட்ட விபத்தினால்தான் நதியில் நிக்கல் ரசாயனம் கலந்தது என்று கூறியுள்ளனர். மேலும் ரஷியா நிக்கல் உற்பத்தியில் உலகத்தில் இரண்டாவது பெரிய நாடாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

15] சுத்தமான மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு 13-வது இடம் முதல் இடத்தில் சிக்கிம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எந்த மாநிலம் சுத்தத்தில் சிறப்பாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 2016 ஆண்டுக்கான சுவாச் பாரத் முடிவுகள் நேற்று வெளியிடபட்டது. மொத்தம் 75 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கிராமப் பகுதிகளில் உள்ள கழிவறைகளின் நிலை மற்றும் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடந்தது. நேற்று அந்த ஆய்வு குழுவை டெல்லியில் மத்திய ஊரக மேம்பாட்டு மந்திரி நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.
சுத்தமான மாநிலங்கள் வரிசையில் சிக்கிம் மாநிலம் முதல் இடம் பிடித்துள்ளது. அங்குள்ள கிராமங்களில் 98.2 சதவீதம் கழிவறை வசதிகள் இருப்பதாகவும், அதை கிராம மக்கள் சுத்தமாக பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. 96.4 சதவீதம் கழிவறை வசதிகளுடன் கேரளா 2-வது இடத்தில் உள்ளது.
மிசோரம், இமாச்சல பிரதேசம், நாகலாந்து, அரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்கள் டாப் 10 சுத்தமான மாநிலங்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ளன.
காஷ்மீர், கர்நாடகா அடுத்த இடங்களில் உள்ளன. தமிழ்நாடு 39.2 புள்ளி களுடன் 13-வது இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் ஜார்க்கண்ட் மாநிலம் கடைசி இடத்துக்கு தள்ளப் பட்டுள்ளது.

16] * கோராபுட்

ஒடிசா மாநிலத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரடியை வனத்துறையினர் பத்திரமாக பிடித்துச்சென்றனர்*

Vishwarubam 9962023699

பெண் கொடுக்க மறுத்ததால் காதலன் தீக்குளிப்பு; காதலி தூக்கில் தொங்கினார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தை சேர்ந்த கவிதாசனின் மகள் செல்வி என்கிற நுண்மதி பிளஸ் 1 படித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் விஜயகுமார் (18). என்ற விவசாய கூலி வேலை செய்து வந்தார். அவர்கள் இவரும் காதலித்து வந்தனர்.

செல்வியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய விஜயகுமார் நேற்று காலை அவரது தந்தை கவிதாசனிடம் சென்று பெண் கேட்டபோது படிக்கிற பெண்ணை திருமணம் செய்து கொடுக்க கேட்கிறாயா இந்த வயதில் காதல் தேவையா என்று திட்டி பெண் கொடுக்க மறுத்து விட்டார்.

அதன் காரணமாக விரக்தியுடன் வீட்டுக்கு சென்ற விஜயகுமார் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். தீயில் கருகி அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த செல்விக்கு விஜயகுமார் தீக்குளித்த தகவல் தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்து காதலன் இறந்து விடுவார் என்ற மனவேதனையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய விஜயகுமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நடைபெற்ற இரு தற்கொலை சம்பவங்கள் குறித்து படாளம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர் .

சட்டமானது ஜி.எஸ்.டி. மசோதா

16 மாநிலங்களின் ஒப்புதலுக்குப் பின்னர் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு, 16 மாநில சட்டசபைகள் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க அரசியலமைப்பு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

மத்தியப்பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார், டெல்லி உள்பட 16 மாநிலங்கள் இந்த மசோதாவை மாநில சட்டசபைகளில் நிறைவேற்றியுள்ளன. இதன் மூலம் 50 சதவிகித மாநில சட்டசபைகளின் ஒப்புதல் சரக்கு மற்றும் சேவை வரிக்கு கிடைத்தது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நடைமுறைக்கு கொண்டுவரும் அரசின் முயற்சிகள் வரையறுக்கப்பட்ட கால கெடுவுக்கு முன்பாகவே நடந்து வருவதாகவும், மாநிலங்களின் ஒப்புதலை பெற 30 நாட்கள் காலகெடு வைக்கப்பட்டிருந்தது என்றும், ஆனால், இந்த பணி 23 நாட்களிலேயே நிறைவேற்றுப்பட்டு விட்டதாக சமீபத்தில் ஹஸ்முக் அதியா தெரிவித்து இருந்தார்.

இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த மசோதா தற்போது சட்ட வடிவம் பெற்றுள்ளது. இனி, இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு அரசாணையாக வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்ட பின்னர், வரும் குளிர்கால கூட்டத் தொடரில் எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு முன்பு அறிவித்து இருந்ததுபோல், 2017ஏப்ரல் மாதம் சரக்கு சேவை வரி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுத பூசையும் அறிவாலயமும்

ஆயுத பூசையும் அறிவாலயமும்

ஆயுத பூசை இந்த ஆண்டும் வந்தது. வழக்கம் போல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் . வழக்கத்துக்கு மாறாக கருணாநிதி, சென்ற ஆண்டைப் போல, ஆரியர் திருவிழா என்று சொல்லவில்லை. திகார் திகிலில் சிக்கியதால்,  சென்ற ஆண்டைப் போல திராவிட பல்கலைகழகத்தில் பாடம் படிக்க வேண்டும் என்று யாருக்கும் அறிவுரை வழங்கவில்லை. இவரின் கலைஞர் தொலைகாட்சி, விடுமுறை தின நிகழ்ச்சி என்று தன் சிறப்பு மசாலாக்களை ஒளி பரப்பியது. வாழ்த்தாததினால் மிகவும் சிறப்பாக இந்த ஆரிய திருவிழா நடை பெற்றது. ஆரியத் திருவிழா, திராவிடத் திருவிழா என்று யார் நிர்ணயிப்பது? ரம்ஸானும் கிருஸ்துமஸும் திராவிட திருவிழாக்களா?  இதற்கெல்லாம் வாழ்த்து தெரிவிப்பதனால், கருணாநிதி ஐரோப்பியர் ஆகி விடுவாரா அல்லது அராபியர் ஆகி விடுவாரா? அப்படியே இவர் ஆக விழைந்தாலும், அவர்கள் இவரை ஏற்பார்களா? எது எப்படியோ,  ஆயுத பூசைக்கு வருவோம்.

 

தொன்மையான தமிழ் நூல் தொல்காப்பியம், ஒரு மன்னனையும் அவன் அரசாட்சியையும் எப்படி புகழ்ந்து பாட வேண்டும் என்று இலக்கணம் வடித்துள்ளது. உளியின் ஓசை பாடல் அரங்கேற்றம், 50ம் திரைப்படக் கதை வசனம், பெண் சிங்கம் வெற்றி விழா போன்றவற்றை எல்லாம் புகழ்ந்து பாடுவதை பிழைப்பாகக் கொள்ளக் கூடாது என்பதற்காக எழுதப்பட்ட இலக்கணம் தொல்காப்பியம். ஆனால் விழா நடத்துவதே இலக்கணமாக கொண்ட பூங்கா கண்ட நவீன தொல்காப்பியர் கருணாநிதியின்  கண்ணில் படாத, தொன் பெரும் தொல்காப்பியத் திணைக்கு பாடான் திணை என்று பெயர். இதில் ஆயுத பூசை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மானார்ச் சுட்டிய வாண்மங்கலமும்

(பொருள் அதிகாரம் 91)

 

மானார் என்ற சொல்லுக்கு மாண்புடையவர், போர் பயிற்சி பெரும் மாணவர், வெற்றி பெற்றவர்   என்றெல்லாம் உரையாசிரியர்கள் பொருள் படுத்துகிறார்கள். ஆனால் அனைவரும் ஒப்புக்கொள்வது, இவர்கள் போர் கலங்களை நீராட்டிப் பூசை செய்கிறார்கள் என்பது தான். இதன் மூலம் ஆயுத பூசை போற்றிப் பாடப்பட வேண்டிய ஒன்று என்று முதல் தமிழ் நூல் குறிப்பிடுகிறது. இப்படி ஆயுத பூசை போற்றிப்பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்துவது தொல்காப்பியம்.

 

எதிரியின் கோட்டையை சுற்றி வளைத்து பிடிப்பதைப் பற்றிய விவரத்தை சொல்லுவது உழிஞை திணை. இதில் வெற்றி பெற்ற வாளை அபிஷேகம் செய்யும் குறிப்பு உணர்த்தப்படுகிறது.

வென்ற வாளின் மண்ணோ டொன்ற

(பொருள் அதிகாரம் 68)

 

உடன் படு மெய் என்பதற்கு ஆசிரியரும் மாணவியும் புணர்ந்ததை உதாரணம் காட்டிய தொல்காப்பியப் பூங்கா எழுதிய வக்கிரப் பார்வையோனுக்கு ஆயுத பூசை எப்படி கண்ணில் படும்

 

சென்ற ஆண்டு (2010) ஜெயலலிதா ஆயுத பூசை வாழ்த்து தெரிவித்தவுடன், ஜெயலலிதாவை ஆரியர் என்றார் கருணாநிதி. அப்படி என்றால், ஆயுத பூசை கொண்டாடுபவர்களும் ஆரியர்கள் தானே?  சங்க இலக்கியமான பதிற்றுப்  பத்து, மள்ளர்கள் ஆயுத பூசை கொண்டாடியதை விவரிக்கிறது. ஆயுத பூசையைக் கொண்டாடிய பாவத்திற்காக, மலைப்பாம்பை விட்டு விட்டு மள்ளர்களை அடி என்று கருணாநிதி சொல்லி விடுவாரோ?

 

றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்

றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்

போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த 

கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்பப் 

( பதிற்றுப்  பத்து, பாட்டு 66)

 

மள்ளர்கள் கேடயத்தையும், பூ  மாலைபோல் பல வாள்களை கட்டி தொங்க விட்டும் , அவற்றை பனை நாரினால் தொடுத்த வாகைப் பூ மாலை இட்டு  வணங்கினர் என்ற செய்தியை இந்தப் பாடல் தெரிவிக்கிறது. இந்த குறிப்பின் படி,  இந்த விழவு மழைக் காலத்தில் நடந்திருக்க வேண்டும். வாகை மரம் மழைக் காலங்களிலும் பூக்கும் என்று இந்திய தாவரங்களைப் பற்றிய நூலான Flora Indica or Descriptions of Indian plants, Vol I By William Roxburgh, Nathaniel Wallich குறிப்பிடுகிறது. 

 

வாகை மலருக்கு வட மொழியில் “சீர்ஷாஎன்று பெயர். அளகாபுரி நகரில், பெண்கள் கடம்ப மலரை தலையிலும், செந்தாமரையைக் கைகளிலும், “சீர்ஷாஎன்ற வாகையைக் காதுகளிலும் அணிந்து, கார் காலத்தில் அழகு பார்த்ததாக காளிதாசரின் மேகதூதம் குறிப்பிடுகிறது.

 

(Floriculture in India  By Gurcharan Singh Randhawa, Amitabha Mukhopadhyay, p.607).

 

தமிழகத்தில், வள்ளல் என்ற சொல்லைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர் அதியமான். இந்த அதியமானுக்கும், தொண்டைமான் என்ற மன்னனுக்கும் போர் மூளும் தறுவாயில், அப்போரைத் தடுக்க தமிழ் மூதாட்டி ஔவையார் அதியமான் அரண்மனைக்குச் சென்றார். தொண்டைமானின் ஆயுதக் கொட்டிலில் போர்க் கலங்கள் நெய் பூசி, அலங்கரிக்கப் பட்டு வைத்திருந்ததைப் பார்த்து, தொண்டைமானிடம் அதியமான் அரண்மனையில் உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொல்லன் பட்டரையில் இருக்கிறது, ஆனால் இங்கோ பூசையில் வைக்கப்பட்டு இருக்கிறதே, என்று கேட்டதாக செய்தி ஒன்று காணப்படுகிறது. அரண்மனைக் கொட்டிலில் ஆயுதங்களுக்கு பூசை செய்யும் பழக்கம் புறநானூற்றுக் காலத்தில் இருந்த விபரம், தமிழ்ப்புரட்டு அரசியல் செய்பவர்களுக்கு தெரியவா போகிறது? புறநானூறு, கைபர்-போலன் கணவாய் வழியாக வந்தது என்று, அதற்கு விசா (VISA) கொடுக்காமல் இருந்தால் சரி.

 

5ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் கருவூர் புகழ் சோழநாயனார்’; இந்த சோழ மன்னனின் பட்டத்து யானை, கோயிலுக்கு மலர் கொண்டு சென்ற பக்தன் சிவகாமி ஆண்டாரின் பூக்கூடையைத் தூக்கி எறிந்தது. இதைப் பார்த்த எரிபத்த நாயனார், பட்டத்து யானையையும் அதன் பாகனையும் வெட்டிச் சாய்த்தார் என்கிறது பெரிய புராணம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த பட்டத்து யானை புரட்டாசி நவமியன்று அபிஷேகம் செய்யப்பட்டு, அழைத்து வரப்பட்டது என்பது தான். வாகனங்களை ஆயுத பூசை காலங்களில் அபிஷேகித்து, மரியாதை செய்வது 5ம் நூற்றாண்டுத் தமிழர் மரபு. ஆனால் 21ம் நூற்றாண்டிலோ, வாகனத்தில் நிராதரவாக 5 கோடி ரூபாயை விட்டு விட்டு ஓடி விடுகிறான் அறிவாலயத் தமிழன். தவறு செய்த ஐந்து அறிவு பட்டத்து யானைக்காக, மன்னிப்பு கேட்கும் அரசர்களால் கொண்டாடப்பட்ட ஆயுத பூசை, தவறு செய்யாதவன் எவன் இருக்கிறான்என்று தவறை நியாயப்படுத்தும் புரட்டர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

 

கி. பி 897 ஆம் ஆண்டு திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயக் கல்வெட்டு, சித்ரா பவுர்ணமி மற்றும் புரட்டாசி ஓணத் திருவிழாக்கள், அபிஷேகத்துடன் கொண்டாடப் பட்டதாகத் தெரிவிக்கிறது.

 

சித்திரை திங்கள் சித்திரையும்

பிரட்டாதி ஓணமும்.

 

(South Indian Inscriptions, Vol 13, NO 317, Archeological Survey of India)

 

புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரம், வளர் பிறை  தசமி திதியில் வரும். அதுவே விஜய தசமியாக கொண்டாடப்படுகிறது. 

 

விழுப்புரம் மாவட்டம் 12ம் நூற்றாண்டு இறையான் நறையூர் (இலவா நாசூர்) கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுக்களில், புரட்டாசி ஓணத் திருவிழா ஒரு பிரசித்தி பெற்ற பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட தகவல் காணப்படுகிறது. விஜய நகரப் பேரரசு கி.பி. 1336ல் தோன்றியது என்பது ஓரளவு வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். இப்படி இருக்க, நாயக்கர்கள் ஆயுத பூஜையை புகுத்தினார்கள் என்று சொல்வது கருணாநிதியின் அறியாமையா அல்லது வாடிக்கையான விஷ(ம)த்தனமா?

 

18ம் நூற்றாண்டு புதுச்சேரி மாநில ஆவணங்களில், புதுச்சேரி மாநிலத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் 2 திருவிழாக்களில் ஒன்றாக, மஹா நவமி குறிப்பிடப்பட்டுள்ளது என்று, வலங்கை இடங்கை வரலாறு என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. இந்த ஆவணத்தை சௌந்தரபாண்டியன் என்பவர் பதிப்பித்தார்.  புதுச்சேரியில் மஹா நவமி விழா கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்களை, Oriental Manuscript Library ஏடுகளிலிருந்து எடுத்து அவர் கையாண்டிருக்கிறார்.

 

தான் உய்யா விட்டாலும் கவலையில்லை, உலகத்தின் கடை நிலை மனிதன் உய்தால் போதும் என்று, சமூகத்தின் மிகவும் தாழ்த்தப்பட்டவனுக்கு இறை வழியை போதித்த இராமானுசரின் ஸ்ரீ பெரும்புதூர் கோயில் கல்வெட்டில், நவராத்திரி கொலு கொண்டாடப்பட்டதற்கான குறிப்பு, 16ம் நூற்றாண்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. பறையனும் பள்ளச்சியும் இரவிக்கை போடுவதால் விலைவாசி ஏறி விட்டது என்று பகுத்தறிவுப் பொருளாதாரம்பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பாசறையில் இருப்பவருக்கு, இந்தக் கல்வெட்டு கண்ணில் படவா போகிறது?

 

இந்த இலக்கிய குறிப்புகளிலும் கல்வெட்டு குறிப்புகளிலும் இடம் பெரும் மள்ளர்களும் (தேவேந்திர குலத்தோர்), மன்னர்களும், புலவர்களும், புரவலர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், நம் மூதாதையர்களும்  தமிழர்களில்லையா ?

 

பன்னெடுங்காலமாக , தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா கொண்டாடி வருபவர்கள் தமிழர்களில்லையா?  

 

அறிவாலயத்தால் அங்கீகரிக்கப்படுபவன் மட்டுமே தமிழன், கோபாலபுரத்தாருக்கு எடுக்கப்படுவதே விழா. தீர்ந்து விட்டது ஆரிய- திராவிட பிரச்சினை.

 

எங்கள் ஊர் சங்கீதப் போட்டி

எங்கள் ஊர் சங்கீதப் போட்டி

-கல்கி

“கேட்டீரா சங்கதியை” என்று கேட்டுக் கொண்டே கபாலி சுந்தரமையர் விஜயம் செய்தார்.
அவர் விஜயமாகும் விஷயத்தை ஜவ்வாது “நெடி’ நாழிகைக்கு முன்னமே தெரிவித்துவிட்டது. அந்த நெடியினால் நான் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும்போது, “கேட்டீரா சங்கதியை?” என்றார் மறுபடியும்.
“போட்டால்தானே கேட்கலாம்?” என்றேன் எரிச்சலுடன்.
“என்னத்தைப் போட்டால் கேட்கலாம்?” என்று சுந்தரமையர் முகத்தைச் சுளுக்கினார்.
“சங்கதியைப் போட்டால் கேட்கலாம். நம் ஊர் சங்கீத சபையில் கச்சேரி நடந்துதான் ஒரு யுகம் ஆகிறதே! பாட்டு என்கிற நாமதேயத்தையே காணோம்; சங்கதிக்கு எங்கே போகிறது?” என்றேன்.
“அதைத்தானே சொல்ல வந்தேன்!” என்றார் சுந்தரமய்யர்.
“சொல்லிவிட்டுப் போங்களேன்!” என்றேன்.
“நம் சங்கீதசபைக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது, ஸôர்! அனந்தராமன், ஐ.சி.எஸ். நம் ஊருக்கு மாற்றலாகி வரப்போகிறாராம்!” என்றார்.
நான் உட்கார்ந்தபடியே ஒரு குதி குதித்து, “எந்த அனந்தராமன்! ஆபோஹி அனந்தராமனேதான்!”
“சபா! அப்படியானால் என் ஆறு மாதத்துச் சந்தா பாக்கியையும் எடுத்துக் கொள்ளும்!” என்றேன்.
சுந்தரமையர் போய்விட்டார். அவர் போன பிறகு ஒரு புட்டி மண்ணெண்ணெய் கொண்டு வரச் சொல்லித் தெளித்த பிறகுதான் ஜவ்வாது வாசனை போயிற்று. எனக்கும் வேலையில் மனத்தைச் செலுத்த முடிந்தது!
கபாலி சுந்தரமையருக்கு சங்கீத வித்வான்களுடைய பழக்கத்தினால்தான் ஜவ்வாது பழக்கமும் ஏற்பட்டது. சென்ற முப்பது வருஷ காலமாக அவர் எங்களூர் சங்கீத சபையின் காரியதரிசி. பொறாமை கொண்ட சிலர் அவ்வப்போது அவரை அந்தப் பதவியிலிருந்து விரட்டி விட முயற்சி செய்ததுண்டு. ஆனால், மூன்று மாதத்துக்கெல்லாம் அவர்களே சுந்தரமையரிடம் சென்று காரியதரிசிப் பதவியை ஒப்புக்கொள்ளும்படி கெஞ்சுவார்கள்.
சுந்தரமையரை சங்கீத உலகின் ஜாம்பவான் என்றே சொல்ல வேண்டும். “கோனேரிராஜபுரம் வைத்தாவுக்கு இந்தக் கையால் பதினேழரை ரூபாய் எண்ணிக் கொடுத்தேன். திருக்கோடி காவல் கிருஷ்ணையருக்கு இருபத்தாறே கால் ரூபாய் எண்ணிக்கொடுத்தேன். இப்போது என்னடா என்றால் தம்பூரைச் சுருதிகூட்டத் தெரியாதவன்களெல்லாம் வித்வான்கள் என்று வந்து, “நூறு வேணும், நூற்றைம்பது வேணும் என்று கேட்கிறான்கள்’ என்று சுந்தரமைய்யர் அடிக்கடி புகார் சொல்வார். ஆனால், அந்த “தம்பூர்’ சுருதி கூட்டத் தெரியாத வித்வான்கள் வந்துவிட்டால், அவர் படுத்துகிற பாடும், செய்கிற உபசாரமும், பக்கத்திலிருப்பவர்களை மிரட்டும் மிரட்டலும் அசாத்தியமாயிருக்கும். “காலத்துக்கேற்ற கோலம் போட வேண்டியிருக்கு ஸôர்; நாய் வேஷம் போட்டால் குலைக்காமல் முடியுமா!’ என்று சமாதானம் சொல்வார்.”
எப்போதும் சுந்தரமையருடைய சங்கீத ஊக்கம் ஒரே மாதிரியாயிருந்தாலும், எங்களூர் சங்கீத சபை சிலசமயம் ரொம்ப ஜோராய் நடக்கும். சில சமயம் படுத்துத் தூங்கிப் போய்விடும். சபை ஜோராய் நடப்பதும், தூங்கி வழிவதும் அவ்வப்போது எங்கள் ஊருக்கு வரும் பெரிய உத்தியோகஸ்தர்களைப் பொறுத்தது என்று சொல்லலாம். ஜில்லா கலெக்டரோ, ùஸஷன்ஸ் ஜட்ஜோ, சங்கீத அபிமான முள்ளவர்களாய் வந்துவிட்டால், அப்போது சபை நடக்கிற விதமே ஒரு தனிதான். மற்ற உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள் எல்லாரும் சபையில் சேர்வார்கள்; சந்தாவும் கொடுப்பார்கள். பெரிய பெரிய வித்வான்களின்கச்சேரிகள் நடக்கும் சபைக்கு ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமென்று யோசனைகூடக் கிளம்பும்.
ஆகவே, ஆபோஹி அனந்தராமன் எங்களூருக்கு வரப் போகிறார் என்று தெரிந்ததில் சுந்தரமையருக்குப் பிரமாதமான குதூகலம் உண்டானதில் ஆச்சரியமில்லையல்லவா?

ஸ்ரீஅனந்தராமன் ஐ.சி.எஸ்ஸýக்கு “ஆபோஹி’ ராகம் என்றால் பிராணன். ஒரு கச்சேரியில் வித்வான் “ஆபோஹி’ ராகம் என்றால் பிராணன். ஒரு கச்சேரியில் வித்வான் “ஆபோஹி’ ராகம் பாடவில்லையென்றால், அன்றையக் கச்சேரிக்கு முக்கால் பங்கு மார்க்குதான் கொடுப்பார். ஆபோஹியில் அப்படி என்ன விசேஷமென்று எனக்குத் தெரியாது. “ஆ’ எழுத்தில் ஆரம்பிப்பது விசேஷமென்றால் “ஆரபி’, “ஆஹிரி’, “ஆனந்த பைரவி’ முதலிய ராகங்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில், பாடுகிறவர்கள் பாடினால் எந்த ராகம் பாடினாலும் நன்றாய்த்தானிருக்கிறது. ஆனால், அனந்தராமன் அபிப்பிராயம் அப்படியில்லை. அவர் ஒரு சமயம் ஒரு கச்சேரியில் பாராட்டுச் சொல்லும்படி நேர்ந்தது. அப்போது அவர் கூறியதாவது: “என்னமோ இந்தக் காலத்தில் சிலர் சுயராஜ்யம் வேண்டும், சுதந்திரம் வேண்டும் என்றெல்லாம் கூத்தாடுகிறார்கள். இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு போஹி ராகத்தில்தான் நம்பிக்கை. “இந்தியா தேசம் வேண்டுமா, ஆபோஹி ராகம் வேண்டுமா?’ என்று என்னை யாராவது கேட்ல், சிறிதும் தயக்கமின்றி “எனக்கு ஆபோஹியைக் கொடுங்கள்; இந்தியாவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்பேன். என்னமோ úஸôஷலிஸம் என்கிறார்கள், கம்யூனிஸம் என்கிறார்கள். பொது உடைமை – அபேதவாதம் – என்றெல்லாம் பிரமாதமாய்ப பேசுகிறார்கள். ஆபோஹியை நானும் அனுபவிக்கிறேன்; நீங்களும் அனுபவிக்கிறீர்கள்; நடுத்தெரு நாராயணனும் அனுபவிக்கிறான்! இதைவிட மேலான úஸôஷலிஸம் வேறெங்கே இருக்கிறது என்று கேட்கிறேன். அரசியல்வாதிகள் பதில் சொல்லட்டும்!” (சபையில் பிரமாதமான கரகோஷம்)
இந்தப் பிரசங்கம் செய்த பிறகுதான், அவருக்கு “ஆபோஹி அனந்தராமன்’ என்று வந்தது. இதெல்லாம் எனக்கு முன்னமேயே தெரியும். ஆகவே சுந்தரமய்யரைப் போலவே நானும் எங்களூர் சங்கீத சபைக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று நம்பினேன். எங்களுடைய நம்பிக்கை பொய்யாகப் போகவில்லை. அனந்தராமன் ஐ.சி.எஸ். வந்த உடனேயே எங்களூர் சங்கீத சபை எஎழுந்து உட்கார்ந்து “என்ன சேதி?’ என்று கேட்கத் தொடங்கியது.
சங்கீத அபிமானமுள்ள உத்தியோகஸ்தர்கள் இதற்கு முன்னாலுந்தான் எங்களூருக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், அனந்தராமன் விஷயத்தில் விசேஷம் என்னவென்றால், அவருடைய மனைவியும் சங்கீதத்தில் அபிமானம் உள்ளவராயிருந்ததுதான்.
ஒருவேளை ஏதாவது தலைபோகிற காரியம் இருந்தால் அனந்தராமனாவது கச்சேரிக்கு வராமலிருப்பார்; மிஸ்ஸஸ் அனந்தராமன் ஒரு கச்சேரிக்காவது வரத் தவறுவதில்லை. கலெக்டர் சம்சாரம் சங்கீதத்தில் எப்போது சிரத்தை கொண்டாரோ, அப்போது ஜட்ஜின் மனைவி, முனிசீப்பின் பத்தினி எல்லாருக்குமே அந்தத் தொத்து வியாதி பிடித்துக் கொண்டது. வக்கீல்களின் மனைவிமார் இவர்களுக்குப் பின்வாங்கி விடுவார்களா? கொஞ்ச நாளில் சபையில் ஸ்திரீகளுக்கென்று ஒதுக்கியிருந்த இடத்தை இரண்டு பங்கு விஸ்தரிக்க வேண்டியதாகி விட்டது. அப்படியும் இடம் போதவில்லை.
சில ஸ்திரீகள் தைரியமாகப் புருஷர்களுக்கு மத்தியில் வந்து உட்கார ஆரம்பித்தனர். இதைக் கேள்விப்பட்டதும், சில வயதான ஸநாதனிகள், “கலி முற்றிவிட்டது; ஆகையால் நாமும் இனிமேல் சங்கீதக் கச்சேரிக்குப் போக வேண்டியதுதான்” என்று தீர்மானித்து வரத் தொடங்கினர்.
சுந்தரமையர் வீடு வீடாய்ப் போய்ச் சந்தாவுக்காக கெஞ்சிக் கூத்தாடிய காலம் மாறி,சுந்தரமையரிடம் நாங்கள் போய் “ஸீட் ரிசர்வ்’ செய்வதற்காகக் கெஞ்ச வேண்டிய காலம் வந்தது.
மிஸ்ஸஸ் அனந்தராமன் கலைவளர்ச்சியில் ரொம்பவும் ஆர்வமுடையவர். வெறுமே கச்சேரிக்கு வந்து கேட்டதுடன் அவர் இருந்துவிடவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைக்குச் சங்கீதம் கற்றுக் கொடுக்க வேண்டும். பரத நாட்டியம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பிரசாரம் செய்து வந்தார். இதன் பயனாக வீட்டுக்கு வீடு தம்புரா, சுருதி, பிடிலை “கர்புர்’ என்று இழுக்கும் சப்தம், “தா-தை’ சப்தம் எல்லாம் கேட்க ஆரம்பித்தன.
இவ்வளவு தூரம் கலைவளர்ச்சிக்குக் காரணமாயிருந்த மிஸ்ஸஸ் அனந்தராமன் அவ்வளவுக்கும் சிகரம் வைத்தது போல் ஒரு காரியம் செய்யத் தீர்மானித்தார். சபை அங்கத்தினர்களின் வீட்டுக் குழந்தைகளுக்காக சங்கீத – நாட்டியப் போட்டிகள் ஏற்படுத்திப் பரிசுகள் வழங்க வேண்டுமென்று சொன்னார். ஊரில் உற்சாகம் கரை புரண்டு ஓடத் தொடங்கியது. கலெக்டர் அனந்தராமன் சிறந்த பாட்டுப் பாடும் குழந்தைக்கு ஒரு வெள்ளிக்கோப்பை தருவதாகச் சொன்னார்; இன்னொருவர் பரத நாட்டியத்துக்குப் பரிசு கொடுப்பதாக முன் வந்தார். ஒருவர் வீணைக்கு, ஒருவர் பிடிலுக்கு, இம்மாதிரி ஏகப்பட்ட பரிசுகள் ஏற்பட்டு விட்டன. சங்கீதப் போட்டிப் பரீட்சையில் கலெக்டர் அனந்தராமன் கட்டாயம் ஒரு ஜட்ஜாயிருப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆகவே, ஒவ்வொரு வீட்டிலும் “மனஸý நில்ப… மதுர கண்ட” என்று ஆபோஹி அலறல் கேட்கத் தொடங்கியது.

நவராத்திரிக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருந்தபோது ஒருவரும் எதிர்பாராத ஒரு துர்ச்சம்பவம் நேர்ந்தது.
எங்கள் நகருக்கு முப்பது மைல் தூரத்தில் ஒரு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உற்சவம் சம்பந்தமாக ஹிந்து – முஸ்லீம் சச்சரவு ஆரம்பித்தது. அது வெகு சீக்கிரமாகப் பரவிற்று. அடிதடி, வெட்டுக் குத்து, வீட்டில் நெருப்பு வைத்தல், வைக்கோல் போரில் நெருப்பு வைத்தல். இப்படியெல்லாம் செய்திகள் வரத் தொடங்கின. இது என்னமாய் முடியுமோ என்று எல்லோரும் கதி கலங்கினோம். நகரில் பரபரப்பு அதிகமாகக் கடைகள் எல்லாம் மூடப்பட்டன.
“நவராத்திரி வரைக்கும் இப்படியே இருந்துவிடமோ, என்னமோ? இவ்வளவு ஏற்பாடுகள் செய்து சங்கீதப் போட்டி நடக்காமல் போய்விடுமோ என்று மிஸ்ஸஸ் அனந்தராமன் கவலைப்பட்டார். “நீ சும்மா இரு!” என்றார் அனந்தராமன். கலகம் நடக்கும் இடத்துக்கும் நேரில் கிளம்பிப் போனார்.
அனந்தராமன் போய் இருபத்து நாலு மணி நேரத்துக்குள், கிராமங்களில் பூரண அமைதி நிலவியது. அவர் விரட்டிய விரட்டலில் போலீஸôர் அதிதீவிரமாக வேலை நடத்தவே, “கப்சிப்’ என்று கலகம் அடங்கிவிட்டது. தடைப்பட்ட மாரியம்மன் உற்சவத்தைக் கிட்ட இருந்து அனந்தராமன் நடத்திவிட்டு வந்தார்.
கலெக்டர் அனந்தராமன் கலகம் அடக்கிய மகிமையைக் குறித்துத் தேசமெல்லாம் புகழ்ந்தது. அனந்தராமனும் வெகு குதூகலமாயிருந்தார். நாலு நாளைக்கெல்லாம் அவருக்கு மாற்றல் உத்தரவு வந்தது! வடக்கே, மழை மாரி, ஆறு, குளம், சங்கீத சபை ஒன்றுமில்லாத ஒரு வறட்டு ஜில்லாவுக்கு அவர் அனுப்பப்பட்டார். இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ளே போய் “சார்ஜ்’ ஒப்புக் கொள்ள வேண்டுமென்று உத்தரவு!
இந்த மாற்றல் அநேகருக்கு ரொம்பவும் ஆச்சரியமாயிருந்தது. ஆனால் எனக்கு அவ்வளவு ஆச்சரியம் தரவில்லை. அனந்தராமன் செய்தது பிரிட்டிஷ் அரசியல் தர்மத்துக்கு முற்றும் விரோதமான காரியம் அல்லவா? ஓரிடத்தில் ஹிந்து முஸ்லீம் சச்சரவு வந்தால் அதை உடனே அடக்கிப் போடுவது யாருக்குப் பிரீதி? நாலு நாள், பத்து நாள் கலகம் நடந்து, ஆடி ஓடி ஓய்ந்தால் சிரங்கைக் கீறி ஆற்றியது போலாகும். சட்டென்று ஒரே நாளில் அடக்கிவிட்டால் கலகம் உள்ளடங்கிப் போகிறது. துவேஷம் உள்ளே கிடந்து குமுறுகிறது. இதனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்யமே அல்லவா ஆடிப் போய்விடும்?
மிஸ்ஸஸ் அனந்தராமன் அழாக் குறையாக எங்கள் ஊரைவிட்டுப் போனார். ஆனால், போகும்போது கடைசி வார்த்தையாகச் சுந்தரமையரிடம், “நான் எங்கே போனாலும் உங்கள் சபையை மறக்கமாட்டேன். நவராத்திரியில் சங்கீதப் போட்டியை மட்டும் சிறப்பாக நடத்திவிடுங்கள்” என்று சொன்னார். ஆபோஹி அனந்தராமனும், தாம் எப்போதும் எங்கள் சபையின் போஷகராயிருந்து வருவதாக வாக்களித்தார்.

நவராத்திரியில் குழந்தைகளின் சங்கீத-நாட்டியப் போட்டி நடத்துவதற்குப் பலமான ஏற்பாடுகளை சுந்தரமையர் செய்து வந்தார். ஜட்ஜுகளாக யாரை ஏற்படுத்துவது என்பதில்தான் சிரமம் ஏற்பட்டது. சங்கீத வித்வான்கள் எல்லோருக்கும் தனித்தனியே எழுதிப் பார்த்ததில், அவர்கள் எல்லோரும் சாக்குப்போக்குச் சொல்லி மறுத்துவிட்டார்கள்.
சுந்தரமையர் எங்களோடெல்லாம் கலந்தாலோசித்தார். கடைசியில் சென்னைப் பட்டணத்திலிருந்து இரண்டு பிரமுகர்களை ஜட்ஜுகளாக வரவழைக்கத் தீர்மானித்தோம். ஒருவர் பெயர் கைலாச சாஸ்திரி, இன்னொருவர் வைகுண்டாச்சாரியார்; ஒருவர் பிரசித்தமான மாஜி சப்ஜட்ஜு, இன்னொருவர் ஒரு காலத்தில் பிரசித்தமாயிருந்த வக்கீல். இரண்டு பேரும் “சங்கீத நிபுணர்கள்’ என்று பேர் பெற்றவர்கள். சங்கீதத்தைப் பற்றி ஏதாவது விவாதம் கிளம்பினால், உடனே இவர்கள் தினசரிப் பத்திரிகையில் தங்களுடைய அபிப்ராயத்தை எழுதாமலிருக்க மாட்டார்கள். முடிவாக இந்த இரண்டு பேரில் ஒருவருடைய கடிதத்துக்குக் கீழேதான் “இந்த விவாதம் சம்பந்தமான கடிதங்கள் இனிமேல் பிரசுரிக்கப்படமாட்டா’ என்று போட்டுப் பத்திரிகாசிரியர்கள் விவாதத்தை முடிவு கட்டுவது வழக்கம்.
அந்த இரண்டு பேரையும் ஜட்ஜுகளாக வரவழைத்து விடுவதென்ரு தீர்மானமாயிற்று. அவர்களும் நல்லவேளையாகச் சம்மதித்தார்கள். எல்லா ஏற்பாடுகளும் ஜரூராக நடந்துவந்தன.
கடைசியில் எல்லோராலும் வெகு ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தினம் வந்தது. அன்று காலையில் கைலாச சாஸ்திரிகளும் வைகுண்டாச்சாரியாரும் ரயிலில் வந்திறங்கினார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகள் மாலை ஏழு மணி வரையில் போட்டி நடத்திப் பிறகு பரிசளிப்பது என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சரியாக இரண்டரை மணிக்கு என் மருமாள் ùஸôஜ்ஜியையும் அழைத்துக்கொண்டு நான் சபா மண்டபத்துக்குப் போய்விட்டேன். (ùஸôஜ்ஜியின் முழுப் பெயர் சுலோசனா.) அவளுக்கு அவன் தாயார் பரதநாட்டியம் கற்பித்திருந்தாள். எல்லாம் மிஸ்ஸஸ் அனந்தராமனின் வேலைதான் என்று சொல்ல வேண்டியதில்லை.
மூன்று மணிக்கு சபாமண்டபத்தில் ஜேஜே என்று கூட்டம் நிறைந்துவிட்டது. ஆனால், ஜட்ஜுகள் வந்த பாடில்லை. மூன்றரை மணிக்கு கைலாச சாஸ்திரிகள் மட்டும் வந்து சேர்ந்தார். வைகுண்டாச்சாரியாரின் மூக்குக் கண்ணாடி கெட்டுப் போய்விட்டதாகவும் தெரிந்தது. போட்டிக்கு ரொம்பப் பேர் வந்திருந்தபடியால், அவர் வரும் வரையில் காத்திராமல் கைலாச சாஸ்திரியின் தலைமையில் சங்கீதப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
சங்கீதப் போட்டி ஏறக்குறைய முடியும் சமயத்தில் வைகுண்டாச்சாரியார் வந்தார். அவர் பரத நாட்டியப் போட்டிக்கு ஜட்ஜாக இருந்து நடத்தினார். எல்லாம் முடிந்ததும், இரண்டு ஜட்ஜுகளும் சபை காரியதரிசி சுந்தரமையரை அழைத்துக் கொண்டு, தனி ஆலோசனைக்குப் போனார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வந்து பரிசு பெற்ற பெயர்களைச் சொன்னார்கள். பரிசு பெற்ற குழந்தைகளின் வீட்டுக்காரர்களுக்கெல்லாம் பரம சந்தோஷம்; மற்றவர்களுக்கெல்லாம் ரொம்பவும் உற்சாகக் குறைவு. “இந்த ஜட்ஜுகளைப் போல் பொறுக்கி எடுத்த முட்டாள்கள் உலகத்தில் இருக்க முடியாது” என்பது அவர்களுடைய அபிப்பிராயம். இந்தப் பெரும்பான்மை அபிப்பிராயத்தை நான் ஒத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் பரத நாட்டியத்துக்கு என் மருமாளுக்குப் பரிசு கிடைத்து விட்டபடியால், எனக்கு ரொம்ப உற்சாகமாயிருந்தது. ஆனால், ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் சிந்தனையைத் தூண்டிற்று. அதாவது பரிசு பெற்ற குழந்தைகளெல்லாம் பெரும்பாலும் சங்கீத சபைக்குச் சரியாகச் சந்தா செலுத்துவோர் வீட்டுக் குழந்தைகளாகவே இருந்தன!
வைபவத்தின் முடிவில் கபாலி சுந்தரமையர் என்னைச் சென்னைப் பிரமுகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்; வைகுண்டாச்சாரியார், “உங்கள் மருமகளுக்குத்தான் பரதநாட்டியத்தில் முதல் பரிசு என்று மிஸ்ஸஸ் அனந்தராமன் அப்போதே சொல்லி விட்டாளாமே? அந்த அம்மாளுக்குத் தெரியாதது உண்டோ? மகா புத்திசாலி!” என்றார். எனக்கு ஆச்சர்யம் அதிகமாயிற்று; மிஸ்ஸஸ் அனந்தராமன் அப்படி ஒன்றும் சொன்னதே கிடையாது!
அன்று ராத்திரி எனக்கு அவசரக் காரியமாகச் சென்னைக்குப் போகவேண்டி இருந்தது. ரயிலில் வேறு இடம் கிடைக்காதபடியால் கைலாச சாஸ்திரிகளும் வைகுண்டாச்சாரியாரும் இருந்த வண்டியிலே, நானும் ஏற வேண்டியதாயிற்று.
வண்டி ஏறினதும் வைகுண்டாச்சாரியைப் பார்த்து “நமஸ்காரம்” என்றேன். அவர் கண்ணைச் சுளித்துக் கொண்டு, “யாரையா நீர்?” என்றார். அரைமணி நேரத்துக்குள்ளேயே என்னை மறந்து விட்டாரே என்று நான் ஆச்சரியப்பட்டு கைலாச சாஸ்திரிகளைப் பார்த்தேன். அவர் ஒரு காதைக் கையால் மடித்துக் கொண்டு, “என்ன சொல்கிறீர்?” என்றார்.
விஷயம் இன்னதென்று புரிவதற்கு எனக்கு ஐந்து நிமிஷம் ஆயிற்று. விஷயம் புரிந்தபின் அதை ஜீரணம் செய்து கொள்வதற்கு இன்னும் ஐந்து நிமிஷம் ஆயிற்று.
அதாவது அன்று சங்கீத- நாட்டியப் போட்டிகளில் ஜட்ஜுகளாயிருந்தவர்களில் ஒருவருக்குக் கண் தெரியாது. இன்னொரு ஆசாமிக்குக் காது கேட்காது. குருடரும் செவிடருமாய்ச் சேர்ந்து சங்கீத- நாட்டியப் போட்டியில் தீர்ப்பளித்துவிட்டார்கள்.
கபாலி சுந்தரமையருக்கு இதெல்லாம் தெரிந்துதானிருக்க வேண்டும், எமகாதகர்! எப்படியோ காரியத்தை ஒப்பேற்றிவிட்டார்!
இதையெல்லாம் நினைக்க நினைக்க, என்னை அறியாமல் எனக்குச் சிரிப்புப் பீறிக்கொண்டு வந்தது.
விஷயம் எனக்குத் தெரிந்து விட்டதென்று அவர்களுக்கும் தெரிந்து போயிற்று; உடனே அவர்களும் சிரிக்கத் தொடங்கினார்கள்.
சென்னை போய்ச் சேரும் வரையில் நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டே போனோம்.
ரயிலும் எங்களுடன் சேர்ந்து சிரித்தது!