Home Blog Page 5798

அம்மா கைப்பேசி திட்டம் அறிமுகம்

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 700 அரசு அலுவலர் குடியிருப்புக்களையும் முதல்வர் வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

258.88 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டடங்களை அவர் திறந்து வைத்தார்.

அரியலூர்-மேலராமநல்லூரில் உயர்மட்ட பாலம், 9 தடுப்பணைகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார். மாநில நீர் ஆதார மேலாண்மை முகமை அலுவலகக் கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அம்மா கைப்பேசி திட்டத்தையும் அவர் துவங்கி வைத்தார். கோவை மாநகர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு புறநகருக்கு அதிமுக பிரச்சார வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சார வாகனங்களுக்கான சாவிகளை அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

 

கிராம ஆண்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை: மனித உரிமைகள் குழுவினர் எதிர்ப்பு

ஈரானில் உள்ள சிஸ்டான் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் போதைப் பொருள் கடத்தியதாக, அவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு  மனித உரிமைகள் குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து பேசிய மனித உரிமைகள் குழுவினர், வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாததால், வருவாய் ஈட்டுவதற்கு வேறு இல்லாததால் அவர்கள் போதை கடத்தியதாக சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

இந்தி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் 10 ஆயிரம் பரிசு

மத்திய அரசு ஊழியர்கள் பலருக்கு இந்தி பேச தெரிந்திருந்தாலும், அவர்கள் பணிபுரிவதில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். இந்த குறைபாட்டை போக்குவதற்காக மத்திய அரசு நடத்தும் கடினமானது என கூறப்படும் பரன்கட் எனப்படும் இந்திய இலக்கிய புலமை படிப்பை படிக்க வேண்டும். 160 மணிநேரம் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பிற்கு பிறகு நடத்தப்படும் தேர்வில் 70 சதவீதம் மதிப்பெண் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 பரிசும், 60-69
சதவீதம் மதிப்பெண் பெறும் ஊழியர்களுக்கு ரூ.8000 பரிசும், 55-59 சதவீதம் மதிப்பெண் பெறும் ரூ.6000 பரிசும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் அனுப்பி உள்ளது.

ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதிய தேசிய திறனறிவு தகுதித் தேர்வு

தமிழகம் முழுவதும் நடைபெறும் பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய திறனறிவு தகுதித் தேர்வை ஒன்றரை லட்சம் பேர் எழுத உள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்க கூடிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனப் பள்ளி மாணவர்களுக்கு, தேசிய திறனறிவு தேர்வு மாநில அரசுகள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது.

இதற்கான தகுதித் தேர்வை, தமிழகம் முழுவதும் 8ஆம் வகுப்பு படிக்க கூடிய ஒன்றரை லட்சம் மாணவர்கள் இன்று எழுதுகின்றனர். இந்தத்தேர்வு மூலம் 6000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதந்தோறும் 500 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த தேசிய திறனறிவு தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 525 தேர்வு மையங்களை தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.

கம்பம் அருகே காட்டுத் தீ

தேனி மாவட்டம் கம்பம் அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மேகமலை வனஉயிரியல் சரணாலயம், உத்தமபாளையம் வனபகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த காட்டுத் தீயில் மருத்துவ குணங்கள் உள்ள தாவரம் மற்றும் அரிய வகை தரைவாழ் உயிரினங்கள், பறவைகள் உயிரிழந்து இருக்கக்கூடும் என வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முட்டை விலை தொடர் சரிவு

நாமக்கல் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ.18 காசு சரிந்து ரூ.3.34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை சரிவை அடுத்து முட்டை விலை 3 நாட்களில் ரூ.38 காசுகள் குறைந்துள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி மீது முட்டைவீச்சு

கான்பூரில் சுப்ரமணியன் சுவாமி சென்ற கார்மீது போராட்டக்காரர்கள் முட்டை மற்றும் தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர்.

கான்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சுப்ரமணியன் சுவாமி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த போராட்டகாரர்கள் திடீரென அவர் சென்ற கார் மீது தக்காளி மற்றும் முட்டைகளை வீசினர்.

அவருக்கெதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், கருப்பு கொடியை ஏந்தி கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோஷமிட்டனர்.

இது தேவராஜ ரகசியம்!

“ஏகாதசி உபவாசம் நமக்கு மட்டும் தானா? இல்லே வரதனுக்கும் தானா?”

இது தேவராஜ ரகசியம்! (வரதராஜருக்கு, தேவராஜன் என்று திருநாமம் உண்டு)

சொன்னவர்; டி.கே.அனந்தநாராயணன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவாள் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தார்கள். ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் சீமா பட்டாசாரியாரை அழைத்து வரும்படி ஆக்ஞையிட்டார்கள்.

அவரும் வந்து வந்தனம் செய்தார்.

“இன்னிக்கு என்ன திதி?”

பட்டர் மெதுவாக “ஏகாதசி” என்றார்.

“உபவாசம் நமக்கு மட்டும் தானா? இல்லே வரதனுக்கும் தானா?”

பட்டர் திகைத்துப் போய் நின்றார்.

“பெருமாளுக்கு இன்னிக்கு நைவேத்யம் ஏன் செய்யல்லே?”

அதிர்ச்சியடைந்த பட்டர் நாக்குழற “தெரியல்லே.. விசாரிச்சிண்டு வரேன்…” என்று கலவரத்துடன் கோயிலுக்குத் திரும்பிச் சென்றார்.

விசாரணையில் உள்கட்டில் ஏதோ தவறு நடந்துள்ளது என்ற உண்மை தெரியவந்தது. அதைச் சரிப்படுத்தி, தக்க பிராயச்சித்தம் செய்து, பெருமாளுக்கு திருவமுது படைத்து, பிரஸாதத்தை ஸ்ரீபெரியவாளிடம் கொண்டுவந்து சமர்ப்பித்தார் பட்டர்.

வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியம் நடக்கவில்லை என்பது, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி அவர்கள் கவலைப் படுவானேன்?/

தேவரகசியம் என்கிறார்களே? அது இதுதானோ? இல்லை, இது தேவராஜ ரகசியம்! (வரதராஜருக்கு, தேவராஜன் என்று திருநாமம் உண்டு)

இஷ்ரத் ஜஹான், அப்சல் குரு குறித்த ப.சிதம்பரம், ஜி.கே. பிள்ளையின் மாறுபட்ட கருத்துகள்: அவையில் அமளி

புது தில்லி:
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு குறித்து முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த பேட்டி, குஜராத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் குறித்து முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையும் தெரிவித்த கருத்து ஆகியவை தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று முன்தினம் அளித்த பேட்டி ஒன்றில், “கடந்த 2001-ல் நாடாளுமன்ற தாக்குதல் சதியில் அப்சல் குருவுக்கு பங்கு இருந்ததா என்ற பலத்த சந்தேகம் உள்ளது” என்றார்.

இதுபோல் முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை அளித்த பேட்டியில், “இஷ்ரத் ஜகான் வழக்கில் காங்கிரஸ் கட்சி தலையிட்டது. இவ்வழக்கில் 2 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2-வது பிரமாண பத்திரத்தில் முரண்பாடுகள் இருந்தது. இதற்கு அரசியல் தலையீடே காரணம்” என்றார்.

மேற்கண்ட இந்த இருவரின் கருத்துகளால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாக, பாஜக உறுப்பினர் அனுராக் தாக்கூர் இந்த விவகாரத்தை எழுப்பினார்.

“குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை அரசியல் ரீதியாக பழி தீர்க்கவே முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயன்றுள்ளது. இஷ்ரத் ஜஹான் விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை திருத்தியது யார் என்பதை நாடு அறிந்துகொள்ள விரும்புகிறது” என்றார்.

இதற்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்நிலையில் மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுந்து, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் குறித்து அனுராக் தாக்கூர் தெரிவித்த அவதூறான கருத்தை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா கூறிய கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது” என்றார். அவருக்கு தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி எழுந்து, “அனுராக் தாக்கூர் பெயரை குறிப்பிட்டு கார்கே தனது கருத்தை தெரிவிக்க தடையில்லை என்றால், அனுராக் தாக்கூருக்கும் அவையில் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

அனுராக் தாக்கூர் எழுந்து, ப.சிதம்பரம், ஜி.கே.பிள்ளை கருத்து தொடர்பாக பேசத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பாஜக உறுப்பினர்கள், “இந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்கு அனுமதி கேட்டு ஏற்கெனவே நோட்டீஸ் கொடுத்துள்ளோம்” என்றனர்.

நிஜ வாழ்க்கையில் பிச்சை எடுத்த விஜய் ஆண்டனி!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தை தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க, சட்னா டைட்டஸ் நாயகியாக நடித்துள்ளார்.

கே ஆர் பிலிம்ஸ் சரவணன் மற்றும் கார்த்திக் இருவரும் பிச்சைக்காரன் படத்தின் மொத்த ஏரியாவையும் வாங்கி எல்லா ஏரியாக்களையும் விற்று முடித்து விட்டனர். கூடவே ஸ்கைலார்க் பிலிம்ஸ் ஸ்ரீதர் வியாபாரத்தில் கை கோர்த்துள்ளார்.

இப்படத்துக்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படத்தின் முன்னோட்டததையும் நெஞ்சோரத்தில் பாடலையும் திரையிட்டனர்.

கே ஆர் பிலிம்ஸ் சரவணன் பேசும்போது ”இது நான் வாங்கி வெளியிடும் முதல் படம். இது முழுக்க முழுக்க விஜய் ஆண்டனி பாணி கமர்ஷியல் படம். நான், சலீம் படங்களில் காதலையும் ஆக்ஷனையும் விஜய் ஆண்டனி சிறப்பாக கையாண்டு இருந்தார். இந்தியா பாகிஸ்தான் காமெடி. இந்தப் படத்தில் ஆக்ஷன், காதல், காமெடி எல்லாம் இருக்கிறது. அது இயக்குனர் சசியின் பாணியில் மெருகேறி சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

இயக்குனர் சசி பேசும்போது “படத்தைப் பொறுத்தவரை எடுக்க நினைத்ததை சரியாக எடுத்தேன். எல்லோருக்கும் பிடித்து இருந்தது. எனினும் அண்மையில் எனக்கு கொஞ்சம் பதட்டம். ஏனென்றால் எனது படத்தை நம்பி விலை கொடுத்து வாங்கிய கே ஆர் பிலிம்ஸ் மற்றும் ஸ்கை லார்க நண்பர்கள் படம் பார்க்க இருந்த நாள் அது. படத்தைப் பார்த்தார்கள். மறுநாள் அவர்கள் ஆபிசுக்கு போனேன்.

என்னை கார்த்திக் மிகுந்த உற்சாகமாக வரவேற்றார். முன்னை விடவும் உற்சாக வரவேற்பு. அப்போதுதான் எனக்கு நிம்மதி. படத்தை வாங்கிய எல்லாருக்கும் பிடித்தது போலவே டிக்கட் வங்கி பார்க்க வரும் எல்லோருக்கும் படம் பிடிக்கும்.

இது பிச்சைக்காரர்களைப் பற்றிய படம் அல்ல. சூழல் காரணமாக பிச்சைக்காரன் ஆகும் ஒரு பணக்காரனைப் பற்றிய கதை. இதற்கு பிச்சைக்காரன் என்பதை விட பொருத்தமான டைட்டிலே இல்லை. சரவணன் வேறு யாராலும் முடியாத அளவுக்கு மிகப் பிரம்மாதமாக இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போகிறார்” என்றார்.

விஜய் ஆண்டனி பேசும்போது “என்னை இசை அமைப்பாளரா அறிமுகப்படுத்தியதே சசி சார்தான், டிஷ்யூம் படத்துல! அவரோட படம் பண்ணனும்னு என் ஆசையை தெரிவித்தேன். அவர் சொன்ன கதை இது. கேட்டு முடித்ததும் அடக்க முடியாமல் குமுறி குமுறி அழுது விட்டேன். இந்தப் படத்தை தயாரித்து நடித்தர்ககப் பெருமைப் படுகிறேன்.

இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன். என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரதத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள். சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம். அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டால் ரொம்ப கொடுமையாக இருந்தது.

மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்சை எடுக்க வந்த பெண்மணி, பிச்சை எடுத்து மகளை படிக்க வைக்கும் அப்பா; அந்தக் குடும்பத்துக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார். இப்படி பல நிகழ்வுகள்…நாம் அவர்களை மிக சுலபமாக கைகால் இருக்கே உழைக்க வேண்டியதுதானே என்று திட்டுகிறோம் அல்லது புறக்கணித்து விட்டுப் போகிறோம், ஆனால் இன்னொரு வகையில் வாழ்வில் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான். பிச்சையாக என்ன கேட்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது. நான் வாய்ப்புப் பிச்சை எடுத்து இருக்கிறேன். இப்போதும் பைனான்ஸ் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தப் படத்தை வாங்கிய சரவணனிடம் எல்லோரும் ‘என்ன இது.. முதன் முதலாபட விநியோகம் பண்றீங்க. பிச்சைக்காரன் என்ற படத்தை வாங்கறீங்க?’ன்னு கேட்டு இருப்பாங்க. ஆனா அவர் படத்தை நம்பி வாங்கினர். என் மனைவி பாத்திமா தரும் நம்பிக்கை அவங்க இல்லன்னா நான் இல்ல. இது எல்லோருக்கும் பிடிக்கிற படமா வந்திருக்கு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றார்.

இப்படம் மார்ச் நான்காம் தேதி உலகம் முழுக்க சுமார் 500 திரைகளில் வெளியாகிறது.