Home Blog Page 5799

அதிசய ஆலயம் – நந்தி தீர்த்த க்ஷேத்ரம்

Nandhi theertha kshetra - 2026

நந்தி தீர்த்த க்ஷேத்ரம்

பழமை வாய்ந்த பல கோவில்களுக்குப் பெயர் போன ஊர், பெங்களூரின் மல்லேஸ்வரம்.  குறிப்பாக சம்பிகே சாலைக்கு இணையாகச் செல்லும், 13 மற்றும் 15ஆம் குறுக்குத் தெருக்களுக்கு நடுவே அமைந்த தெருவை “கோவில் தெரு” என்றே அழைக்கிறார்கள். இங்கிருக்கும் காடு மல்லேஸ்வரர் மற்றும் நரசிம்ம மூர்த்தி, கங்கம்மா தேவி கோவில்களுக்கு நேர் எதிரே, வெற்று நிலமாக காட்சியளித்த இடத்தில் பதினேழு வருடங்களுக்கு முன் பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது, ஒரு நந்தீஸ்வரர் கோவில். 

1999ஆம் ஆண்டு அடுக்குமாடி கட்டுவதற்காகத் தோண்டிய போது நிலம் உள்ளே சதுசதுப்பாக இருக்க.. ஆச்சரியத்துடன் மேலும் தோண்டத் தோண்ட.. பரபரப்பு, பிரமிப்பு, விடுவிக்க முடியாத புதிர்களோடு வெளியே வந்தது,“தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி க்ஷேத்ரம்”என்றழைக்கப்படும் இந்த ஆலயம். சாலையிலிருந்து பல அடிகள் இறக்கத்தில் அமைந்த கோவிலுக்குத் தற்போது வெளிப்புற, உட்புற நுழைவாயில்களும் சுற்றுச் சுவர்களும் கட்டப்பட்டுள்ளன. Carbon dating முறையில் கோவிலுக்கு ஏழாயிரம் வயது இருக்கலாமெனக் கருதுகிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். அத்தனை ஆண்டு காலப் பழமையானதா என்பது கேள்விக் குறியே. பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும், சத்ரபதி சிவாஜியின் தம்பியுமான வெங்கோஜி ராவ் போன்ஸ்லே, திராவிடக் கட்டிடக் கலையைப் பின்பற்றி எழுப்பிய கோவில் சாலைக்கு மறுபக்கமிருக்கும் காடு மல்லேஸ்வரர் ஆலயம். நந்தி தீர்த்த கோவிலும் இந்த சமயத்திலேயே அவரால் கட்டப்பட்டு பூமிக்குள் சென்றிருக்க வேண்டும் என்பதும் ஒரு அனுமானமாக இருந்து வருகிறது.

பன்னெடுங்காலமாய் புதைந்து கிடந்திருந்தாலும் அழகு குன்றாமல் பொலிவுடன் திகழுகிறது. பழமை வாய்ந்த உறுதியான கற்தூண்கள் தாங்கி நிற்கும் அழகான முற்றம். நடுவே படிக்கட்டுகளுடன் கல்யாணி தீர்த்தம். வழவழப்பான கருங்கல்லில் பொன் வண்ணத்தில் தீட்டப்பட்ட கண்களோடு வடிவாகச் செதுக்கப்பட்ட நந்தி. நந்திக்குச் சற்றே தாழ்ந்த நிலையில் அதே பளபளப்பான கருங்கல்லில் சிவலிங்கம். பார்ப்பவரை எல்லாம் வியப்பில் ஆழ்த்தும் கட்டமைப்புடன், நந்தியின் வாயிலிருந்து தெள்ளிய நீர் தொடர்ந்து சிவனில் மேல் விழுந்து அபிஷேகம் ஆகிக் கொண்டிருக்கிறது. தற்போது செம்பினால் ஆன பெரிய கொள்கலனில் இந்த நீர் விழுந்து, கீழுள்ள துளை வழியாக சிவனை அபிஷேகம் செய்வது போல் அமைத்துள்ளார்கள். இருபத்து நான்கு மணிநேர அபிஷேகத்தில் உளம் குளிந்து மக்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் சிவ பெருமான்!

சிவன் மேல் தொடர்ந்து விழுகின்ற நீர் படிக்கட்டுகள் வழியாகச் சென்று முற்றத்துக் குளத்தில் சேகரமாகிறது. குளத்தின் நடுப்பாகத்தில் 15 அடி ஆழம் கொண்ட நீர்ச்சுழல் ஒன்றும் உள்ளது. எங்கிருந்து நீர் வருகிறது, எவ்வண்ணம் அது நந்தியின் வாய்வழி சிவலிங்கத்தின் மேல் பொழிகிறது, எப்படிச் சுழல் உண்டாயிற்று, சுழல் வழியாக நீர் எங்கே செல்கிறது, வடிவமைத்த திறன்மிகு சிற்பி யார் என்பன யாவும் இன்றளவிலும் புரியாத புதிராகவே உள்ளது.

குளத்தில் ஆமைகள் பல நீந்தி விளையாடுகின்றன. பக்தர்கள் தம் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி நாணயங்களைக் குளத்தில் வீசிச் செல்வதும் நடக்கிறது. வேண்டுகிற பக்தர்களுக்கு அபிஷேக நீர் பாட்டில்களில் சேகரித்துத் தரப்படுகிறது. இப்புனித நீரை அருந்துவதாலும் நோய் வாயப்பட்டவர் மேல் தெளிப்பதாலும் தீராத நோய்கள் தீருமென நம்பி நம்பி மக்கள் எடுத்துச் செல்கிறார்கள். தரிசனம் முடித்து விட்டு அமைதியான அச்சூழலை இரசித்தபடி திரும்பிச் செல்ல மனமில்லாமல் படிக்கட்டுகளில் பக்தர்கள் அமர்ந்து விடுகிறார்கள். குடும்பத்துடன், நண்பர்களுடன் வந்து பேசி மகிழ்ந்திருக்கிறார்கள்.

கோவிலுக்கு சற்று தொலைவிலும் மேல் மட்டத்திலும் இருக்கும் சாங்கி ஏரியிலிருந்து நீர் வருகிறதோ எனும் அனுமானம் உறுதி செய்யப்படவில்லை. தொன்மையும் பாரம்பரியமும் வாய்ந்த கோவில் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 

சிவனைப் பார்த்து அமர்ந்திருக்கும் நந்தியின் காதில் தங்கள் வேண்டுதலைச் சொல்லிச் செல்கிறார்கள். கோவிலுக்குள் இருக்கும் இரு நந்திகளோடு, கோவிலின் வாயிலில் மற்றும் சுற்றுச் சுவர்களில் எங்கெங்கும் நந்தி தேவரே. 

இங்கு மகா சிவராத்திரி மிகச் சிறப்பாக பாலபிஷேகத்துடன் நடைபெறுகிறது. பெங்களூர் வருகிறவர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்று. 


கோவில் நேரம்: காலை 7:30 மணி முதல் மதியம் 12 மணி வரை.

மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை.

– ராமலக்ஷ்மி

சமாதியை ஆக்கிரமித்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் !

 

தஞ்சை மாவட்டம் கருந்தட்டான்குடி அருகேயுள்ள பூக்குளம் பகுதியில் ஓம் ஸ்ரீ பஞ்சநத பாவாவின், நிர்விகல்ப சமாதி அமைந்துள்ளது.

பழமை வாய்ந்த அந்த அதிர்ஷ்டமான நிர்விகல்ப சமாதிக்குசென்று வழிபட்டு ஏதேனும் காரியம் நிறைவேற வேண்டிக் கொண்டால் அந்த காரியம் உடனே நிறைவேறுவதாக பக்தர்களால் கூறப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, வியாழக்கிழமை, சனிக்கிழமை போன்ற நாட்களில் அதிகமானோர் வழிபாடு செய்ய அங்கு செல்கின்றனர்.

சமாதி கோவிலின் வெளிப்பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் சேகரிக்கும் மையம் இயங்கி வருகிறது, அந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் அனைத்து பகுதியையும் ஆக்கிரமித்து எப்போதுமே இடையூறு அளிக்கும் வகையில் வெகுநாட்களாக செயல்பட்டு வந்துள்ளதாக பக்தர்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

இடையூறு அளித்து வருபவர்களை பக்தர்கள் எவரேனும் தட்டிக் கேட்டால் அவர்களை ஊழியர்கள் எங்கேயோ இருந்து இங்கு வந்து எங்களை அதிகாரம் செய்யுறயா? என்று மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி வசை பாடுவார்களாம் .

இந்த நிலையில் இன்று (25-02-2016) சமாதி கோவிலுக்குள் எவரும் செல்ல முடியாதபடி சமாதியை ஆக்கிரமித்து விட்டனராம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர். இடையூறு அளித்ததை தட்டிக் கேட்ட பக்தர்களை அங்கிருந்த வாணிபக் கழக அதிகாரிகள் உட்பட ஊழியர்கள அனைவரும் ஒன்று சேர்ந்து வழக்கம்போல் வசைபாடி விரட்டியடித்தனராம்.

மேலும் சமாதியை ஆக்கிரமித்தது தொடர்பாக எங்கு வேண்டுமானாலும் போய் புகார் செய். எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என வாணிபக் கழக அதிகாரி கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

பேட்மேன்- சூப்பர் மேன் இணையும் பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்

ஹாலிவுட் படங்களின் சூப்பர் நேச்சுரல் கேரக்டர்களான பேட்மேனும், சூப்பர் மேனும் தனித்தனியே கலக்கி வந்த நிலையில இப்போ பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் என்ற படத்தின் மூலம இணைஞ்சு கலக்க வருகிறாங்க . Ben Affleck,Henry Cavill,Amy Adams நடிப்பில Zack Snyder இயக்கி இருக்கும் இந்த படம் வருகிற மார்ச் 19ந் தேதி திரைக்கு வர உள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருநங்கை ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சேலத்தில் உள்ள தாய்மடி அறக்கட்டளை, ஆதரவற்றோர் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கான அறக்கட்டளையை நடத்தி வருபவர் திருநங்கை ஸ்ரீதேவி.

சேலம் மாவட்டம், காளிக்கவுண்டம்பட்டியில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவரின் தந்தை சிறுவயதிலேயே உயரிழந்தார். உணவுக்குக் கூட வழியில்லாத நிலையில், தந்தை வாங்கிய கடன் கூடுதல் சுமையாக்கியுள்ளது. இந்த சூழலில் 12-ம் வகுப்பு படிக்கும் நேரத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ஸ்ரீதேவி.

இந்த செயல் அப்போது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், தற்போது அனைத்துக் கடனையும் அடைத்து, மற்றவர்களுக்கு சேவை செய்து வருவது தனக்கு பெருமையாக உள்ளதாக அவரது தாய் முத்தம்மாள் தெரிவிக்கிறார் .

தமிழ் தேசியத்தின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீதேவி, நாம் தமிழர் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது அந்த கட்சியின் சென்னை ஆர்.கே நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தான் போட்டியிட இருப்பது திருநங்கைகளுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்கான முதற்படி என்று ஸ்ரீதேவி கூறுகிறார் .

மக்கள் தனக்கு வாய்ப்பு வழங்கினால் மக்களுக்காவும், திருநங்கைகளுக்காகவும் பாடுபடுவேன் என்றும் தன்னுடைய வெற்றி, திருநங்கை சமூகத்தின் வெற்றியாகவே கருதப்படும் என்றும் ஸ்ரீதேவி தெரிவிக்கிறார்.

 

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன தலைவர் பதவியில் இருந்து விஜய் மல்லையா விலகல்

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன தலைவர் பதவியில் இருந்து விஜய் மல்லையா விலகினார். நிறுவனர் என்ற வகையில் நிர்வாகக் குழுவில் மல்லையா தொடர்ந்து இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் கட்சித் தொண்டர்களை அடிக்க முயன்ற விஜயகாந்த்தால் பெரும் பரபரப்பு

தஞ்சாவூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தின் போது, முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிய சம்பவம் குறித்து விஜயகாந்த் உட்பட தேமுதிகவினர் மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்தது.இந்த வழக்கு விசாரணைக்காக இன்று தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தார்.

அப்போது, அங்கே ஏராளமான தேமுதிக தொண்டர்கள் திரண்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜயகாந்த்தை தொண்டர்கள் நெருக்கியதால், அவர் தன் கட்சித் தொண்டர்களையே அடிக்க சென்றார். அருகில் இருந்த கட்சியின் முக்கியத் தலைவர்களால் விஜயகாந்தின் அடியில் இருந்து தொண்டர்கள் தப்பினர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தலில் எந்த கட்சி ஆதரவு நடிகர் பிரபு விளக்கம்

தமிழக செய்தித்துறை விளம்பரங்களில் நடித்ததால், அதிமுகவில் சேருவார் என தகவல் வெளியான நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்ய போவதில்லை என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.

 

ஈரோட்டில் நகை கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, தனது தந்தையின் அரசியல் வாழ்க்கையை பார்த்த பின் அரசியலில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும் பிரபு விளக்கம் அளித்துள்ளார். அனைத்து கட்சியினரும் தனக்கு வேண்டியர்கள் என்றும், தான் எந்த அணிக்கும் பிரசாரம் செய்யப் போவதில்லை என்றும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: தமிழக முதல்வர்

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்

“ரயில்வே பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் புதிய ரயில்களோ, ரயில் பாதைகளோ அறிவிக்கப்படவில்லை என்றும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற தவறி விட்டது என்றும் டெல்லி – சென்னை இடையிலான சரக்கு ரயில், தூத்துக்குடி வரை விரிவுபடுத்தப்பட்ட விஜயவாடா சரக்கு முனையம் வரவேற்க கூடியது என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

 

வாய்மையே வெல்லும்: ஸ்மிருதி இரானியின் பேச்சுக்கு மோடி டிவிட்

புது தில்லி:

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பேச்சைக் கேட்குமாறு வீடியோ சுட்டியை தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் மோடி, அதற்கு சத்யமேவ ஜயதே- வாய்மையே வெல்லும் என்று ஒற்றை வரி கருத்து போட்டுள்ளார்.

தில்லி ஜவாஹர்லால் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரணியின் போது மாணவர்கள் கோஷமிட்டது, ஹைதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் வெமூலா தற்கொலை விவகாரம் ஆகியவற்றில் அரசியல் எவ்வாறு விளையாடுகிறது என்பதை ஆணித்தரமாக வெளியிட்டு நாடாளுமன்றத்தில் பேசினார் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி. அவரது பேச்சு இணையத்தில் யூடிப்பில் லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு, பாராட்டைப் பெற்றுள்ளது.

 

மத்திய ரயில்வே பட்ஜெட் 2016-2017: முக்கிய அம்சங்கள்!

புது தில்லி:
இன்று மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவால் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்புகள் சில இடம்பெற்றுள்ளன.

மூத்த குடிமக்களுக்கு லோயர் பர்த் – கீழ்படுக்கை வசதி 50 சதவீதம் அதிகரிப்பு, லோயர் பெர்த் முன் பதிவில் பெண்களுக்கு முன்னுரிமை, இணையதள சேவை அதிகரிப்பு, ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி அதிகரிப்பது, ரயில்களில் எப்.எம்., பண்பலை ரேடியோ வசதி உள்ளிட்டவை மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்புகள்.

சிசிடிவி கேமரா வசதியை அதிகரிப்பதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு.

தட்கல் முன்பதிவில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு.

நீண்ட தூர ரயில்களில் முன்பதிவு செய்யாத 2 முதல் 4 பெட்டிகள் இணைப்பு.

ரயில் நிலையங்களில் தேவையானவர்களுக்கு வெந்நீர் வழங்கல்!

ரயில் நிலைய ஓய்வறைகளை ஆன்லைனிலேயே புக் செய்யும் வசதி

முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டை ரத்து செய்ய உதவி எண் 139 அறிமுகம்

பல்வேறு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ரயில்கள் அறிமுகம்

முன்பதிவு அறவே இல்லாத ரயில்கள் சாமான்ய மக்களுக்காக இயக்கப்படுதல்.

ரயில் பயணிகளின் பொழுது போக்குக்காக பெட்டிகளில் பண்பலை எப்.எம். வானொலி வசதி

பயணச்சீட்டு முன்பதிவின் போது பயணக் காப்பீட்டுக்கான வாய்ப்பு

சமூக இணையதளங்களின் மூலம் புகார் பெற்று குறைகளை தீர்க்க முக்கியத்துவம்

நெரிசல் மிகுந்த பாதைகளில் இரட்டை அடுக்கு ரயில்

முன்பதிவு செய்யாத பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் செய்ய வசதி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்களில் 17 ஆயிரம் பயோ-டாய்லெட்கள்

பயணிகளின் வீட்டுக்கே சரக்குகளைக் கொண்டு சேர்க்கும் இ-வணிக முறை

சென்னை – தில்லி இடையே புதிய சரக்கு ரயில் பாதை

பயணிகள் ரயில் கட்டணம் மூலம் ரூ.51,012 கோடி திரட்ட இலக்கு

திருப்பதி, வாராணசி, நாகப்பட்டினம், அஜ்மீர், கயா, மதுரா உள்ளிட்ட புனித தலங்களில் ரயில் நிலையங்கள் அழகுபடுத்தல்

எஸ்எம்எஸ் அனுப்பப் படுவதன் மூலம் ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தும் வசதி

முக்கிய ரயில் நிலையங்களில் பார் கோடு பயணச் சீட்டுகள் வழங்கப்படுதல்

சேட்டிலைட் மூலம் ரயில்வே திட்டங்கள் கண்காணிப்பு

வெளிநாட்டு டெபிட், கிரடிட் கார்டுகள் மூலம் முன்பதிவு

ரயில்வே நிலையங்களில் மருந்தகம் அமைக்கப்படுதல்

குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களுக்கு பால் பொருட்கள் வழங்கப்படுதல்

2020 ல் ஆள் இல்லா ரயில்வே கிராசிங்குகள் முற்றிலும் ஒழிக்கப்படுதல்

முன்பதிவு இல்லாத அதிவேக ரயில் இயக்கப்படுதல்

அனைத்து வகுப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு

முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களி்ல் கண்காணிப்பு காமிரா

தற்போது 100 ரயில்வே ஸ்டேஷனில் வைஃபை வசதி

நிமிடத்திற்கு 7 ஆயிரத்து 200 டிக்கெட்டுகள் ஆன்லைனில் விநியோகம்

வெளிப்படையான நிர்வாகத்திற்கு சமூக வலை தள பயன்பாடு

2 ஆண்டுகளில் 400 ரயில்வே ஸ்டேஷனில் வைஃபை வசதி

475 ரயில்வே ஸ்டேஷன்களில் 17 ஆயிரம் பயோ டாய்லெட்

வட கிழக்கு மாநிலத்திற்கு முக்கியத்துவம்

2800 கி.மீட்டர் ரயில்வே பாதை அமைக்க இலக்கு

2,500 கி.மீட்டர் அகல ரயில்பாதை அமைக்க இலக்கு

ரயில்வே பட்ஜெட் மதிப்பீடு 1. 21 லட்சம் கோடி

ரயில்வேயில் பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்

ரூ. 40 ஆயிரம் கோடி செலவில் 2 ரயில்வே தொழிற்சாலைகள் துவக்கப்படுதல்

வரும் நிதி ஆண்டில் 10 சதவீதம் வருவாய் பெருக்க திட்டம்

17ஆயிரம் பயோ கழிவறைகள் அமைக்கப்படும்

400 ரயில் நிலையங்கள் அரசு- தனியார் கூட்டு முயற்சியால் மேம்படுத்த திட்டம்

ரயில்வே கேட்டரிங் பணியில் பெண்களுக்கு 33 சதவீத வாய்ப்பு

– உள்ளிட்ட அறிவிப்புகளை இன்றைய பட்ஜெட் உரையில் தெரிவித்த சுரேஷ் பிரபு, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 139 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.