செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தை சேர்ந்த கவிதாசனின் மகள் செல்வி என்கிற நுண்மதி பிளஸ் 1 படித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் விஜயகுமார் (18). என்ற விவசாய கூலி வேலை செய்து வந்தார். அவர்கள் இவரும் காதலித்து வந்தனர்.
செல்வியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய விஜயகுமார் நேற்று காலை அவரது தந்தை கவிதாசனிடம் சென்று பெண் கேட்டபோது படிக்கிற பெண்ணை திருமணம் செய்து கொடுக்க கேட்கிறாயா இந்த வயதில் காதல் தேவையா என்று திட்டி பெண் கொடுக்க மறுத்து விட்டார்.
அதன் காரணமாக விரக்தியுடன் வீட்டுக்கு சென்ற விஜயகுமார் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். தீயில் கருகி அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த செல்விக்கு விஜயகுமார் தீக்குளித்த தகவல் தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்து காதலன் இறந்து விடுவார் என்ற மனவேதனையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய விஜயகுமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நடைபெற்ற இரு தற்கொலை சம்பவங்கள் குறித்து படாளம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர் .




