Home Blog Page 5800

புதிய ரயில்களும் இல்லை; கட்டண உயர்வும் இல்லை!

புது தில்லி:

2016-17ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜட்டை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும் புதிய ரயில்களுக்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை.

ரயில் பயணிகள் எதிர்பார்த்த அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. சரக்கு கட்டண உயர்வு இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், பிரதமரின் பொருளாதார தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் ரயில்வே பட்ஜெட் உருவாக்கப்பட்டதாக அமைச்சர் சுரேஷ் பிரபு தனது உரையில் கூறினார்.

ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், மக்களவை பிற்பகல் 2.15 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

சிவகாசி பட்டாசு ஆலையில் தீ 100 தொழிலாளர்கள் தவிப்பு

சிவகாசி அருகே உள்ள இ.சொக்கலிங்கபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 40 அறைகள் கொண்ட இந்த ஆலையில் தொடர்ந்து வெடித்து வருவதால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகி உள்ளன. ஆலைக்கு உள்ளே எத்தனை பேர் இருந்தனர், சேத விபரம் குறித்த விபரங்கள் தெரியவில்லை.

தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. பட்டாசுகள் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ரயில்வே பட்ஜெட்: அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புது தில்லி:

வரும் 2016-2017ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. 

அவரது பட்ஜெட், பயணிகள் நலனை மையமாகக் கொண்டது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்தாகத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மோடி. 

அதில், 

 

 

இந்த ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில், “ரயில்களில் குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மார்களின் வசதிக்காக பால் பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்” என்றும் “பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பெண்களுக்கு லோயர்பெர்த் வழங்குவதில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இதற்காக 65,000 கூடுதல் படுக்கைகள் அதிகரிக்கப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நாட்டிலேயே முதன் முறையாக, ரயிலில் கார்களை கொண்டு செல்லும் முனையம் சென்னையில் ஏற்படுத்தப்படும் ரயில்வே துறையில், பயணிகளின் கருத்துக்கள் கேட்டு, அதன்படி திட்டங்கள் வகுக்கப்படும் முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுகவில் இணைந்தனர் அதிருப்தி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள்

தேமுதிக, பா. ம. க., புதிய தமிழகம் அதிருப்தி முன்னால் சட்ட மன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் தமிழக முதலமைச்சரும் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முனையில் போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இணைந்தனர்.
————————————————

1. மாஃபா. பாண்டியராஜன்.
2. மைக்கல்ராயப்பன்.
3. சுந்தர்ராஜன்.
4. சாந்தி.
5. தமிழ்அழகன்.
6. அருண்பாண்டியன்
7. சுரேஷ்குமார்.
8. அருண்சுப்பிரமணியன்.

பா. ம. க. அனைக்கறை எம். எல். ஏ
————————————————

9. கலையரசு.

புதியதமிழகம் எம். எல். ஏ
———————————————
10. ராமசாமி

கட்டண உயர்வில்லா ரயில்வே பட்ஜெட்: தாக்கல் செய்தார் சுரேஷ் பிரபு

புது தில்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக., அரசு பொறுப்பேற்ற பின்னர், இன்று தனது 2-வது ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.

இன்று காலை நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த பட்ஜெட் போன்றே இந்த பட்ஜெட்டிலும் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு ஏதும் இடம்பெறவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தடங்களில் புதிய ரயில்களை இயக்கிய பின்னரே புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என்று அப்போது விளக்கம் கூறப்பட்டது. அந்த வகையில், இந்த பட்ஜெட்டிலும் புதிய ரயில்களுக்கான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை!

இந்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளின் பாதுகாப்பு, ரயில்வே பயணிகளுக்கான வசதிகளில் முக்கியத்துவம் கொடுத்தல், ரயில் பெட்டிகளை மேம்படுத்துவது, ரயில்களில் இணையதள வசதி அளிப்பது, ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை அதிகரிப்பது, ரயிலில் “பயோ டாய்லெட்’ அமைத்தல், சூரிய மின்சக்தியைப் பயன்படுத்துதல், மின்மயமாக்கல், எல்இடி விளக்குகள் பயன்பாட்டை அதிகரித்தல், எப்.எம். வானொலி உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

 

வெளுத்து வாங்கிய ஸ்மிரிதி இரானி; வெலவெலத்துப் போன எதிர்க்கட்சிகள்!

புது தில்லி:

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த போராட்டம், ஹைதராபாத் மாணவர் தற்கொலை விவகாரம் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பின. அதற்கு பதிலளித்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து வெளுத்து வாங்கினார். அதற்கு பதிலளிக்க இயலாமல் எதிர்க்கட்சியினர் வெலவெலத்துப் போயினர்.

அவரது பேச்சில் இருந்து….

தெலங்கானாவில் தனி மாநிலம் கேட்டுப் போராடி, எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். சுமார் 600 மாணவர்கள் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இறந்துபோயினர். பேருக்காவது ஒரு தடவைகூட, எந்தக் கல்லூரிக்காவது சென்று இந்த ராகுல் காந்தி மாணவர்களை சந்தித்தது உண்டா?

ஆனால் ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு இரண்டு முறை போய் விடிய விடிய துக்கம் விசாரித்த ராகுலின் நோக்கம் அரசியல் இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்?

ரோஹித் வெமுலாவையும் பிற மாணவர்களையும் இடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்த நிர்வாகக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கபட்டவர்களே.
நாங்கள் கல்லூரி நிர்வாகத்தில் எந்தத் தலையீடும் செய்ததில்லை…

அந்த மாணவனின் உயிரைக் காப்பாற்ற ஏன் எந்த மருத்துவரையும் அவர்கள் உடனடியாக அழைக்கவில்லை? அந்த மாணவன் தூக்கில் தொங்கியதாகச் சொல்லப்படும் அன்று, மாலையில் இருந்து மறுநாள் காலை போலீஸார் வரும் வரை இவர்கள் விடுதியில் இருந்து அந்த மாணவனைத் தூக்கிக் கொண்டு எந்த மருத்துவமனைக்கும் செல்லவில்லையே ஏன்?

துர்கா பூஜை அன்று நாடு போற்றும் தெய்வம், துர்காதேவியை தரக்குறைவாக விமர்சித்தும், மகிஷாசுரனை வாழ்த்தியும் ஜேஎன்யூ மாணவர் கூட்டம் போட்ட கோஷங்களை கொல்கத்தா தெருக்களில் வைத்து விவாதிக்க ராகுல் தயாரா?

யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, ஒரு இந்து பாசிஸ்ட், அப்சல்குருவை தூக்கிலிட வைத்த குடியரசுத் தலைவரை
விமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

ரோஹித் வெமுலாவின் தற்கொலையை காங்கிரசும், JNU மாணவர்கள் விவகாரத்தை கம்யூனிஸ்டுகளும், தங்களது அரசியல் லாபத்திற்காகவே பயன்படுத்துகின்றன.

என் பெயர் ஸ்மிரிதி இரானி. என் சாதியை யாராவது சொல்ல முடியுமா? சாதியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. கல்லூரிகள் விவகாரத்தில் நான் என் கடமையைதான் செய்தேன். யாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

இந்த தேசத்திற்காகவே வாழ்வேன். இந்த தேசத்திற்காக சாவேன். கங்கைநீரில் என்னுடைய அஸ்தி கரையும் வரை இந்த தேசதத்திற்கான என்னுடைய துடிப்பு அடங்காது. பாரத் மாதா கீ ஜெய்!

 

T-20 போட்டியில் 1000 ரன்களை கடந்தார் யுவராஜ் சிங்

ஆசிய கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நேற்று இந்தியா-வங்காளதேசம் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் யுவராஜ் சிங் 15 ரன் எடுத்தார். அவர் 7–வது ரன்னை தொட்டபோது சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 1000 ரன்னைக் கடந்தார். 47–வது போட்டியில் அவர் இந்த இலக்கை எட்டியுள்ளார். 20 ஓவர் போட்டியில் இந்த ரன்னை எடுத்த 4–வது இந்திய வீரர் என்ற பெருமையை யுவராஜ் சிங் பெற்றுள்ளார்.

பவன் கல்யாண், மகேஷ் பாபு ஆகியோருடன் கீர்த்தி சுரேஷ்

விஜய் 60 படத்துல விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் விஜய்யை தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு ஆகியோரின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

பிராட் பிட்டின் புதிய படத்தில் தீபிகா படுகோன்

”டிரிபிள் எக்ஸ் தி ரிட்டர்ன் ஆப் எக்ஸ்ஏண்டர்” என்ற படத்தில, வின் டீசல் உடன் நடித்து வரும் தீபிகா படுகோன் அடுத்து பிராட் பிட்டின் புதிய படத்தில் நடிக்க  கமிட்டாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரிதாநாயரின் புதிய புகாரால் கேரள அரசுக்கு நெருக்கடி

சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது பெண் செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் சரிதாநாயர், ஒவ்வொரு நாளும் அவர் புது புது குற்றச்சாட்டுகளை கூறி வருவதால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று சரிதாநாயர் விசாரணை கமிஷன் முன்பு மீண்டும் ஆஜரானார். அப்போது அவர் முதல்–மந்திரி உம்மன்சாண்டி கூறியதால் மின்சாரத்துறை மந்திரி ஆர்யாடன் முகம்மதை 2011–ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இல்லத்தில் சந்தித்து 2 தவணையாக ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார்.

விசாரணை கமிஷனில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த சரிதாநாயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மந்திரி ஆர்யாடன் முகம்மது மீது தான் கூறிய குற்றச்சாட்டுக்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும், மேலும் பல பிரமுகர்களுக்கு தான் பணம் கொடுத்தது தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ‘பென்டிரைவை’ நீதிபதியிடம் தான் கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

கேரளாவில் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் சரிதாநாயரின் இந்த குற்றச்சாட்டுகளை எதிர் கட்சிகள் முன்னிறுத்தி போராட்டங்கள் நடத்தி வருவதால் கேரள அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.